author

கைகொடுக்கும் கை

This entry is part 1 of 22 in the series 19 ஏப்ரல் 2020

                                                                                             (சிங்கப்பூர்) அதி அவசரத்தோடு நான் அவசரமுடிவோடு நான் என்னை மீற யாருமில்லை யாருக்குமில்லை…… காரண  காரியத்தோடுதான் அன்று அந்த முடிவு அன்றைக்கு அது சரி எனினும் அம்மாக்கள் அம்மாக்களே அவர்கள் எதிர்த்திசையில் இலாவகமாக என்னைக் கையாண்டார்கள் வயது வாலிபம் எல்லாம் வேர்களாய் இருந்தவேளை இப்போது இருட்காடு பயணத்தில் கையும் காலும் தளர்கிற நேரத்தில் கைகொடுக்கும் அந்தக்கை…… இந்தக்கையை இழந்திருந்தால் வெறுங்கை வெளிச்சமாயிருக்கும் தாய்நிலை தனிநிலை எண்ணிக்குளமாகும் தடாகத்தில் ஆனந்தப்பூக்கள் இனியும்சரி எப்போதும் சரி அந்தநாள் […]

கேளுங்கள் …….

This entry is part 2 of 10 in the series 12 ஏப்ரல் 2020

                                            பிச்சினிக்காடு இளங்கோ(10.4.2020)                                                 1,             மனமெல்லாம் இருளாகி                           மகிழ்வெல்லாம் அரிதாகி                           மவுனத்தில்  உள்ளுக்குள்  குமைகிறோம்-எந்த                           மகிமையினால் தீருமென  கரைகிறோம்           2,           என்னென்ன  வழியுண்டோ                          எந்தெந்த  முறையுண்டோ                          அத்தனையும்  செய்துநாம்  தடுக்கிறோம்-வென்று                          அனைவருக்கும் நலம்வழங்க துடிக்கிறோம்           3,            வீணாக அலையாதீர்                          வெறும்பேச்சில் உழலாதீர்                          முகம்மூடி இடைவெளியைப் பேணுங்கள்-விரைவில்                           முகம்மலர நன்மைவரும்  பாருங்கள்          4,            தடுக்கின்ற வழிதேடி […]

விருதுகள்

This entry is part 3 of 7 in the series 5 ஏப்ரல் 2020

                                                                                             பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) அது ஓர் அடையாளம் என்பதால் ஓர் ஈர்ப்பு இல்லாமலிருந்ததில்லை இப்போது மனநிலை அப்படியில்லை அப்படியொன்றாக அதுவுமில்லை அவ்வளவுக் கடைச்சரக்காகிவிட்டது கடை சரக்காகிவிட்டது ஆம் மிகச்சாதாரணமாகிவிட்டது முகப் பாவங்களினாலேயே பாவங்கள் நிகழ்கின்றன பாவத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது மரியாதை இவ்வளவு மலிவாகவா? பெருமூச்சை தவிர்க்கமுடியவில்லை ஒரு வரவு தள்ளிப்போடப்பட்டிருக்கிறதே தவிர சிந்தைச்செலவில் தடங்கல் இல்லை அது கைகூடியோர்  எல்லாம் கையில் எடுப்பதை நிறுத்திவிட்டார்கள் ஒரு மந்த மனநிலையில் இப்போது அது வராமலிருப்பதும் வரவுதான் […]

உயிர்த்தோழி

This entry is part 3 of 9 in the series 3 பெப்ருவரி 2019

    தொடக்கம்: 31.1.2019)     நீ எனக்கும் நான் உனக்கும் வாய்த்தது வரம்   பெருமையாய்ச்சொன்னால் பிறவிப்பயன்   உனக்கு நான் ஒரு பொருட்டல்ல எனக்கு நீ பொருள் ,புகழ்   உனக்கு நான் என்பதைவிட எனக்கு நீ எல்லாம்..   உன்னால் உலவும்போதும் உன்னோடு குலவும்போதும் மெளனமாய் எதிரிகள் உருவாகிவிடுகிறார்கள்     கவலையில்லை இருமடங்கு ரசிகர்கள் கிடைப்பது ரகசிய அதிசயம்   பயணங்களில் எல்லாம் எனக்குப் பரிசுகள் வரவு   பொறாமைக்காரர்களால் […]

மாயக்கனம்

This entry is part 4 of 9 in the series 3 பெப்ருவரி 2019

பிச்சினிக்காடு இளங்கோ(18.12.2018)     சாங்கி விமானநிலையம் முனையம் மூன்றில் வந்து இறங்கி குல்லிமார்ட் குடியிருப்பை நோக்கி பயணிக்கும்போது திருச்சி விமான நிலையத்தில் இறங்கி ஊருநோக்கி பயணித்தது மனம். உடல் இங்கே, உள்ளம் அங்கே என்கிற நிலை அப்போது. என்னசொல்லியும் கேட்கவில்லை மனம். தீவு விரைவுச்சாலையில் வேகமாய்ப் பயணிக்கும்போது மனம்மட்டும் தாவிச்சென்றுவிட்டது. சாலை இருபுறமும் இருக்கும் செடிகள், பூக்கள், முன்னே போய்கொண்டிருக்கும் வாகனங்களனைத்தையும் கண்கள் நோட்டமிட்டாலும் மனம் பார்க்கச்சென்றது அம்மாவை.  அம்மாவுக்கு வயது 90த்தாண்டியிருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும்  […]

