வாத்தியார் வேணு நாயக்கருக்குக் கலியாணம். வாத்தியார் என்றால் பள்ளிக்கூட வாத்தியார் அல்ல. கழி சுழற்றவும் பிடிகள் போட்டு எதிராளிக்கு முதுகில் மண் ஒட்டச் செய்யவும் கற்றுக்கொடுக்கிற வாத்தியார். அதனாலேயே அவருக்கு வாலிப வயது சிஷ்யப் பிள்ளைகள் அதிகம். ஆனால் வாத்தியார் வேணு கவிஞருக்கு சீடர் மாதிரி. கவிஞரிடம் பாட்டுக் கட்டப் படிப்பதெல்லாம் அவரால் நடக்கிற காரியம் இல்லை. கவிஞரிடமும் வேணுவுக்குக் கற்றுக் கொடுக்கும்படியான வித்தை எதுவும் இல்லை. சொல்லப் போனால் கவிஞர்தான் வேணுவிடம் சில உடற் பயிற்சி […]
சென்னை மண்ணுக்கென்று ஏதோ விசேஷம் இருக்கிறது போலும். சென்னை மாநகரமாக அது உருவெடுக்கும் முன்பே இந்த விசேஷம் ஏற்பட்டு அதன் பிறகும் நீடித்து வந்திருக்கிறது. எங்கெங்கோ பிறந்து எவ்வாறெல்லாமோ அலைந்து திரிந்தானபின் சென்னையில் வந்து அடங்கிய சித்தர்கள் பலர். சென்னை தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்று வடசென்னையின் ஒரு பகுதியாகவே கருதப்படும் திருவொற்றியூர் கடற்கரையில் சமாதி கொண்ட பட்டினத்தார், காவிரிப்பூம் பட்டினத்துக்காரர்தான். அவர் கையில் இருந்த பேய்க் கரும்பின் கசப்பு திருவொற்றியூர் என்கிற இன்றைய சென்னையின் […]
பழம் பெருமை பேசி மகிழ்வதில் தமிழனுக்கு அலாதி இன்பம். தவறில்லை. ஆனால் பேச்சில் உள்ள ஆர்வம் அந்தப் பெருமைக்குக் காரணமான வரலாற்றுத் தடங்களை அழியாமல் பாதுகாக்கும் செயல் என்று வருகிறபோது எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்த்தால் மனசு சோர்ந்துதான் போகிறது. கால ஓட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி அவசியந்தான். ஆனால் ஒவ்வொரு சாதாரண ஊருக்குமேகூட ஒரு பின்னணியும் அதற்கென்றே ஒரு பிரத்தியேக வரலாறும் வடிவழகும் உண்டு. அது சிதைந்துவிடாமல் வளர்ச்சி அமைவதுதான் முறையாக இருக்கும். அதிலும் சென்னை […]
பொதுவாக இலக்கிய ஆளுமைகளின் பன்முகங்களில் ஒரு முகம் குறிப்பாக மிகவும் அணுக்கத்தில், கூடவே வாழ்ந்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புலப்படுவதாக இருக்கும். அப்படியொரு அனுபவசாலி, தான் அறிந்த ஆளுமையைப் பற்றிய விவரங்களை வெளியிடுகிறபோது அதற்கு விசேஷ கவனம் கிடைப்பதில் வியப்பில்லை என்பதோடு கிடைக்கவும் வேண்டும். அந்த ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை கணிப்பதற்கு இது இன்றியமையாத தாகிறது. ஏனெனில் ஒரு ஆளுமையின் புற இயக்கங்கள் அக இயல்புகளின் அடிப்படையிலேயே ஆக்கம் கொள்கின்றன. அந்தரங்கம் என அவற்றைப் புறந்தள்ளல் சரியாக இருக்காது. […]
மாங்கொட்டைச் சாமிக்குப் பேச்சு வராது என்றுதான் ரொம்பப் பேருக்கு எண்ணம். ஆனால் அது சரியல்ல. சாமி ஆள் பார்த்து, அளந்துதான் பேசும். பெரும்பாலும் மவுனத்தையே வல்லமை மிக்க மொழியாகக் கருத்துத் தெரிவிக்கப் பயன்படுத்திக் கொள்ளும். பிறர் பேச்சுக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே மாங்கொட்டைச் சாமி பேச்சு வராததுபோல் பாவனை செய்யும். மாங்கொட்டைச் சாமிக்குப் பின்னால் போய் பணிவிடைகள் செய்தால் இரும்பைப் பொன்னாக்கும் ரசவாதம் கற்கலாம், வசிய மந்திரம் கற்றுச் சகலரையும் வசப்படுத்திக்கொள்ளலாம் என்றெல்லாம் நப்பாசை கொண்டு […]
