1.முன்னுரை: திருக்குறளின் அறம் நடைமுறை வாழ்க்கையின் உன்னதத்தின் அடிப்படையாகும். இரு வரிகளில் அமைந்ததால் மட்டும் குறளல்ல. அணுவைத் துளைத்து ஆழ்கடலைப் புகட்டியதால் மட்டும் குறளல்ல. ஒவ்வொரு அதிகாரத்திலும் பேசப்படும் கருத்தின் முழுமையைப் பத்துக் குறட்பாக்களில் பேசிக்காட்டும் அசாத்தியத்தில் தான் அது குறள். அந்தப் பத்துக் குறட்பாக்களில், பேசப்படும் அறக் கருத்து வரையறுக்கப்படும்; அதன் அவசியம் விளக்கப்படும்; விளைவுகள் சொல்லப்படும். அதாவது அறங் கடைப்பிடிப்பதின் மேன்மையும், அறத்தைக் கடைப்பிடிக்காததின் கீழ்மையும் குறிக்கப்படும். கூர்ந்து நோக்கினால் சில கருத்துக்களை நிறுவுவதற்காகக் […]
(1) கதவு சாமரமாய் வீசும் ஒருக்களித்திருந்த கதவு மெல்ல மெல்லத் திறக்கும். யாரும் உள்ளே அடியெடுத்து வைக்கவில்லை. காற்று திறந்திருக்குமோ? காற்றாடை உடுத்திக் கொண்டு கண்ணுக்குத் தெரியாது யாராவது திறக்க முடியுமோ? எழுந்து சென்று பார்த்து விடலாமா? மலர்ந்து கொண்டிருக்கும் வேளையில் மலரைப் பறிப்பதா? மனம் மறுதலிக்கும். கதவுக்கு முன் எந்தக் கதிரவன் உதயமாகி விட முடியும்? கண்கள் பரவசமாகிக் காத்திருக்கும். கதவு முன் முன்பின் தெரியாத ஒரு சின்னக் குழந்தை. தன் ”குஞ்சு மணியைப்” பிஞ்சுக் […]
(1) ’அம்மா இங்க வாம்மா. * என்னம்மா * அங்க பாரேன் கிங் ஃபிஷர் ’லூசு’ மாதிரி சிலுப்புது. * அது லூசில்லமா. * பறவைக்குப் பைத்தியம் பிடிக்குமுமாம்மா? * பிடிக்குமா? பிடிக்காதா? எனக்குத் தெரியாது ‘முழிப்பேன்’. * இதன் முட்டை எந்தக் கலரும்மா? * அதன் முட்டையைப் பார்த்ததில்லை. * சும்மா சொல்லும்மா. * வெள்ளையா இருக்கலாம். * என் சின்னமகளுக்குக் கேள்விகளே முக்கியம் விடைகளல்ல. (2) கலர் கலரா அழகா இருக்கில்லேம்மா? * ‘அழகு […]
”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது சற்றுக் கடினம். அவர்கள் நம்மைப் போல் தான் இருப்பார்கள். ”ஒழுக்கங்கள்” பற்றி அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் தான் அவர்கள் “ஒழுக்கமானவர்கள்”. அவர்களுக்கு ஆண்கள் பெண்கள் ஒழுக்கங்கள் மேல் அதிக அக்கறை. அடிப்படையில் ஆண்கள் பெண்கள் எலும்புக் கூடுகள். எலும்புக் கூடுகள் ஒழுக்கமானவை. அப்படியே ஆண்கள் பெண்கள் ஒழுக்கங்கள் இருக்க வேண்டும் இப்படியெல்லாம் ஒழுக்கங்களுக்கு அவர்கள் வியாக்கியானம் இருக்கும். விளக்கிப் பதில் சொல்ல வீணாகும் நேரமென்று விமர்சனங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை ”ஒழுக்கமானவர்கள்” […]
(1) “சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்க” பாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர இப்படி ஆரம்பித்தார் பேச்சை என்னிடம். நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை உள் வாங்கிக் கொள்வதை இன்னும் ஒத்திப் போடுவதாய் “ போன மாதம் சார், ரிட்டைர்டு ஆனேன்” என்பேன். போன மாதமானாலென்ன’; போன தினமாலென்ன; மனம் அவ்வளவு வேகமாகவா மாறுதலுக்கு தயாராகிறது. பாலுசாமி நான் பணி செய்த துறையிலேயே எஞ்சினியராய்ப் பணி செய்து பத்து […]
