படைவீடு அமுல்ராஜ் . கென்னிப்பன் வூட்டு ஐயப்பன மிஞ்சரதுக்கு ஒருத்தனும் இருந்ததில்ல ஊருல … அவங் செதுக்கித்தர பொம்பரத்துக்கு ஒரு கூட்டம் எப்பயும் அவங்கூட சுத்தும் … பொம்பரத்துக்கினே காட்டுக்குப் போவாங் … பொர்சிமரம்தான் பொம்பரத்துக்கு எத்ததுன்னுவாங் … சிலநேரத்துல அவுஞ்ச, கொடுகாலி, துரிஞ்ச மரங்கள தேடுவாங் … பொம்பரம் செதிக்கித்தரகேட்டா ஆணி உனதா, என்தான்னு கேப்பாங் ஆணிய நாங்குத்தா ஒன்னார்ருவான்னுவாங் ஆணிய அவனே அடிச்சி செதுக்கித்தந்தா ரெண்ருவான்னுவாங் … தெருமுழுக்க அவங் செதுக்கன பொம்பரந்தாங் வெளையாடும் […]