”தூங்கிட்டு இருக்கான்னுல நெனச்சேன்; அட ஆளே செத்துட்டான்னா?” அவனுக்குத் துணுக்குறும். பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் வேகமாய் நடந்து போகும் போது அவன் கால்கள் தடுக்கி விட்டது நினவுக்கு வரும். ‘பொணம் தடுக்கிச்சா” ;சிந்தையில் கலவரம் கூடும். கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னை நகரையே மலைப்பாம்பாய் உள் விழுங்கிக் கொண்டு மூச்சிரைப்பது போல கூட்டம் பிதுங்கிக் கொண்டிருக்கும். வித விதமாய் எத்தனை எத்தனை மனிதர்களையோ மாறி மாறி வரைந்து கொண்டிருக்கும் மாபெரும் உயிர்த் திரைச்சீலை போல பேருந்து நிலையம் […]
தகழியின் ’செம்மீன்’ என்ற மகத்தான மலையாள நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியாகி( 1962) ஐம்பது ஆண்டுகள் நிறைவாகின்றன. மலையாள நாவல் 1956-ல் வெளியானது. ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் நாவல் வாசகர்களை இன்னும் புதிதாய் வசப்படுத்துகிறது. அண்மையில் தான் முதல் முதலாக செம்மீன் நாவலை வாசித்தேன். சுந்தர ராமசாமியின் தமிழாக்கம் அது. இரண்டே நாட்களில் வாசிப்பு வாசிப்பைத் தூண்ட வாசித்து முடித்து விட்டேன். தகழி இந்த நாவலை இருபது நாட்களுக்குள் எழுதி முடித்து விட்டாராம். ஆச்சரியமில்லை. எழுதும் […]
(1) காட்டுக்குள் காலடி வைப்பேன். காடு நகைக்கும். ’ஒரு மிருகமோ நான்’ என்று ஒரு சந்தேகம் எனக்கு. காடு மறுபடியும் நகைக்கும். ”ஒரு மிருகமில்லையோ நான்” என்று மறு சந்தேகம் எனக்கு. இரண்டுமே நானோ? இன்னும் தீராது சந்தேகம் எனக்கு. காடு தொடர்ந்து நகைக்கும். காட்டுக்குத் தெரியுமோ? (2) ஏறி இறங்கி இறங்கி ஏறி அடுக்கு மலை தாலாட்டும். அடர்ந்த காடு துயில் கொள்ளும் அமைதியில். (3) அடர்ந்த காடு. பறவை ஒலிக்கும். காட்டின் அமைதி ஆழமாகும். […]
என் அறையில் நான். நாற்காலி அதன் சித்திரத்தை வரைந்திருக்கும். மேஜை அதன் சித்திரத்தை வரைந்திருக்கும். நிலைக் கண்ணாடி தனக்குள் தன் சித்திரத்தை வரைந்திருக்கும். வெளிச்சித்திரங்களை உள்ளே கூட்டி வந்திருக்கும் ஆகாயம். என் சித்திரத்தையும் வரைய ஆரம்பித்தேன். மாறிக் கொண்டேயிருக்கும் என்னை எப்படி வரைவது? மேகங்களை மைக்குப்பியில் ஊற்றிக் கொள்ளமுடியுமா? அறைக்குள்ளிருக்கும் ஆகாயத்தை மைக்குப்பியில் கவிழ்த்தேன். என் சுவாசத்தில் மறுபடியும் மறுபடியும் என்னை வரைந்து கொண்டேயிருப்பேன். எப்போது முடியும்? ”முடியும் போது” முடியும். ’முடியும் போது’ யார் உயிர் […]
(I) வறுமைக் கோடு- கோட்பாட்டு விளக்கம் 1.முன்னுரை இந்து ஆங்கில நாளிதழில் (11 பிப்ரவரி,2012 ) வாழ்க்கையின் மறுபக்கம் (The other side of life) என்ற தலைப்பில் ஹர்ஸ் மந்தரின் (Harsh Mander) இந்தியாவின் வறுமைக்கோடு (Poverty Line) குறித்த ஒரு கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரை வாசகர்களிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியதை வாசகர்களின் பரவலான கருத்தலைகள் மூலம் அறிய முடிந்தது. மத்திய திட்டக் குழு(Central Planning Commission) இந்தியாவின் வறுமைக் கோடு குறித்த தனது […]
இரயில் பயணத்தை அவன் என்றைக்குமே வெறும் இரயில் பயணமாய்ப் பார்ப்பது இல்லை. இரயில் பயணத்தை ஒரு தத்துவார்த்தமாகவே கண்டு அவனுக்கு விருப்பமாகி விட்டது. ஒரு ஆரம்பித்திலிருந்து ஒரு முடிவுக்குச் செல்லும் வாழ்க்கையைப் போல இரயில் ஊடறுத்துக் கொண்டு போகிறது என்று பல சமயங்களில் அவன் நினைப்பதுண்டு. இரயில் விரைந்து செல்லும் வழியெல்லாம் நில்லாக் காட்சிகளில் மனந் தோய்ந்து நிற்கும் புதிரை அவன் இரயில் பயணம் முழுவதும் விடுவித்துக் கொண்டே இருப்பதுண்டு. இரயில் நிற்கும் இரயிலடிகளை விட தான் […]
கு.அழகர்சாமி சென்னைப் பள்ளியொன்றில் பதினைந்து வயது கூட முழுமையடையாத ஒரு மாணவன் தன் பள்ளி ஆசிரியையைக் குத்தி கொலை செய்தது அதிர்ச்சியாகவும் துயரமாகவும் இருக்கிறது. நம் கலாச்சாரச் சூழலில் எப்படி இது நடந்தது என்ற தொனியும் அதில் இருக்கிறது. தன் பாடத்தில் சரியாகத் தேர்ச்சி பெறாத மாணவனின் டயரியில் தன் ஆசிரியை எழுதிய குறிப்புகளின் மேல் ஆத்திரப்பட்டு மாணவன் இந்தக் கொலைச் செயலை நடத்தியிருக்கிறான். ஏன் நடந்தது இது? என்ற கேள்வி எல்லோருடைய மனத்திலும் உருத்துகிறது. அது […]
கு.அழகர்சாமி கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவது போலும் உடலுக்குள் உயிர் செலுத்துவது போல் அழுது கொண்டிருக்கும் அவளைக் கண்டதும் கைகளைச் சேர்த்தழுத்தியது தான். எங்கே இழுத்துப் போகிறாள் என்னை? எந்தக் கடலுக்குள்? எந்த ஆழத்துக்குள்? கனவு மீளாது போய்க் கொண்டே இருக்கிறேனா? காலம் நழுவியதில் காணாமல் போய்க் கொண்டே இருக்கிறேனா? என்னுள் பெருகும் வெள்ளத்தில் நெக்குருகிக் கரைகின்றேனா? ஒரு பிணத்தைத் தூக்கிக் கொண்டு கரையேறுகிறாளே அவள் இன்னொரு காலத்தில்? அவள் மருவலில் என் மரணமா? கண்ணாடிப் பேழைக்குள் எவர் […]