author

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1

This entry is part 19 of 26 in the series 13 ஜூலை 2014

        (Michael Baigent) இதுதான் மெய்யியல் என்று மெய்யியலுக்கு திட்டவட்டமான வரையறை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. பொருட்களின் உண்மை குறித்து ஆய்வது மெய்யியல் என்கிறார் திருவள்ளுவர். கண்ணால் கண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நம்மிடம் ஒரு முதுமொழி உண்டு. இவ்விடத்து மெய் என்பது உண்மை, என்ற சொல்லுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. ஆனால் உண்மை மட்டும்தான் மெய்யியலா? எது உண்மை? உண்மையை […]

திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…8

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

அத்தியாயம்…8 புதியமாதவி, மும்பை திராவிட இயக்கம் பெண்ணிய தளத்தில் ஏற்படுத்திய சமூகப்புரட்சி மிகவும் போற்றுதலுக்குரியது. அந்தப் புள்ளியில் பெரியார் ஒருவர் மட்டுமே இந்த நூற்றாண்டின் தன்னிகறற்ற போராளியாக திகழ்கிறார். இன்றைய நிலை என்ன பெரியாரை நான் வாசித்ததில்லை என்று சொல்லிக்கொண்ட தமிழகத்து பெண்ணியவாதிகள் கூட தற்போதெல்லாம் பெரியாரைப் பற்றி பேசிக்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது, என்றாலும் ஏதோ பேஷன் மாதிரி ஊறுகாய் மாதிரி தொட்டுக்கொள்கிறார்களோ என்ற சந்தேகம் என்போன்றவர்களுக்கு ஏற்படுகிறது. ஏனேனில், பெரியார் பெண் பிள்ளைபெறும் எந்திரமல்ல என்று […]

திராவிட இயக்கத்தின்  எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…7

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

புதியமாதவி, மும்பை   அத்தியாயம்…7   திராவிட இயக்கம் முன்வைத்த சமூகப்புரட்சிக் கருத்துகளில் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பார்ப்போம்.     பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கை வழிவழியாக தமிழர் வாழ்வியலின் மெய்யியலைப் புறக்கணித்தது.   கடவுள் என்பது மனிதச் சமூகம் படைத்துக் கொண்ட ஒரு கருப்பொருள். உலகின் முதற்பொருள் நிலமும் பொழுதும் என்று சொன்ன தொல்காப்பியர் நிலம், பொழுது ஆகியவற்றின் இயக்கம் சார்ந்து தோன்றும் கருப்பொருள்களாக பறவை, விலங்கு என்று பட்டியலிடும் போது நிலம் சார்ந்த கருப்பொருள்களில் ஒன்றாக […]

அத்தியாயம்…6 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

புதியமாதவி, மும்பை அத்தியாயம்…6 திராவிட இயக்கத்தின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்த ஒரு தலைமுறை கேட்டது… சூரியனே , உனக்குச் சூடில்லையா? உனக்கு மட்டும் சாவி, எங்களுக்குப் பூட்டா? என்று. ஆனால் இக்கேள்விகள் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே இருந்தது என்பது தான் உண்மை. ஏனேனில் திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தப் பின் திமுகாவில் சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக 1971ல் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்று கலைஞரின் தலைமையில் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தப்பின் நகர்ப்புறத்து முதலாளிகளும் கிராமப்புறத்து […]

அத்தியாயம் 5 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

புதியமாதவி மிகக் குறுகிய காலத்தில் திராவிட இயக்கம் அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அந்த வெற்றிக்குப் பின் என்ன ஏற்பட்டது. சரிவை நோக்கி இந்த இயக்கம் போனது அல்லது போய்க்கொண்டிருக்கிறது. எப்படி இது ஏற்பட்டது? காரணங்கள் என்ன? திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்புகள் இரண்டு : ஒன்று நாடகத்துறை , இன்னொன்று பத்திரிகைதுறை. திராவிட இயக்க நாடகங்கள் என்ற கட்டுரையில் வெளி. ரங்கராஜன் அவர்கள் சில கருத்துகளை முன்வைக்கிறார். அதை அப்படியே கொடுத்திருக்கிறேன். […]

