நான் நெருங்கிப்போகிறேன் அவர்கள் என்னை மதிப்பதில்லை என்னை நெருங்கியவர்களை நான் நினைப்பதேயில்லை ….. வலியின் அலைகற்றை சுமந்து வந்த என் குரலை சலனமில்லாமல் வீசி எறிகிறார்கள் அவர்கள் . அவர்களை பின்தொடர்கிறேன் .. காயங்களை விசிறிவிட என்னை பின்தொடர்கிறவர்களை பொருட்படுத்தாமல்…. என்னிடம் ஏங்கி தவிப்பவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தபடி , யாரோ சிலரின் தாழிடப்பட்ட கதவுகளின் வெளியமர்ந்து யாசிக்கிறேன் , பிச்சையாய் பெற அவர்களிடம் ஏதுமில்லை என தெரிந்திருந்தும் … நிரம்ப […]
இன்னும் என் கவிதை முடிக்கப்படவில்லை …. ரத்தம் பிசுபிசுக்கும் வலிமிகுந்த வரிகளால் இன்னும் என் கவிதை தொடர்ந்துகொண்டே இருக்கிறது ….. பதில் கிடைக்காமல் விக்கித்து நிற்கையில் கேள்விக்குறி ஒன்று தொக்கி நிற்கிறது . திடுமென நிகழ்ந்த நிகழ்வொன்றில் , கண்களை அகல விரித்து ஆச்சர்ய குறி ஒன்று இடைசொருகப்படுகிறது ..! ஏதும் சொல்லொண்ணா நேரங்களில் வெறும் கோடுகளாய் நீள்கிறது……. புலம்பியது போதும் என முற்றுபுள்ளி வைத்தேன் ! அதன் அருகிலேயே மேலும் சில புள்ளிகள் இட்டு காலம் […]
இதுநாள் வரை பிரிந்திராத மரக்கிளை விட்டு கிளம்புகிறது பழுத்த இலை ஒன்று ….. முடிந்துவிட்ட ஆயுள் எண்ணி பெருமூச்சொன்றை பிரித்தபடி தொடங்குகிறது அதன் இறுதிப்பயணம் …. விம்மிவெடிக்கும் அதன் துயரங்கள் யார் காதிலும் கேட்டிருக்க வாய்ப்பில்லை …. இலையை பிரிந்த சோகம் தாளாமல் சுழன்று சுழன்று மரக்கிளை வைக்கும் ஒப்பாரியை கவனிக்க யாருக்கும் இங்கே விருப்பமில்லை ….. இலையொன்று போனால் துளிர் ஒன்று முளைக்கும் என்கிற சமாதானத்தையும் மரக்கிளை ஏற்ப்பதாயில்லை . இதோ ! அழுதபடி ஓடும் […]