சந்தர்பங்களின் சாத்தியத்திற்கு உதவக்கூடுமென சேருமிடத்தை மாற்றியவாறு கணத்துக்கொண்டே போனது ஓர் பயணம் … எங்கும் இறங்க மனமின்றி இருப்பின் தடயங்கள் , இழந்த இரவுகளை எண்ணிக்கொண்டு கிளம்பும் போதெல்லாம் நினைவுகளை சுமந்து போகிற ஏதேனுமொரு திசையில் குறுக்கிடும் காகத்திற்கு தெரியாது எதிர்பார்புகளின் குவியலோடு அலையும் வாழ்வு பற்றி -கவிதா ரவீந்தரன் (kavitharaveendar@yahoo.co.in)
ஒரு பறவையின் நீலச் சிறகு … இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் உன் பார்வை … அன்னியமாக உருக்காட்டி மறையும் என்னுருவம் … தொலைந்த பயணத்தின் தொடக்க நாட்கள் … கொஞ்சமும் இங்கிதமற்ற முறையில் சலனப்படும் மணம்.. நமக்கு நாமே எழுதிக்கொண்ட ஓர் இரவு ….. பூட்டிய வீட்டின் முன் விட்டெறிந்த கடிதம் … மற்றும் என் வருகைக்காக காத்து பதுங்கி முகம் புதைத்திருக்கும் கருப்பு நிற நாய்… இவைகள் ., இவைகள் மட்டும்தான் இன்று எனக்கு சொந்தமானவை ….! […]
ஒரு மௌனத்தை எவ்வளவு நேரம் சுமப்பது உன் பொய்களையும் கனவுகளையும் போதையாய் புணர்ந்த வலிகளோடு … பெருத்த பாலைவனங்களில் உடைந்த பீரங்கிகள் சொல்லும் மௌனங்களை உரசிப் பார்த்ததுண்டா நீ ? முழுமையின் பிரவாகத்தில் ஒரு புள்ளியை தனக்குள் புதைத்து புளுங்கியதுண்டா நீ ? தனிமை குவிந்திருந்தும் மேலோட்டமாய் ஒரு இரைச்சலுக்குள் சலனப்பட்டதுண்டா நீ ? பாலைவனத்தின் கள்ளிச் செடியில் வடியும் , கடைசி சொட்டு மௌனத்தை புசித்து செல் ! அல்லது ஒரு ஆணின் செருக்கோடு […]