திராவிட இயக்கம் எழுச்சியும் வீழ்ச்சியும் அத்தியாயம் 4

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

புதியமாதவி   அத்தியாயம் 4   தந்தை பெரியாரின் காலத்தில் திராவிட இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தில் ஒன்றிணைந்தார்கள். இந்த ஒன்றிணைதலை   மிகச்சரியாக அறுவடை செய்தவர் அறிஞர் அண்ணா எனலாம். இது திராவிட இயக்கத்தின் நான்காவது  கட்டம். அரசு, அதிகாரமையம்  என்ற பாதையை  நோக்கிய பயணம். அண்ணாவின் பேச்சும், எழுத்தும்  அறிவுத்திறனும் இயக்கத்தை நடத்திய விதமும்போற்றுதலுக்குரியவை. இக்காலக்கட்டத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் உருவான இந்திய தேசத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக […]

திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3

This entry is part 2 of 25 in the series 20 ஏப்ரல் 2014

  நீதிக்கட்சியின் காலம்வரை பிராமணரல்லாதோரின் ஒன்றிணைதல் என்பது முழுமையடையவில்லை. ஆனாலும் கூட மேலைநாட்டுக் கல்வியும் அதன்வழி அவர்கள் சிந்தனையில் ஏற்பட்ட சமத்துவகோட்பாடுகளும் நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய சமூக மாற்றங்களை அரசு சட்டத்தின் மூலம் கொண்டுவந்தது. அக்காலச்சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அச்சட்டங்களை மிகப்பெரிய சமூகப்புரட்சி என்றே சொல்லலாம்.   நாடகம் பார்க்க பஞ்சமர்க்கு இடமில்லை என்று நுழைவுச்சீட்டில் அச்சடித்து வெளியிட்டக் காலக்கட்டம், பச்சையப்பன் அறக்கட்டளை நடத்தும் கல்விநிலையங்களில் ஆதிதிராவிடர், கிறித்துவர், இசுலாமியர்கள் சேர முடியாத காலக்கட்டம். பேருந்துகளில் ஆதிதிராவிடர்கள் […]

திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

இவர்களுக்கு ஏற்படும் முதல் கூட்டு ஒரு அரசியல் கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணியாக இருக்கிறதே தவிர இவர்களே முழங்கும் சமத்துவம் என்ற சமூகப்புரட்சியின் காரணமாக அமையவில்லை. என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.   அவர்களாகவே முன்வந்து ஆதிதிராவிடர்களும் திராவிடர்கள் தான் என்றோ பிராமணர் அல்லாதோர் என்று தாங்கள் ஏற்படுத்தி இருக்கும் அமைப்பின் உள்வட்டத்தில் வருவதற்கு உரிமை உள்ளவர்கள் என்றோ உணர்ந்த காரணத்தால் கூட்டணி அமைத்ததாக தெரியவில்லை. அன்றைக்கு ஒட்டுமொத்த பிராமணர் அல்லாதாரின் பிரதிநிதியாக தங்களை மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள […]

திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – 1

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

அத்தியாயம் 1   திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் கோவையில் கடந்த டிசம்பர் மாதம் கடைசி சனிக்கிழமை பேச அழைத்திருந்தார்கள். சனிக்கிழமை : 28 -12 2013 காலை 10 தமிழ்நாடு இலக்கியப்பேரவையில் திராவிட இயக்கம் அன்றும் இன்றும்     இடம்: பொதுசன சங்கம் அறக்கட்டளை, நடராசா வாசகசாலை 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை 45.   ஏற்கனவே, என் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் அடுத்த நாள் இருந்ததால் போவது […]

பெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல்

This entry is part 2 of 29 in the series 12 ஜனவரி 2014

திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். பெண்ணிய உரையாடல்கள், ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழலில் நடந்த கருத்தரங்கம் குறித்த சுற்றறிக்கை: பெண்கள் சந்திப்பு சார்பாக மும்பையிலிருந்து நான் அனுப்புகின்றேன். திண்ணையில் வெளியிடும்படி பெண்கள் சந்திப்பின் அ. மங்கை, வ. கீதா, மற்றும் ரேவதி சார்பாக… புதியமாதவி   கருத்தரங்கு அறிக்கை   இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் […]