மு.வெங்கடசுப்ரமணியன் மணி மாலை 6.30யைத் தாண்டிக்கொண்டிருந்தது. 28வது எண் பேருந்தில் இருந்து ஒரு வாட்டசாட்டமான மனிதர் கையில் ஒரு பையோடு இறங்கினார். நெரிசலிலிருந்து இறங்கிய அவர் வெளியே வந்த நிம்மதியில் சுதந்திர காற்றை இரண்டு மூன்று முறை சாவகாசமாக இழுத்துவிட்டு தன்னுடலை ஒரு நிலைக்குக் கொண்டுவந்தார். பிறகு, சாலையை கடந்து முக்கியத் தொடர்வண்டி நிலையத்திற்குள் மெல்ல நடந்துவந்தார். அந்த எழும்பூர் நிலையத்தின் தெற்கு நோக்கிச் செல்லும் சில வண்டிகள் அடுத்தடுத்து இருப்பதால் பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் […]