Articles Posted by the Author:

 • சாத்திய யன்னல்கள்

  சாத்திய யன்னல்கள்

    ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல் உள் செல்வாள் என்னுள்ளம் வெளிச்செல்ல ஏதொவொன்று உட்செல்லும். இல்லையென்பதவளுக்கு இனிக்கும் வார்த்தை….இதுவரை காலமும் நான் அவளுக்காயென அணுத்துணிக்கை கூட அசைக்கவில்லையென்பதவள் அறுதியான வாதம். ஆதரவோடவள் தலைகோத விளைந்தால் தொட்டாற்சுருங்கியென தூங்குவதாயொரு பாவனை. நடுஇரவின் போர்வைகளில் வாய்வு மிகுந்தென் நெஞ்செல்லாம் எரிகையில் தள்ளிப்படுப்பாள் தன்னுறக்கம் கெடுமென்று… நிலாக்கால் முன்னிரவில் அவள் தோள் சேர்ந்து கவிசொல்லத் துடிக்குமென் மனசு புரியாமல் அடித்துச்சாத்துவாள் எல்லா யன்னல்களையும். அதிசயமாயவள் […]


 • வலி

  வலி

  சமீலா யூசுப் அலி 2011.06.28 முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி அரைநொடியில் தொடைகளில் கனக்கும் காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள். ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும். தலைக்குள் யாரோ இடையறாது பேசுவதன்ன அசெளகரியம் பொறுப்பதற்குள் இடையில் வாள் செருகலாய் வலி மிகும் முகவாயில் முழங்கால் இறுக்கி உதடு கடித்து மூச்சடக்கி வியர்ப்பாள். வலி மிகுந்தவள் துடிக்கும் பொழுதுகளில் தவறாது தாய் சுடுநீர்போத்தலோடு ஞாபகங்களில் […]


 • இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்

  இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்

  இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும் வாப்பும்மா சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர் எனக்கில்லையினி. மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில் அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும். வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார் கபுறடியில் நீங்கள் பொல்லூன்றி நிற்பதைக் கண்டதாக. அறுபதுகளிலும் வாப்பா அனுபவிக்கும் தாங்கொணாத் துயர் எனக்கும் புரியும். வாப்பும்மா உங்களுடற்சாறு அருந்திச் செழித்திருக்கும் மருதாணிச்செடிக்கு சில வேளை தெரிந்திருக்கலாம் மரணம் ஒரு வாயிலென்பதும் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளியில்லையென்பதும். சமீலா யூசுப் அலி, மாவனல்லை,இலங்கை 15.06.2011


 • ஊதா நிற யானை

  ஊதா நிற யானை

  சுத்தமாய் வெள்ளைத்தாள் சிதறிய கிரெயோன் கலர்கள் இரண்டு கோடுகள் ஒரு கோணல் வட்டம் நம்பிக்கையோடு யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று குழந்தைக்கோ கர்வம் ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று. யானைக்கு ஊதாநிறமா? அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை இரண்டு கால் யானை எங்குள்ளது அடித்துத் திருத்தினார் குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க நடந்து போனார் ஆசிரியை. சமீலா யூசுப் அலி மாவனல்லை இலங்கை


 • வாழ்தலை மறந்த கதை

  வாழ்தலை மறந்த கதை

  அவளிடம் சொன்னேன் அடுப்படி தாண்டு .பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக விஷயங்கள் இருக்கின்றன வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும் வித்தை சொல்லித் தருகிறேன் அவள் வந்தாள். சுமக்க முடியாத சங்கிலிகளையும் முடிவற்ற சந்தேகங்களையும் சுமந்து கொண்டு மிகுந்த பிரயாசையோடு அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன் சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய் நீண்டு நெடித்தலைந்தன. இனி என்ன களைப்போடு கேட்டாள். இனி நீ வாழத் துவங்கு வாழ்தல் என்றால் அயர்வோடு நோக்கினேன். அவள் […]


 • கவிஞனின் மனைவி

  கவிஞனின் மனைவி

  அபூர்வமான சொற்களைப் பின்னும் பொன்னிற சிலந்தி அவன் ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய் நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான். திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில் அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப் பார்த்தவாறே உறங்கிப்போவாள். அவன் எழுதும் எதையும் அவள் வாசித்ததில்லை அவனது விசாரங்களும் தனித்துவமான சிந்தனைகளும் அவளுக்குப் புரிந்ததேயில்லை. அதிகம் பேசுவது அவனை ஆத்திரமூட்டும். அவள் மொழி மறந்தவள் ஆயினள். கிராமத்துக்கிளி மொழிகள் மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள் அடங்கியிருந்தாள். சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் […]