மழைசிந்தும் குடை

This entry is part 4 of 5 in the series 16 டிசம்பர் 2018

  பிச்சினிக்காடு இளங்கோ (3.12.2018 காலை 9.30க்கு எம் ஆர்டியில்) எப்போதும் அது அழகாக இருக்கிறது. இருவேறு வேளையிலும் அது அதன் அழகை இழந்ததில்லை   வைரங்களைக் காட்டும்போதும் காதோரம் சிவப்பாகி மறையும்போதும் அழகுக்கு என்ன பஞ்சம்?   பார்க்கத்தவறியது தவறல்ல பார்த்தும் ரசிக்கத்தெரியாதது குறை ரசிக்கத்தெரிந்தும் புதைத்தது குற்றமல்ல அது பாவம்   அது எப்போதும் அழகாகவே இருக்கிறது   எந்தவேளையிலும் அது அதன் அழகை இழந்ததில்லை   அது அழுதது அதிகம்   அது […]

கற்பனை மாத்திரை

This entry is part 6 of 9 in the series 2 டிசம்பர் 2018

    (15.11.2018 எம் ஆர் டி )     அலைபாய்கிறது பறவைகள் அதுவேண்டும் எனவேண்டி   இப்படித்தான் அப்படித்தான் இங்கேதான் அங்கேதான் என்பதில் கவனமிழக்காமல் எப்படியாவது என்பதில் செலுத்துகிறது கவனத்தை   உட்கார்ந்து பார்க்காத மரங்களில்லை கூடுகட்டிப்பார்க்காத கிளைகளில்லை   வனங்களைத்தாண்டியும் பறந்துபார்க்கிறது பிடிபடவே இல்லை இதுவரை     உண்டியல் ஓரளவு நிறைந்தே இருக்கிறது   இன்னும் உண்டியலை நிரப்பும் அளவுக்கும் இருக்கிறது   எனினும் அதுவேண்டி அலைபாய்கிறது பறவைகள்   அது […]

அதன் பேர் என்ன?

This entry is part 1 of 6 in the series 11 நவம்பர் 2018

கனக்கிறது பொழுதெல்லாம்! எந்த அலகுகள்வைத்தும் அதன் எடையைச் சொல்லமுடியாதது! தராசில்வைத்து எடைபார்க்கமுடியாதது! இறைவனைப்போல வடிவமில்லாதது! காற்றில் கலந்திருக்கும் தூசாகவுமில்லை மாசாகவுமில்லை சுவாசக் காற்றாகவுமில்லை ஒவ்வொரு கணமும் ஏதோவொன்று காரணமாகிவிடுகிறது என் எடை கூடவில்லை எனினும் கனக்கிறதே! அறிந்தவர் கூறுங்கள் அது என்னவென்று? அதுவரை என்கவலை தொடரும்….. (9.11.2018 பிற்பகல் 2மணிக்கு அலுவலகத்தில்)

அறுவடை

This entry is part 7 of 10 in the series 14 அக்டோபர் 2018

பிச்சினிக்காடு இளங்கோ 28.9.2018) அனைத்துப்பையிலும் அதுதான் இருக்கிறது அதற்காகத்தான் உயிர்வளி நுழைந்து திரும்புகிறது அதுவே முதன்மையெனில் அதுமட்டும் எப்படி சாத்தியம்? விழுந்து விழிதிறக்காமல் சிரித்துச்செழிக்காமல் ஆயுதம் இருந்தும் ஆவதென்ன? விளைச்சலுக்கு விழுக்காடு குறைவுதான் அதற்காக என்பதிலே இருக்கிறது……. பொருள்படப் பொழுதை இழப்பதை விடுத்து சாக்குப்பையோடு அழைவதில் பொருளில்லை எனினும் அதற்கான அலைச்சலில் பெருவிழுக்காடு சுவாசித்துக்கொண்டிருக்கிறது சுவாசம் விலங்கிற்கும் தாவரங்களுக்கும் பொதுவானது அதுவா இலக்கு? அதுவா பயணம்? எச்சத்தால் பேசப்படும் ஒரு பேச்சுக்காகவே ஐம்புலன்களளும் சுவாசமும்.

இராவணன்களே…..

This entry is part 5 of 8 in the series 30 செப்டம்பர் 2018

பிச்சினிக்காடு இளங்கோ அடிப்படையில் அனைவரும் பத்துத்தலையோடுதான் வடிவமைக்கப்படுகிறார்கள் பத்துத்தலையில் சிலவற்றைக் குறைத்துக்கொண்டவர்கள் தலைமுறைக்குத் தேவைப்பட்டார்கள் சிலவற்றில் சிரத்தையும் சிலவற்றைத் தவிர்த்தும் வாழ்ந்தவர்கள் தலைவர்களானார்கள் நமக்குத் தத்துவமானார்கள் தத்துவம் தந்தார்கள் தலைமுறைகள் பேசவேண்டுமானால் உங்கள் கவனம் சில தலைகளில் மட்டுமே இராமராக இராமனே இல்லை ஏனெனில் இராமனே இல்லை தனக்கான தமக்கான பற்றுதலைத் தவிர்த்து மானுடப் பற்றுதலைப் பற்றினால் பற்றுதலால் வரும்வினை பற்றாது இதயங்களிலெல்லாம் உங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் வன்முறைக்கு எதிரான கோபம் வறுமைக்கு எதிரான வேகம் உயிர்கள்மீதான […]