ஊரை விட்டு உறவை விட்டு வந்தது போல் ஒரு வெறுமை. மனம் தனிமையின் குழிகளை வெட்டிக் கொண்டிருக்கும். கண்களில் விரிந்து கடந்த கால நினைவுகள் மண் மேடிட்டுக் கிடக்கும். ஓய்வு பெற்று எத்தனை காலம்? குழியில் விழுந்து கிடக்கும் கால நிழலை மேலும் குழி வெட்டி மனம் பிடிக்கப் பார்க்கும். ’மற்றவர்கள் தன்னை மறந்து விட்டார்களோ?’ பாறையாய்க் கேள்வி தடுக்கும். ’கொஞ்சம் காலமாகத் தான் பேச நினைத்த நண்பரோடு பேசினாலென்ன?’ ஒரு நினைப்பு ஈரமாகும். நினைப்பு நீளும் […]
(1) பொய்மை காண வேண்டி வரும் தயக்கம். கண்டு விடக் கூடாது என்று முன் எச்சரிக்கை. எதிர் அறையின் பேச்சரவங்கள் என்னைத் தீண்டுகின்றன. அவன் அறைக்குள் இருப்பதை அவை உறுதி செய்கின்றன. அவனை நேருக்கு நேர் காணாது சென்று விடும் வேளையைத் தேர்ந்து கொண்டிருப்பேன். மெல்லக் கதவைத் திறப்பேன் பூனை போல் வெளியேற. ஓ! அவன் கதவை நான் திறந்தது போல் அவன் கதவை அவன் திறந்து […]
கு.அழகர்சாமி மனிதரின் இன்னொரு விரல் போன்று செல்பேசி(Mobile phone) ஆகி விட்டது. சிலர் மிட்டாய்கள் போல் ஒன்றுக்கு மேலும் செல்பேசிகள் வைத்திருப்பர். குடும்பத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு செல்பேசி. செல்பேசியின் தாக்கமோ இடம், காலம், சூழல் கடந்ததாயுள்ளது. சிலர் சாலையில் நடந்து போகும் போது கூட ஒரு பைத்தியம் பேசுவது போல பேசிக் கொண்டே போவர். கழிவறையில் சிறு நீர் கழிக்கும் போது கூடப் பேசிக் கொண்டே சிறுநீர் கழிப்பவர்களைக் காண்கிறோம். சிலர் உண்ணும் போது கூட […]
(1) அம்மா இனியில்லை. வெயிலில் வெறிச்சோடிக் கிடக்கும் ஒற்றையடிப் பாதையாய் மனம் ஒடிந்து கிடக்கும். வேலைக்குப் போய் அம்மாவுக்கு வாங்கித் தந்தது ஒரே ஒரு சேலை. அழுவேன் நான். ஆண்டுகள் பல அம்மாவிடம் பேசாத அப்பா நாற்காலியில் கிடத்தப்பட்டிருக்கும் ’அம்மாவின்’ தலைக்கு எண்ணெய் வைப்பார். அது இது வரை என் விவரம் தெரிந்த வரை அம்மாவுக்கு அப்பா செய்த ஒரே ஒரு சேவகம். அழுவார் அப்பா. […]
முன் பின் தெரியாத ஒரு அனாதைச் சாவிலிருந்து திரும்பும் ’அவனை’ வழி மறைப்பான் முன்வாசலில் முதியவன் ஒருவன். முதியவன் கால்கள் மண்ணில் வேர் கொள்ளவில்லையா? சதா அழுக்கு சேரும் கோணிப்பை போன்ற கிழிந்த சட்டையில் கிழட்டு வெளவாலாய் அவன் தொங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றும். முதியவன் வாழ்ந்தும் செத்தும் கொண்டிருப்பதை விழிகள் திறந்தும் மூடியும் சொல்வான். அப்போது பெய்து முடிந்த அந்தி மழைக்குப் பின்னால் தான் அவன் வந்திருக்க வேண்டும். […]
