மரப்பாச்சி பொம்மை மறைத்து மயில் தோகை பக்கம் மறந்து பைசா கைச்செலவு தவிர்த்து குச்சு ஐஸ் பிசுபிசுப்பு விலகி பள்ளிக்கூட வாசல் நெல்லிக்காய் இழந்து, தெருக்கோடி விளையாட்டு அறுத்து என் மகனும் பழமைத்துவம் அளித்த நவீனத்துவம் பழகுகிறான் செயற்கையாய்…….. ராசை நேத்திரன்