காற்றில் மிதந்து வருகிற மாதிரி பரவச நிலையில் வந்துகொண்டிருந்த கவிஞரை அவர்கள் எதிர்கொண்டனர். விடியிருளில் நிழலுருவாய்த்தான் அவரது வடிவம் புலப்பட்டது. ஆனால் அவரது நடை, உடை, பாவனைகள் வருவது அவர்களுடைய கவிஞர்தான் என்பத்தை வெகு எளிதாய்ப் புலப்படுத்திவிட்டது கவிஞர் அருகில் வந்த பிறகு அவரது நிறம் மங்கிய கறுப்பு அல்பாகா கோட்டில் எல்லாம் மணல் படர்ந்து கிடப்பதும் தலையில் குலைந்துபோன பாகையிலும் திட்டுத் திட்டாக மணல் அப்பி யிருப்பதும் தெளிவாகவே தென்பட்டது. “என்ன பாரதி இது, நாங்களானால் […]
மலர்மன்னன் “பிறர் கட்டுரைகளுக்கு மறுமொழியாக உனது கருத்துகளைத் தெரிவிப்பதைவிடத் தனிக் கட்டுரைகளாகப் பதிவு செய். ஏனெனில் காலப் போக்கில் பிறர் கட்டுரைகளுக்கு அடியில் மற்றவர்களின் மறுமொழிகளுக்கு இடையே உனது மறுமொழிகள் புதைந்து மறைந்துபோய்விடுகின்றன. மேலும் உனது பல கருத்துகள் மறுமொழி வடிவில் அமைவதால் கவனத்திற்கு வராமலும் போய்விடுகிறது. வந்தாலும் சேகரித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை” என்று சில நண்பர்கள் எழுதுகிறார்கள். யோசிக்கும் வேளையில் அவர்கள் சொல்வது சரியாகவே படுகிறது. திண்ணை இணைய இதழின் அக்டோபர் 2, 2011 தேதியிட்ட […]
– எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் பொதுப் பிரக்ஞையில் பதிந்து போவதுமாகிவிடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்துவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்ந்த மிக முக்கிய சமூக நிகழ்வு என்று சொல்லத் தக்க தோள் சீலைக் கலகம் இப்படியான ஒன்று. இதுவரை அறியப்படாத அதன் மறுபக்கம் இப்போது சென்னை குரோம்பேட்டையிலிருந்து இயங்கிவரும் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் […]
அவ்வப்போது எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கேட்கப்படும் கேள்வி, எப்போது பார்த்தாலும் மு.கருணாநிதி அவர்களைக் கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் எழுதி வருகிறீர்களே, அப்படியானால் கருணாநிதியிடம் பாராட்டுவதற்கு எதுவுமே இல்லையா? பாஷைதான் வேறுபடுமேயன்றி அடிப்படையில் இந்தக் கேள்வியின் சாரம்தான் எதிலும். இது வெகு காலமாகவே என்னிடம் கேட்கப்பட்டுவரும் கேள்வி. ஆனால் இதற்குத் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தேன். காரணமாகத்தான். இப்பொழுது கருணாநிதி பதவியில் இல்லை. ஆகையால் இது பற்றி எழுதத் துணிந்தேன். தி.மு.க. வில் இருந்த முன்னணியினரில் முதல் முதலில் […]
தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம் தேவ் கூட்டிய கூட்டத்தை போலீசார் நட்ட நடு நிசியில் வலுக்கட்டாயமாகக் கலைத்தது பற்றிய எனது கட்டுரையில் உண்மையான மக்களாட்சி எவ்வாறு இருக்கும் என்ற எனது கருத்தை விவரிக்கிறபோது அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கையில் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தேன். 1967-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில மாதங்களிலேயே கல்லூரி மாணவர்களுக்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துத் தொழிலாளர்களான ஓட்டுனர், நடத்துனர் இணைந்த குழுவினருக்கும் இடையே […]