ப.செந்தில்குமாரி முனைவர்ப் பட்ட ஆய்வாளர், அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம் சங்க காலத்தமிழகம் அரசியலால் சேர, சோழ, பாண்டிய vஎன மூவேந்தர்களின் பெருநாடுகளாகவும், சிறு குறுநிலங்களாகவும், பிளவுண்டு கிடந்தது. ஆனால் மொழியாலும், பண்பாட்டாலும் தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தனர். இந்த மூன்று பெருநாடுகளிலும் வாழ்ந்த புலவர்கள், மூவேந்தர்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்ததை சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. சங்க இலக்கியம் பாடியவர்களில் பெயர் தெரிந்த புலவர்களாக 473 பேர் காணப்படுகின்றனர். இவர்களுடன் சேர, சோழ, பாண்டிய, […]