author

பெற்றோர்கள் செய்ய வேண்டியது

This entry is part 5 of 22 in the series 19 ஏப்ரல் 2020

கொண்டாட்டமாய் போக வேண்டிய விடுமுறையை “செம போர்” எனச் சொல்ல வைத்து விட்டது கொரோனா. வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற கண்டிஷனோடு கிடைத்திருக்கும் விடுப்பு பெரியவர்களுக்கே சுமையாக இருக்கும் நிலையில் குழந்தைகளுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் நமக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் கூட இந்த வீடு அடங்கி இருத்தலை சுகமான நினைவுகளாக மாற்றிக் கொடுக்க முடியும். வீட்டிற்குள் இருக்க மறுக்கும் குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடங்கி இருக்கச் செய்திருக்கும் இந்நாட்களில் அவர்களோடு சேர்ந்து நீங்காத நினைவுகளை உருவாக்கிக் […]

சுவை பொருட்டன்று – சுனை நீர்

This entry is part 2 of 14 in the series 20 மார்ச் 2016

ஒரு விதையை விதையாகவும் பார்க்கலாம். ஒரு அடர் விருட்சத்தைத் தனக்குள் உறைய வைத்திருக்கும் உயிராகவும் பார்க்கலாம். இதில் ஷாநவாஸ் இரண்டாவது வகை.  பரோட்டாவை ஒரு பதார்த்தமாக மட்டும் பார்ப்பவர்களுக்கு மத்தியில் அதில் ஊடேறிக் கிடக்கும் மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வுகளைக் கவிதையாக்கித் தந்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் அதைத் தான் பேசுகின்றன. ஒரு ஞாயிறன்று பெய்த மழை கலைத்துப் போட்டதில் அந்த முதலாளி(தவ்கே)க்கும், தொழிலாளிக்கும் ஏற்படுகின்ற மன ஓட்டத்தையும்,  சுகாதார அதிகாரியிடம் பகிர முடியாத […]

அழகுநிலாவின் “ஆறஞ்சு”

This entry is part 1 of 19 in the series 31 ஜனவரி 2016

  மண் வாசம் தேடும் வலசைப் பறவையாய் தன் சிறகை விரித்திருக்கும் அழகுநிலாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு “ஆறஞ்சு”. 14 கதைகள் கொண்ட இத் தொகுப்பில் உள்ள கதைகளில் சிலவற்றை முன்னரே வாசித்திருந்த போதும் தொகுப்பாக வாசிக்கையில் அது இன்னும் எனக்கு நெருக்கமானதாக இருக்கிறது. சிங்கப்பூரின் இலக்கிய அமைப்புகள் நடத்தும் போட்டிகளில் படைப்புகள் சிங்கப்பூர் சூழலைக் களமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை அறிவிக்கப்படாத விதியாகவே இருக்கும். அந்த விதிகளை அனாயாசமாக சிங்கப்பூரில் இருக்கும் சில இடங்களின் […]

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! – முத்துநிலவனின் கட்டுரை தொகுப்பு

This entry is part 25 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

மு. கோபி சரபோஜி நாளிதழகள், இணைய இதழ்களில் வந்த ஆசிரியரின் காலத்திற்கேற்ற கட்டுரைகளே ”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” என்ற கட்டுரைத் தொகுப்பாக வந்துள்ளது. இத் தொகுப்பின் ஆசிரியரான நா.முத்துநிலவன் உலகறிந்த பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர், கவிஞர், கட்டுரையாளர், சமூகச் சிந்தனையாளர், வலைப்பதிவாளர், கருத்தரங்குகளில் மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் முழங்குபவர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தாலும் பள்ளி ஆசிரியர் என்ற அவரின் தகுதி தான் இந்த நூலை இன்னும் வேகமெடுத்து உண்மை நிலையை உரக்கப் […]

துளிப்பாக்கள்

This entry is part 7 of 26 in the series 27 அக்டோபர் 2013

தழும்பி நின்றது எதிர்காலம் குறித்த பயம் தேர்வறை. ——————————————————— புற்றீசலாய் கிளம்பிவிட்டார்கள் பொய் மூட்டைகளை தூக்கிக் கொண்டு தேர்தல். —————————————————————- காளைகளுமில்லை கழனிப்பானையுமில்லை நவீன விவசாயம் ———————————————————————- யாரை தேடி இரவெல்லாம் பயணம்? நிலா —————————————– சிலைகளாய் நின்றவர்கள் உயிர்தெழுந்து வந்தார்கள் மாறுவேடபோட்டி. ————————————————————— மு.கோபி சரபோஜி

வசை பாடல்

This entry is part 15 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

மு.கோபி சரபோஜி எவரிடமும் பறித்து உண்ணாது எவரிடமும் வாய்சவடால் செய்யாது துருத்தி தெரியாத பாவங்களை சுமக்காது தன் சுகமென்பது கூட தன்னை லயிப்பதே என்றிருப்பவனை நோக்கி எப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கிறோம் “பைத்தியம்” என்ற வசைச்சொல்லை! ————————————– மு.கோபி சரபோஜி இராமநாதபுரம்