கோழியும் கழுகும்…

வறுத்தெடுக்க  மனிதன் கொத்திக் குடிக்கப்  பாம்பு இயற்கையும்  சிதைக்க.... உறக்கம் விற்று திசையோடு தவமிருக்கிறது காக்கும் அடைக்காய். ஆகாயக் காவலன் கண்களில் மிஞ்சிப் பொரித்த ஒற்றைக் குஞ்சை உறிஞ்சும் மரணம். அருக்கனையே மறைக்கும் அதிகாரம் வானில் அடங்கினால் அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு. இறகு…

பகிரண்ட வெளியில்…

வந்து கரையும் ஒற்றை அலைகூட உண்மையில்லை சந்திப்புக்கான சங்கதிகளை வெவ்வேறாகச் சொல்லிப் போயின பொய்யின் பின்குரலாய். அறிவியல் எல்லையில் மானுட உலகம் உயிரற்றதும் உயிருள்ளதுமான கடலுலகில் பொய்கள் உலவாதென யாரோ சொன்னதாய் ஞாபகம். ஆழக் கடலில் காற்று காறித் துப்புகிறதாம் வாசனைத்…

நேர்மையின் காத்திருப்பு

மூட்டைப்பூச்சியின் இருப்பிடமென ஒதுக்கப்பட்டிருந்தாலும் கண்களுக்குள் அலார மிரட்டலோடு பழைய கதிரையொன்று. சுருங்கிய முக ரேகைக்குள் நேர்மை நிரம்பிய புன்னகை அனுபவங்கள் அழுத்திய ஆட்சி அந்தரத்து ஆரவாரமாய் தாங்கிய நினைவுகள். நேற்றைய முடிவுகளே நாளைய தீர்மானமாய் வைக்கோல் நுழைந்து உறிஞ்சும் புழுவென வழியும்…

சுவர்களின் குறிப்புகளில்…

காடு நிரப்பும் நகரமென சூரிய எச்சில் படாத முகட்டோடு நாகரீகக் குறிப்பெடுக்கும் பென்னாம் பெரிய வீட்டுக்குள் தூண்கள் அளவு கனத்த கதைகளோடு வாய்வு நிறைத்த வயிறும் பசிக்கும் மனதோடுமாய் ஞாபகத் திணறலோடு மூப்பின் உதிர்வொன்று. ஜாடைகள்  அப்பிய முகங்களோடு தலைமுறை காவும்…

உருமாறும் கனவுகள்…

நிலவுக்குள் ஒள‌வைப்பாட்டி ந‌ம்பிய‌ குழந்தையாய் ‌ க‌வள‌‌ங்க‌ள் நிர‌ப்பப்படுகிறது நாள்காட்டியில் தொட‌ர்ந்த‌ இல‌க்க‌ங்க‌ள். க‌ருத்த‌ரித்துப் பின் பின்ன‌ல் சட்டைக‌ளோடு சுற்றும் ராட்டின‌ப் பூக்க‌ள் எம் தொட்டிலில் அடுத்த வீட்டுக் குழ‌ந்தை நான் வைத்த பெயரோடு. ச‌ரியில்லாத சுழ‌ற்சியால் த‌டுமாறும் மாத‌விடாய் உதிர‌ப்போக்கு…

சாகச விரல்கள்

விரல்களின் வேகத்தில் சுண்டலின் விசையில் நம்பிக்கைகள் கைகள் சுழற்றும் சோளிகளின் சாகசங்களை நம்பி. முழங்கையை மடக்கி விரித்து குலுக்கிப் போடும் சோளியில் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடப்பதாகிறது கனவு வாழ்வு. மீண்டும் மீண்டும் உருளும் சோளிக்குள் முழித்த பார்வைகளின் முணுமுணுக்கும் வாக்குகள் முத்தமிடும்…

உலரும் பருக்கைகள்…

கத்திரிவெயிலிலும் சிரிக்க மறப்பதில்லை பொய்க்காத பூக்கள் மாறாத வண்ணங்களோடு.  ஒற்றை விடயம் மாறுபட்ட பதில்கள் ஒருவருக்கொருவராய் மாறித்தெறிக்கும் அடர் வார்த்தை.  பிதிர்க்கடனெனத் தெளிக்கும் எள்ளும் தண்ணீரும் சிதறும் வட்ட வட்ட திரவத்துளிகக்குள் சிரார்த்த ஆன்மாக்கள். சம்பிரதாயங்களுக்குள்ளும் சமூகச் சடங்குகளுக்குள்ளும் குறுக்கு மரச்…

அடங்கிய எழுத்துக்கள்

உரத்துக் குரலிட்ட பேனாக்களை வானரங்கள் உடைத்து மையை உறிஞ்ச மௌனித்த செய்திகள். யாருமில்லாப் பொழுதில் அலைகள் சப்பித் துப்பிய சிப்பிகள் கீறிப்போயின கவிதையின் தொங்கல்கள். மிஞ்சிய காகிதத்தில் தொடக்கங்கள் தொங்கல்களோடு இணைய இனி ஒருக்காலும் வரப்போவதில்லை அந்தப் பேனாக்கள் செய்திகளிலும்கூட!!! ஹேமா(சுவிஸ்)…

ஈழம் கவிதைகள் (மே 18)

  1)  மே பதினெட்டோடு போகட்டும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ புதைத்துவிட்டால் உயிர்க்காது என்றுதான் நினைக்கிறீர்கள் உயிர்மூச்சில் சிலுவை அறையப்பட்டதை அறியாத நீங்கள். மழையிலும் வெயிலிலும் குளிக்கும் மலரென வாழ இசைத்தீர்கள் பழக்கப்பட்டுவிட்டோம் முட்களையும் பூக்களாக்க பயமில்லை இப்போ வாசனையாகிறது இரத்தவாடைகூட. சுவைக்கும் உணவுக்குமான…