துர்கேஸ்வரி தன் சீனக் கணவனைக் காதலித்துக் கொண்டிருந்த போது மிகவும் தான் சந்தோஷமாய் இருந்தாள். மென்மையான அவனின் குணமும், பிறரை, முக்கியமாய் பெண்களை மதிக்கும் அவனது தன்மையும் அவளை மிகவும் கவர்ந்தன. அம்மாவை அலட்சியமாய் நடத்திய அப்பாவைப் பார்த்தே வளர்ந்தவளை, அவனது சுபாவம் வீழ்த்தியதில் ஆச்சரியம் இல்லை. அவனுடன் சாங்கி பீச், கேத்தே திரையரங்கம், கோப்பிக் கடை என்று சுற்றிய போது, பல தலைகள் இவர்களை நோக்கி திரும்பின. பொதுவில் இந்திய ஆண்களுடன் மற்ற இனப் […]
தமயந்தியம்மாள் இல்லம் நான்கு தலைமுறையினைப் பார்த்துவிட்டது. இல்லம் என்றால் முழு வீடும் இல்லை, பின்னால் இருக்கும் ஓடு வேய்ந்த சமையல் அறையும், அதை ஒட்டியிருக்கும் தளம் போட்ட பூஜை அறையும் மட்டும். அவை இரண்டும் தான் தியாகராஜனின் தாத்தா காலத்தில் இருந்தன. இப்போதைய சாப்பிடும் அறை அப்போது கூடமாக இருந்தது. தியாகராஜனின் அப்பா தன் காலத்தில் அதனுடன் புது கூடம் ஒன்றை இணைக்க, முன்னது கூடம் என்ற பட்டத்தை இழந்து அறையாகிப் போனது. அந்த அறையில் […]
அந்த பெரியவர் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். பாலர் பள்ளிக்கு வெளியே இருந்த இருக்கைகளையும் அதற்கு கீழேயும், சற்று தள்ளி சுவரின் மூலையில் இருந்த பச்சை நிற குப்பைத் தொட்டிக்கு உள்ளேயும் பார்த்த படி இருந்தார். எப்படியும் எழுபது வயதிற்கு மேல் இருக்கும். தலைமுடி கருப்பு நிறத்திலிருந்தாலும் தோல் சுருக்கங்களும், களைப்படைந்த கண்களும் வயதை தெள்ளெனக் காட்டின. காக்கி கால் சட்டையும் ‘அன்பு நிரத்தரமானது’ என்று பொருள்தரும் வார்த்தைகள் கொண்ட வெளிர் நீல […]
ஹேமா அப்பா வீட்டிற்கு ஒரு நாய்குட்டியைக் கொண்டு வந்திருப்பதாக அம்மா ஃபோனில் சொன்னாள். அதிலும் வேலையற்று சுற்றிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்கு சொந்தமானதை. இதைச் சொல்லும் போது அவள் குரலில் எந்த ஒரு மிகைப்பட்ட உணர்ச்சியும் இல்லை. பால் வாங்க கடைக்குச் செல்கிறேன் என்பது போல் மிக சாதாரணமாய்ச் சொன்னாள். அவளின் குணமே அப்படிதான். அப்பா மேற்கே போகிறேன் என்றால் சரி என்பாள். இல்லையில்லை தெற்கே போகிறேன், அந்தப் பக்கம் தான் சூரியன் உதிக்கிறது என்றால் […]