கான்சரில் செத்துப் போனவரின் உடல் குளிர் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படிருக்கும். கண்ணீரில் ’ஸ்பாஞ்சாய்’ ஆகிய மனைவி களைத்தருகில் அமர்ந்திருப்பாள். அருகிலிருக்கும் ஒருத்தி அடையாளம் காட்டிக் கொண்டிருப்பாள் வந்து போவோரை. செத்துப் போனவரை இளம் வயதில் கைப்பிடிக்க விரும்பியவள் அவள் என்று கேள்வி. சாவுக்கு வந்த சிலர் சாவைத் தவிர ஏதேதோ கதை பேசிக் கொண்டிருப்பார்கள். இன்று நிகழும் வாழ்க்கை போல் அலங்காரமாயிருக்கும் பாடை காத்துக் கொண்டிருக்கும் பிணத்துக்கு. […]
(1) ’செளக்கியமா—’ திரும்பிப் பார்ப்பேன். எங்கிருந்து குரல்? தெரியவில்லை. சிறிது நேரம் சென்று துணிகள் காயப்போட வெளிமாடம் வருவேன். ’செளக்கியமா—’ திரும்பிப் பார்ப்பேன். அருகிலிருந்து குரல். ஒரு மரம் விசாரிக்கும். பத்து வருடங்கள் முன் பார்த்த அதே மரம். என் ஞாபகம் இருக்கிறதா? -நான். ஞாபகமா? -மரம். வேலை மாற்றலாகி வந்து விட்டேன் இங்கே. ’வயசாயிருச்சே’? -நான். என்ன சொல்கிறாய்? புரியவில்லை. -மரம். எத்தனை வருடங்கள் இருக்கிறாய் இங்கு? -நான். இந்தக் கணத்தில் இருக்கிறேன். -மரம். […]
மலஜலம் கழிக்க வயல் வெளிப்பக்கமும் ஊர் ஒதுக்குப் புறமும் ஜனங்கள் போகும் ஊர். கங்குலில் தெருவோரம் உட்கார்ந்து எழும் அடையாளம் தெரியாத உருவங்கள். என் பால்ய காலத்தில் பழகிய வழி ஊரில் பள்ளிக்கூடம் போய் வரும் வழி. போய் வரும் வழியோரமெல்லாம் மலங்கள் நிறைந்து கிடக்கும். தினம் தினம் பள்ளி செல்லும் போது மலத்துப்புரவு செய்யும் ஒரு பெருந் துயரப் பெண்ணைக் கண்டு போவதுண்டு. என் அம்மா மோர் விற்கிறாள் இவள் மலம் அள்ளுகிறாள்- இப்படித்தான் சின்னப்பயலான […]
51 வறண்டு கிடக்கும் ஆற்றில் கரை புரண்டோடும் வெயில் வெள்ளம். மேலே பறந்து கொண்டிருக்கும் தனித்தொரு பறவை வானில் ஒரு குளிர்மேகம் தேடி. 52 செடியின் ஒரு மலர் உதிரும். ஒரு மொட்டு அவிழும். செடி செடியாய் இருக்கும். 53 ஒரு கோவணம் கூட இல்லை. அண்ணாந்து ஆகாயம் போர்த்திக் கொள்ளும் அந்தக் குழந்தை. 54 நேற்றிரவில் எனக்குப் பெய்த மழை எல்லோருக்கும் பெய்யவில்லை. என் கனவில் மழை. 55 ஒற்றைப் பனைத்தூரிகையும் ஓவியமும் ஒன்றோ? 56 […]
1 கண்ணில் ஒரு பிடி ஆகாயம் தூவி விட்டுக் காணாமல் புள்ளியாய் மறையும் ஒரு சின்னப் பறவை. 2 கோடானு கோடி நட்சத்திரத் திருவிழாவில் ஒரே ஒரு யாத்ரீகன் நிலா செல்லும். 3 நட்சத்திரங்களை ’எண்ணுவதை’ விட நிலாவை ’எண்ணுவது’ மேல். 4 என் கூட்டம் ‘நான்’ சுருங்கி. 5 மினுக்கென்று எரியும் இந்த தீபம் தான் இந்த இரவில் என் துணை. தீபம் அணையும் முன் தூங்கி விடவேண்டும். 6 காலி நாற்காலியில் காலியாய் உட்கார்ந்திருக்கும் […]