author

ச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்

This entry is part 9 of 36 in the series 18 மார்ச் 2012

பாவண்ணன் கடந்த நான்காண்டுகளாக சிற்றிதழ்களிலும் வலைப்பக்கங்களிலும் தொடர்ந்து கவிதைகளை எழுதி வருபவர் முத்துவேல். இடைவிடாத வாசிப்புப்பயிற்சியாலும் எழுத்துப்பயிற்சியாலும் நல்ல கவிதைமொழி அவருக்கு வசப்பட்டிருக்கிறது. வாழ்வின் இருப்பைப்பற்றிய கேள்வியும் தேடலும் இயல்பான வகையில் அவர் கவிதைகளில் வெளிப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இத்தகுதியே இத்தொகுதியை வாசிப்புக்குரியதாக ஆக்குகிறது. தொகுப்பில் மீண்டும் வாழ்தல் என்ற தலைப்பில் ஒரு கவிதை உள்ளது. பழகிப்போன ஒரு வாழ்க்கைமுறையை விட்டுவிலகி இன்னொரு வாழ்க்கைமுறையோடு ஒன்றிப்போவதையே முத்துவேல் மீண்டும் வாழ்தல் என்று குறிப்பிடுகிறார். இக்கவிதையின் வாசிப்பனுவபத்தை […]

அள்ளிக்கொண்டுபோன மரணம் – தி.சு.சதாசிவம் – அஞ்சலிக்குறிப்புகள்

This entry is part 3 of 40 in the series 12 பிப்ரவரி 2012

எண்பதுகளின் பிற்பகுதியில் கொப்பள என்ற ஊரிலிருந்து கதக் என்னும் ஊர்வரைக்கும் கேபிள் புதைக்கும் வேலைக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன். இரண்டு ஊர்களுக்கும் இடையில் லக்குண்டி என்னும் சிற்றூர் இருக்கிறது. பருத்தியும் சோளமும் விளையும் கரிசல் மண்ணைக் கொண்ட சிற்றூர். ஊருக்கு நடுவில் அழகான ஏரியொன்றும் சமணக்கோவில் ஒன்றும் உண்டு. அதையொட்டித்தான் நாங்கள் எங்களுடைய கூடாரத்தை அமைத்திருந்தோம். பொழுது சாய்ந்தபிறகுதான் வேலையிலிருந்து திரும்புவோம். பிறகு ஒரு குளியல். அதற்கப்புறம் நண்பர்களோடு பேசியபடியே ஒரு நடை. எளிய இரவு உணவு. […]

கிரீடமும் ஆடையும் – இசையின் “சிவாஜிகணேசனின் முத்தங்கள்”

This entry is part 12 of 30 in the series 15 ஜனவரி 2012

கவி காளமேகத்தின் பாடல்கள் பகடிக்குப் பேர்போனவை. ஆனால் அக்காலத்தில் அதற்கு சிலேடை என்றும் இரட்டுற மொழிதல் என்றும் வழங்கப்பட்ட்து. அவருடைய பகடியின் மை படியாத எதுவுமே உலகில் இல்லை. பாம்பு, படகு, தென்னை, கடவுள் என மண்மீதுள்ள எல்லாவற்றையும் பாடல்களுக்குள் கொண்டுவந்து வைத்திருக்கிறார். நயமான வரிகளால் நம்பகத்தன்மை மிகுந்த உவமைகளோடு பகடிகளை முன்வைப்பது அவர் பாட்டுமுறை. ஒருமுறை அவர் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றதாக ஒரு கதை உண்டு. தரிசனம் செய்துவிட்டு மண்டபத்தில் வந்து அமர்ந்தாராம். அங்கிருந்த ஒரு […]

வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்

This entry is part 10 of 42 in the series 1 ஜனவரி 2012

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் ஒருநாள் காலை நேரத்தில் கிறிஸ்து கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் நண்பர் கிருஷ்ணசாமி தொலைபேசியில் அழைத்தார். கணையாழியின் வழியாக எல்லோருக்கும் நன்றாக அறிமுகமான என்.எஸ்.ஜெகன்னாதன் என்கிற என்.எஸ்.ஜெ. தில்லியிலிருந்து குடிபெயர்ந்து பெங்களூருக்கு வந்துள்ளார் என்கிற தகவலைச் சொல்லி “சாயங்கலாமா வரீங்களா? அவரப் போயி பாக்கலாமா?” என்று கேட்டார். அக்கணம் ”என்னைக் கேட்டால்” என்று அவர் கணையாழியில் தொடர்ந்து பல காலம் எழுதிவந்த பத்தியின் தலைப்புதான் உடடியாக நினைவுக்கு வந்தது. இலக்கியம், சமூகம், அரசியல், சமயம், பாராளுமன்ற […]

குரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்

This entry is part 24 of 39 in the series 4 டிசம்பர் 2011

பாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி தாவணகெரெ என்னும் இடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. அந்த மாவட்டத்தின் ஆட்சியர் எங்கள் துறைக்கு நுண்ணலை கோபுரமொன்றைக் கட்டுவதற்காக அரசு இடத்தை ஒதுக்கித் தருவதாக வாக்களித்திருந்தார். ஆனால் எழுத்துமூலமாக அதற்குரிய ஆணையை அவர் இன்னும் வழங்காமலிருந்தார். எத்தனை நாட்களானாலும் தங்கியிருந்து வாங்கிவரும்படி எனக்கு நிர்வாகம் கட்டளையிட்டிருந்தது. இரண்டு நாட்கள் அலுவலக வளாகத்திலேயே காத்திருந்தும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பார்வையாளர் வளாகத்தில் அமர்ந்துகொண்டு நான் கையோடு கொண்டுசென்றிருந்த புத்தகங்களையெல்லாம் படித்ததுதான் […]

கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை

This entry is part 25 of 45 in the series 9 அக்டோபர் 2011

பாவண்ணன்   குடும்ப வாழ்க்கையைப்பற்றி என் மனம் வரைந்துவைத்திருக்கிற சித்திரம் மிக உயர்வானது.  என் கல்லூரிக்காலத்தில் அது இன்னும் உயர்வானதாக, லட்சியபூர்வமானதாகவும் இருந்தது.  ”நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு”, “நீயாகியர் என் கணவன், ஞானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே”  என்பவைபோன்ற வரிகள் ஊட்டிய மன எழுச்சியால் என் மனச்சித்திரம் மேலும்மேலும் அழுத்தம் பெற்றிருந்தது.  ஆனால், எதார்த்த உலகில், எங்கள் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் கணவன்மார்களிடம் அடிவாங்கிய வேதனையில் ஒப்பாரிவைக்கிற, கலங்கிய கண்களோடு கைப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அகால […]

வரலாற்றின் தடத்தில்

This entry is part 1 of 45 in the series 2 அக்டோபர் 2011

என் அலுவலக நண்பர்களில் இருவரைப்பற்றி இங்கே குறிப்பிடவேண்டும். ஒருவர் நான்கு நாள்களுக்கு விடுப்பு எழுதிக்கொடுத்துவிட்டு வெளியூர் செல்வார். ஆனால் எட்டு நாள் கழித்துத்தான் திரும்பிவருவார். வந்ததுமே அப்பாவித்தனமான புன்னகையோடு பக்கத்தில் வந்து நிற்பார். அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் ஏதேதோ காரணங்களை அடுக்கி விடுப்பு நீட்டிப்பு விண்ணப்பத்தை அவருக்காக எழுதிக் கொடுக்கும் வேலையை என்னிடம் ஒப்படைத்துவிடுவார். என் முணுமுணுப்புகளை அவர் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. அந்தப் பத்து நாட்களில் ஊர் சுற்றிய அனுபவத்தை அவர் விவரித்துச் சொல்வதைக் கேட்டு மனம் மயங்கி […]

தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்

This entry is part 32 of 43 in the series 29 மே 2011

எண்பதுகளின் இறுதியில் அலுவலக வேலையாக மாதத்துக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டுமுறையாவது கர்நாடகத்திலிருந்து சென்னைக்கு வந்துவிடுவேன். சென்னையில் எங்கள் தலைமை அலுவலகம் இருந்தது. பெரிய அளவில் கேபிள் சேமிப்புக்கிடங்கும் சென்னையில்தான் இருந்தது. நாங்கள் வேலை செய்யும் இடத்துக்கு கேபிள் உருளைகளை சென்னையிலிருந்துதான் சரக்குந்துகளில் ஏற்றி அனுப்புவார்கள். தமிழ் தெரிந்தவன் என்கிற காரணத்தை முன்னிட்டு இந்தப் பயணவாய்ப்பு எனக்குத் தரப்படும். அலுவலக வேலையை முடித்தபிறகு கிடைக்கிற குறைந்தபட்ச கால அவாகாசத்தை நண்பர்களைப் பார்த்து உரையாடவும் புத்தகக்கடைகளுக்குச் செல்லவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்னும் […]