குரு அரவிந்தன் வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது. காலையில் எழுந்து நிலானி பள்ளிக்குச் சென்று விட்டாள். செல்லும்போது ஓடி வந்து வழமைபோல கட்டி அணைத்து முத்தம் தந்துவிட்டுச் சென்றாள். உடம்பு வளர்ந்து விட்டதே தவிர மனசளவில் எந்தவொரு கவலையும் இல்லாத குழந்தையாகவே இருந்தாள். தெளிந்த நீரோடையாய் நகர்ந்த எங்கள் குடும்ப வாழ்க்கையில் சிறு தடுமாற்றம், காரணம் சென்ற வாரம் மகள் வயதிற்கு வந்து விட்டாள் என்ற உண்மைதான். கற்பனை உலகிலிருந்த என்னை நிஜவாழ்க்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருந்ததும் […]
குரு அரவிந்தன். புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்தபடியே நடந்து கொண்டிருந்த எனது பார்வை அங்கிருந்த அந்தப் பதாகை மேல் பட்டது. கறுப்பு நிற பதாகையில் […]