முள்ளால் தைத்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் கடந்தோடிவிட்ட இரண்டு வருடங்கள் கனவாகவே இது இருந்திருக்கக் கூடாதா என்றவொரு ஏக்கம் இன்றும் என் மனதில் தவியாய் தவிக்கிறது எம் உறவுகளின் சாம்பல் மேடுகளில் பட்டு வரும் காற்றை சுவாசிக்கும் கொடுமை அழுகுரல்கள் நிறைந்த அந்த அவல ஓசையின் எதிரொலிகளை கேட்கின்ற சுமைகள் அரச பயங்கரவாதம் எம்மவர் சதை தின்று நரபலி எடுத்த நினைவுகள் பசியால் துடிதுடித்தே இறந்து போன சொந்தங்கள் உடல் உபாதையினால் உயிர்விட்ட எம் உறவுகள் நோயின் உச்சத்தில் […]