author

இரு கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 18 செப்டம்பர் 2016

    பொட்டுகள் வீட்டு விசேஷம் முடிந்து அனைவரும் போன பின்பும் மீட்டுத் தருகின்றது பல பெண்களின் நினைவுகளை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள் … குறிகள்  எவ்விடத்தில் காற்புள்ளி எவ்விடத்தில்  அரைப் புள்ளி எவ்விடத்தில் ஆச்சரியக் குறி எதனிடையில் குற்றெழுத்து எனும் இடத்தில் கேள்விக்குறி இவையனைத்தும் தெரிந்தபோது தொங்கிப் போய் கிடக்கிறது எழுதி முடித்தக் கவிதை..

ஞானக் கிறுக்கன்

This entry is part 12 of 12 in the series 11 செப்டம்பர் 2016

– பத்மநாபபுரம் அரவிந்தன் – கப்பல்த் தளத்தில் புகை பிடித்தபடி அமர்ந்திருந்தேன் அருகே வந்தமர்ந்தான் அந்த குரோஷியன் .. அமைதியாய் கிடந்த கடலினைப் பார்த்து அவன் சொன்னான் கடல் தூங்குகிறதென்று தூங்கவில்லை சலனம் இருக்கிறது பாரென்றேன்.. அது சலனமில்லை தூங்கும் போது கடல் விடும் மூச்சின் அசைவென்றான் .. இருளிலும் வெண்மையாய் கடலில் மிதந்த சீகல் பறவைகள் கடல் தேவதையின் குழந்தைகளென்றான்… வானில் வேட்டைக்கார நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்தபடி அவை தன் மூதாதையர்களென்றான்… ஓயாது வேட்டையாடி அவர்கள் […]

 ‘முசுறும் காலமும்’

This entry is part 5 of 12 in the series 22 மே 2016

பத்மநாபபுரம் அரவிந்தன் என் பால்ய காலத்தில் வீட்டு மாமரத்தில் இலைகளைப் பிணைத்துப் பின்னி பெருங் கூட்டமாய் கூடுகளில் முசுறெறும்புகள் வசித்தன… மரமேறி மாம்பழங்கள் பறித்துண்ண ஆசை விரிந்தாலும் முசுறுகளை நினைத்தாலே உடலெரியும்.. மாம்பழங்கள் சுற்றி கூடெழுப்பிக் குழுமியிருக்கும் அவைகளின் கூட்டைக் கலைத்தால் உடலில் ஓரிடம் விடாது மொத்தமாய் விழும் விழுந்த நொடியில் கடிக்கும் கடித்த இடத்தில் தன் வால் நகர்த்தி எரி நீர் வைக்கும் எரியும் ஆனால் தழும்பாகாது, தடிக்காது.. உடலெங்கும் சாம்பலைப் பூசி அகோரிகள் போல் மேலே செல்வோம்… […]

கூடுவிட்டுக் கூடு

This entry is part 15 of 22 in the series 27 செப்டம்பர் 2015

  தன் கடும் பயிற்சியில் கைகூடியது அவனுக்கு கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை.. கைகூடியக் கலையை சோதிக்க நினைத்தவன் உயிரிழந்த வெற்றுடம்பைத் தேடியபோது.. எதிரில் நின்றிருந்தது வளர்ப்புப் பூனை கழுத்தை நெரித்து பூனயைக் கொன்றான்.. பூனையின் உடலுள் தன்னுயிர் நுழைத்தான்.. பூனையின் உயிர் உடல்விட்டலைந்தது.. பிணமாய்க் கிடந்த தன்னுடல் அசைவை கண்டதும் பூனை… தன்னுயிர் கொண்டு அவனுடல் நுழைந்து எழுந்து அமர்ந்தது.. அவனது குரலில் பூனை சொன்னது பூனையாய் இருந்த அவனை நோக்கி, ” நீ வித்தை கற்கும் போதெல்லாம்  உடனிருந்து உன்னித்தவனடா நான்.. இனி நீ பூனை… நான் நீ.”என்று…  

குப்பி

This entry is part 8 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன் – அன்று அதிகாலை என் அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்தான் ஒரு வாரத்துக்கு முன்பே கப்பலில் இருந்து விடுப்பில் வந்திருந்தார். முந்தைய நாள் இரவே அக்காவுக்கு லேசாக நோவு எடுத்ததால், அவளை தக்கலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். நானும் அத்தானும், அம்மாவும் உடன் இருந்தோம். அதிகாலை அக்காவுக்கு சுகபிரசவத்தில் குழந்தை பிறந்தது. தாய்மாமனாகிவிட்ட சந்தோஷம் மனமெங்கும் நிறைந்தது. குழந்தையையும், அக்காவையும் அறைக்கு கொண்டு வந்ததும், நான் குழந்தையை அருகில் சென்று […]

நாக்குள் உறையும் தீ

This entry is part 9 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன் சில நாக்குகள் கனலை சுமந்து திரிகின்றன சில நாக்குகள் சதா ஜுவாலையை உமிழ்கின்றன சில நாக்குகள் கனல் சுமக்க எத்தனிக்கின்றன சில நாக்குகள் பிற நாக்குகளின் கனலை ஊதி நெருப்பாக்குகின்றன சில நாக்குகள் கனலை அணைப்பதாய் எண்ணி தவறிப் போய் பெரும் நெருப்பை வருத்துகின்றன.. சில நாக்குகள் தீயை உமிழ முடியாமல் விழுங்கி தம்மையே எரித்துக் கொள்கின்றன மொத்தத்தில் எல்லா நாக்குகளிலும் உறைந்து கிடக்கின்றது தீ … —————————-

ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்

This entry is part 15 of 27 in the series 6 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன் – ஒவ்வொரு நாளும் பொய் சொல்லாமல் கழிப்பதென்பது இயலாமலேயே இருக்கிறது.. நம்மையறியாமல் நம்முள் நிரந்தரமாய்க் குடியேறிவிட்டன பொய்கள். அதிலும் இந்த கைபேசி வந்த பிற்பாடு சகலரும் பொய் மட்டுமே அதிகமாய் சொல்கின்றனர்.. வீட்டில் கட்டிலில் படுத்தபடி வெளியூரில் இருப்பதாக… வெளியூரில் இருந்தபடி வீட்டிலிருப்பதாக… தொடர்ந்து அழைக்கப்படும் அழைப்புகளை எடுக்காமலேயே விட்டு.. மீட்டிங்ஙில் இருந்ததால், சைலெண்டில் வைத்ததாகவும் பல பொய்கள் கூசாமல் உதிர்கிறது ஒவ்வொரு வாயிலிருந்தும். நம்மையழைக்கும் சிலர் எங்கோவொரு மதுபானக் குடிப்பிடத்தில் இருந்தபடி தான் […]

கடற்புயல் நாட்கள்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

காரிருளில் கொடுங் காற்றின் கையசைப்பில் கடிவாளம் இன்றி துள்ளித் திரிகின்றன வெண்ணலைக் குதிரைகள் அவை ஒவ்வொன்றும் கப்பலைத் தகர்க்கும் வெறியுடன் அறைந்து தள்ளும் தாக்குதல் சமாளித்து தன் முழு பலம் திரட்டி உள்ளிறங்கி மேலெழுந்து முன்னேறும் கப்பல் அடிவானக் கூரையில் வேர் நட்டு கடலுக்குள் கிளை பரப்பி விரிந்தெழும் மின்னல் மரங்கள்.. ராட்டினத்தில் இருப்பதுபோல் வயிற்றினுள் குடலேறி கீழிறங்கும் பெருங்குடி குடித்தவனின் நிலைபோல் அலைந்துலையும் கப்பல் ஒவ்வொரு பேரலையும் ஏதாவதொன்றை உடைத்தெறியும் நாங்கள் சாமான்யர்களல்ல சமுத்திர சாமுராய்கள் எனத் தோன்றும்… ஆடும் கப்பல், வீசியாட்டும் தொட்டிலின் நினைவைத் தரும் மாபெரும் ஆழியில் நாம் வெறும் துரும்பென உறைக்கும் நாட்களிவை கடற் பயணத்தின் களையே இது தான் வெளிமனம் சொல்லும் வழக்கம் போலவே கடந்து போய்விடுவோம் உள்மன நினைவிலோ வந்து உறையும் குடும்ப முகங்கள்..    

பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதைகள்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

நழுவிப் போனவைகள்                         அரைத் தூக்க இரவில் தானாய்த் தவழ்ந்து கருத்தும்,கோர்வையுமாய் வார்த்தைகள் பிசகற்று உதித்து வரும் ஒரு கவிதை எழுந்தெழுதும் சோம்பலினால் மறக்காதென்ற நம்பிக்கையில் தூக்கத்துள் புதையுண்டு காலையில் யோசித்தால் ஒரு வார்த்தை கூட நினைவின்றி தவறி நழுவி எனைவிட்டுப் போயிருக்கும் என் கவிதை அக்கவிதை பிறிதொருநாள் வெளிவந்து விழுந்திருக்கும் அதில்  வேறெவரோப் பெயரிருக்கும்..  கிளிமரம்                        உச்சிக் கிளைகளில் வசித்தன கிளிகள்தூரம் பறந்து தேடித் தின்னதேவையற்றிருந்ததுஅவற்றிற்கென்றும்வேண்டிய நேரம்அம்மரக் கனிகள்பறத்தலென்பதுமரம் சுற்றி மட்டும்ஆட்டமும், பாட்டமும்காதலும் கூடலும்சகலமும் அங்கே கட்டியக் கூட்டுள்முட்டையும் பொரிப்பும்வளரும் […]

என் நிலை

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

    உங்களின் சமூகக் கட்டமைப்புள் நான் கட்டுப்படவில்லை என்ற கோபம் உங்களுக்கு.. கட்டமைப்புள் கட்டுப்படாத பெருமை எனக்கு… நீங்கள் சரியென நினைப்பவை அனைத்தும் அபத்த ரூபத்திலழுத்தும் என்னை… என் வழியில் நீங்கள் கடந்து போகலாம் ஆனால் என்னை தள்ளிவிட்டுப் போகவோ அல்லது இழுத்துப் போகவோ நான் சம்மதிக்கவே மாட்டேன் உங்களிடம் இருப்பதோ.. என்னிடம் இல்லாததோ எதுவாயினும் உங்கள் வழி வந்து கேட்பதற்குப் பதிலாய், என்னிடமிருப்பதைக் கொண்டு நான் பேரானந்தமடைவேன் உங்கள் கூண்டுக்குள் நீங்கள் சுழலுங்கள், எந்தன் வெளியில் நான் […]