நிலாவண்ணன் “இங்கயே ஒக்காருங்க தாத்தா… இன்னும் கொஞ்ச நேரத்தில கல நிகழ்ச்சி ஆரம்பிச்சுடுவாங்க… நான் போயி தம்பி தங்கச்சிய கூட்டியாந்துடறேன்..!” பேத்தி பரிமளா உட்காரச் சொன்ன இடத்திலேயே அண்ணாமலை கிழவன் பத்திரமாக அமர்ந்து கொண்டார். சின்ன வயதில் அம்மா பக்கத்தில் உட்கார்ந்த அதே தூண் ஓரம். மேடையை நோக்கி இருக்கும். வசதியாகச் சாய்ந்து கொள்ளலாம். அந்த இடத்தை பேத்தி நேற்றே பாய் போட்டு பத்திரமாகப் பிடித்திருந்தாள். அப்படி எல்லை கட்டாதிருந்தால் இந்நேரம் யாராவது ஆக்கிரமித்திருப்பார்கள். […]
நிலாவண்ணன் அது அழகும் எழிலும் ஒருங்கே கைகோர்த்துக் கொண்டு நிற்பதைப் போன்ற ஒரு கிராமம். அக்கம் பக்கத்தில் சில கிராமங்கள் இருந்தாலும் இந்த கிராமத்திற்குத் தனி மகத்துவமும் பெருமையும் இருந்தன. அதிக உயரம் இல்லாத மலைகளும் சிறு குன்றுகளும் கிராமத்தைச் சூழ்ந்திருந்தன. அந்த மலைகளில் பச்சைக் காடுகள் சூழ்ந்திருந்தது. அந்தக் காடுகள் வற்றாத மழை வளத்தை அந்த கிராமத்திற்கு வாரி வழங்கிக் கொண்டிருந்தது. மலையில் உருவாகிய அருவிகள் ஒன்றாகி பலவாகி சம தரைக்கு வரும்போது சிறு நதியாகி […]