(1) இது இறந்தவர்கள் பற்றிய க(வி)தை . அதனால் மர்மங்கள் இருக்கும். இறந்தவர்கள் மர்மமானவர்கள் அல்ல. இருப்பவர்களுக்கு சாவு பயமானதால் இறந்தவர்கள் மர்மமானவர்கள் இருப்பவர்களுக்கு இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இருப்பவர்களின் சாவை இறந்தவர்கள் நினைவுபடுத்துகிறார்கள். (2) இரண்டாம் எண் அலுவலக அறையில் இருந்தவர் ’ரெக்டம்’ கான்சரில் செத்துப் போனார். இரண்டாம் எண் அறைக்குப் புதிதாய் வந்தவரும் இரண்டே மாதங்களில் ’லங்’ கான்சரென்று செத்துப் போனார். முதல் அறையில் இருந்தவர் சுகமில்லையென்று மாற்றலாகிப் போய் விட்டார். […]
2-ஜி அலைக்கற்றை ஊழலின் தாக்கம்: 2-ஜி அலைக்கற்றை (2-G Spectrum) ஊழல் இந்திய ஜனநாயகத்தில் ஒரு பெரிய நில அதிர்வு போல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அந்த நில அதிர்வின் அலைகள் இன்னும் நின்றபாடில்லை. 2011-ல் டைம்( Time) இதழ் உலகளாவின தலையாய பத்து அதிகார முறைகேடுகளில் 2-ஜி அலைக்கற்றை ஊழலை வாட்டர்கேட் ஊழலுக்கு(Watergate scandal) அடுத்து இரண்டாம் இடத்தில் தரப்படுத்துகிறது (விக்கிஃபீடியா). மேல்தட்டு மனிதரிலிருந்து கீழ்த்தட்டு மனிதர் வரை 2-ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிப் பேசாமலில்லை; முதல் முறையாக, […]
இரவில் ஏன் தூங்கணுமென்பாள் சின்ன மகள். குருவிகள் தூங்குகின்றன என்பேன். நட்சத்திரங்கள் தூங்கவில்லையே என்பாள். நட்சத்திரங்கள் பகலில் தூங்குமென்பேன். ’இரவில் பின் ஏன் தூங்கணும்’- இன்னும் சமாதானமாகாள் சின்ன மகள். ’சரி காத்தால பள்ளிக்கூடம் போகணும் தூங்கு’ என்பேன் ’ குருவிகள் பள்ளிக்கூடம் போவதில்லையே’ என்பாள். ‘நீ குருவியில்லையே பாப்பா’ என்பேன் ’பள்ளிக்கூடம் போன குருவிகள் தாம் பாப்பாக்களாச்சா?’ என்று இன்னும் கேட்பாள் சின்னமகள். (2) சின்ன மகளுக்குக் கதை சொல்லி ’அம்மா கத சொல்லு’- சின்ன […]
”தூங்கிட்டு இருக்கான்னுல நெனச்சேன்; அட ஆளே செத்துட்டான்னா?” அவனுக்குத் துணுக்குறும். பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் வேகமாய் நடந்து போகும் போது அவன் கால்கள் தடுக்கி விட்டது நினவுக்கு வரும். ‘பொணம் தடுக்கிச்சா” ;சிந்தையில் கலவரம் கூடும். கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னை நகரையே மலைப்பாம்பாய் உள் விழுங்கிக் கொண்டு மூச்சிரைப்பது போல கூட்டம் பிதுங்கிக் கொண்டிருக்கும். வித விதமாய் எத்தனை எத்தனை மனிதர்களையோ மாறி மாறி வரைந்து கொண்டிருக்கும் மாபெரும் உயிர்த் திரைச்சீலை போல பேருந்து நிலையம் […]
தகழியின் ’செம்மீன்’ என்ற மகத்தான மலையாள நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியாகி( 1962) ஐம்பது ஆண்டுகள் நிறைவாகின்றன. மலையாள நாவல் 1956-ல் வெளியானது. ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் நாவல் வாசகர்களை இன்னும் புதிதாய் வசப்படுத்துகிறது. அண்மையில் தான் முதல் முதலாக செம்மீன் நாவலை வாசித்தேன். சுந்தர ராமசாமியின் தமிழாக்கம் அது. இரண்டே நாட்களில் வாசிப்பு வாசிப்பைத் தூண்ட வாசித்து முடித்து விட்டேன். தகழி இந்த நாவலை இருபது நாட்களுக்குள் எழுதி முடித்து விட்டாராம். ஆச்சரியமில்லை. எழுதும் […]