குவிந்த விரல்களூடே குறுக்கும் நெடுக்குமாய் சிவந்த ரேகைகள் வழிகிற உள்ளங்கைச் சிறைக்குள் படபடக்குஞ் சிறுவண்ணாத்தி புலன்களுக்குள் குவியமிலா நெடுங்கனவுச் சிதறுகை. கரைந்திடுங் கணங்களில் வர்ணங்களின் பிசுபிசுப்பும் படபடப்பின் அமர்முடுகலும் ஒருசேர உணர்த்திய விபரீதங்களின் நடுக்கங்களோடு சடாரென விரியும் பிஞ்சுவிரல்களே வரைந்திடுமோ விண்ணளவுக்குமான அதன் விடுதலையை. கிண்ணியா எஸ். பாயிஸா அலி