கண்தொட்டவரையில் நீண்டுகிடக்கும் இந்த இரவின் பாலத்தில் நத்தையின் முதுகேறி ஊர்கின்றன நிமிடங்கள் தண்டவாளங்களை வெறிக்கிறது பூமிதின்ற நிலவு கிளையசைவிற்கு எந்த வாகனமும் நிற்கவில்லை ஒலியோடு ஒளிவெள்ளமென சகலமும் வழிந்தோடுகிறது ஒரு பெரும்பள்ளத்தில் சாம்பல் சிறகுகள் இறைந்து கிடக்கும் இச்சிறுவெளியின் நிறமென்று அழியும் அலைந்து திரியும் பறவைகள் மறைந்து போகுமொரு கணத்தில் நிறமுதிர்ந்து அற்றுப் போகுமது நீடிக்கக் கடவதாக அத்தேவகணங்கள்.
போதைக்காக அல்லாமல் பொழுதைக் கழிக்கவே புகைக்கிறான் மதுவின் துளிரசம் அருந்தியதில்லை இதுவரைக்கும் போதையில் உளறும் தந்தையாலே குடியை வெறுத்தான் என்றபோதிலும் புகைக்கும் அவரது தோரணையே அவனது சிகரெட் ஈர்ப்புக்கும் காரணம் என்ற செய்தி ரசிப்பிற்குரியதாய் இல்லை அவருக்கு அன்றிலிருந்து அப்பா சிகரெட்டை ஒழித்தார் என்ற ஒற்றை வரியோடு டைரியை மூடிவிட்டு தொடர்ந்து புகைத்துக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் இருக்கிறது ஒரு தீக்குச்சி இருக்கட்டும் அதுவல்ல இக்கவிதையின் கருப்பொருள் அவன் புகைத்து அணைத்த முதல் சிகரெட் இப்பொழுது கண்விழித்து […]
1. சும்மா கிடந்த காற்றை சுழட்டி சுற்றுகிறது மின்விசிறி தாள்களுக் கிடையே நுழைந்து வழிந்தோடி ஆடைகளை அசைவித்து திரைச்சீலைக்கு பின்னால் ஒளிந்து விளையாடும் குட்டிகள் தீண்டிவிடாமல் எரியும் சுடரொன்று கண்ணாடிச் சுவர்களுக்குள் சிரிக்கிறது சிமிட்டுகிறது 2. காற்றில் கயிறு திரித்து உள்ளே இறங்கினேன் பிடி இறுக இளகிய கயிறு நூலானது நூல் பிடித்து ஆழம் போனேன் சேர்ந்த இடத்தில் பிடி இல்லை நூலும் இல்லை கால நேரம் தெரியவில்லை இடமே இல்லை இமையற்ற கண்ணொன்று விழித்திருந்தது.