author

வார்த்தைகள்

This entry is part 29 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சில நேரங்களில் மௌனங்களில் அடைப்பட்டு விடுகிறது சில நேரங்களில் உச்சரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்படுகிறது சொல்ல வேண்டிய தருணங்களை கடந்து வெறுமையை நிறைத்து கொள்கின்றன சில நேரங்களில்.. ஒருசொல் போதுமானதாயில்லை எப்பொழுதும் வார்த்தையில் தொங்கிகொண்டிருப்பதிலேயே கழிந்து விடுகிறது வாழ்க்கை.

வெறுமை

This entry is part 27 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

உச்சி வெயிலில் வெற்றுடம்புடன் மருள் பார்வையில் மயங்கி புடவையின் நுனி பற்றி இழுத்தும் கவனம் கார் கண்ணாடியிலும் சிக்னல் விளக்கிலும் … கைசேர்த்த காசுகள் ஒரு பாலாடை பாலுடன் சிறிது மதுவும் ஊற்றி மயக்கத்தை உறுதிபடுத்தி வாகன ஊர்வலத்தில் இடைசெருகி மாலை நேர கணக்கு முடித்து கமிஷன் வாங்கி சேயை அதன் தாயிடம் சேர்க்கையில் கண்ணில் நிழலாடியது தன்னை விற்றுப்போன தாயின் முகம் ….. – கவிப்ரியா பானு