என் நிழலுக்குள்ளேயே அவன் நிழல்கூட விழாதுதான் அடங்கி நடந்துகொண்டிருந்தான் குழந்தை. கேள்விகள் காம்பாய் வளைந்திருக்க அவன் பதில்கள் அதில் ஆச்சர்யமாய்ப் பூத்திருந்தன. ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கும்போதே தடம் மாறியதறியாது வேறொன்றில் நின்று கொண்டிருக்கும் மனம் குழந்தைக்கு மட்டுமில்லாது எனக்கும் ஆனதில் மீன்களின் ஞாபகம் வியாபித்திருக்கும் குளத்தின் நினைவில் கருக்கொண்டிருந்த கவிதை விளைத்தமௌனத்தில் துணுக்குற்றவனின் கவனம் ஈர்க்க ” ஒரு ஊரில் ” என ஆரம்பித்தால் சொல்லிவிடப் பயிற்றுவித்திருந்த ராஜவம்சத் தொடரைச் சொல்லத் தூண்டியபோது சொல்லாது வேரோடு அறுத்து […]
ஆரங்கள் கொஞ்சம் குறைந்து போன சாரநாத் சக்கரங்களைக் கட்டை வண்டியில் பூட்டி சந்திக்கத் துடிக்கும் கொம்புகளில் காவி-வெள்ளை -பச்சை பூசி தேசியமயமாக்கி… உமிப்போர்வையில் உறக்கம்போட்ட விதை நெல்லை எழுப்பி வந்து ஆடியில் காயம்பட்ட மண்ணில் எறிந்து… பாஞ்சலி பூமிக்குத் தலையெண்ணை தடவி… பஞ்சாங்கம் புரட்டி மேட்டுர் அணையை வானொலியில், செய்தித் தாளில் எதிர்பார்த்து… சேற்றில் கால்புதைத்து பாட்டுப் பாடி பொய்களைப் புடுங்கி உண்மைகளை நட்டு வைத்து… டெமக்ரானில் தாளடிப் பூச்சியை சந்தித்து என்ட்ரோ சல்ஃபானில் தத்துப் பூச்சியைக் […]
அவனுக்குத் தியாகையன் என்று பெயர் வைத்ததால் சங்கீதத்தில் ஆர்வம் வந்ததா அல்லது சங்கீதம் அவனுக்கு நன்றாக வரும் என நினைத்து அவன் அப்பா பஞ்சரத்னம் அப்படி ஒரு பெயரை அவனுக்குச் சூட்டினாரா என்று தெரியவில்லை. அவன் அம்மா நாகரத்தினம்மாவிற்குப் பையனின் நாமகரணத்தில் எந்தவித பங்கும் இல்லையென்றாலும், பையன் அழும்போதுகூட கலப்படமே இல்லாத சுத்தமான முஹாரி ராகத்தில்தான் அழுவதாகப் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தாள். பஞ்சரத்தினமும் சங்கீத ஆர்வலெரெல்லாம் ஒன்றும் இல்லை. அவரின் தாத்தா திருவையாறில் குடியிருந்தபோது இவர் பிறந்ததால் முதல் […]
கிறிஸ்துமஸுக்கு முன்னாலேயே வீடுகளின் முன்புறத்திலேயோ அல்லது மரக்கிளைகளிலோ கட்டித் தொங்கவிடப்பட்ட நட்சத்திரக்கூண்டுகளின் கலர்ப்பேப்பர்கள் டிசம்பர் மாதத்தின் அசாத்தியப் பனிப்பொழிவில் வண்ணம் வெளுத்து உள்ளிருக்கும் முட்டை பல்பின் மஞ்சள் ஒளி அடுத்த ஆண்டின் பிறப்பிற்கு மங்கலமாய்க் காத்திருக்கும். கூராய்ச் சீவின பென்சிலை நட்டுவைத்தது போல இருக்கும் கிறிஸ்துவ தேவாலயங்களின் கோபுரத்தின் உச்சிவரை இழுத்து நான்கு புறங்களிலும் அலங்காரமாய்த் தொங்கவிடப்பட்ட சீரியல் விளக்குகளும், மின் மாயத்தினால் மறைந்து மறைந்து தோன்றும் சிலுவையும் அதைப்போன்றே அப்படி மறைந்து பின் தோன்றுவதால் இருபுறமும் […]
மலையென்றால் அது ஒன்றும் பெரிய மலையல்ல. ஒரு குன்றுதான். அதன் பின்புறம் ஒரு பெரிய தண்ணீர் டேங்க் உண்டு. ரயில்வே க்வார்டர்ஸ் முழுவதற்கும் குடிதண்ணீர் சப்ளை இதிலிருந்துதான். மலைக்குன்றின் முன்புறம் மேலே வழக்கம்போல முருகனும் கீழே பொன்னேஸ்வரி அம்மனும் அருள்பாலித்துக்கொண்டிருப்பார்கள். ஆஸ்திகப் பெருமக்களுக்கு தெய்வீகமாகவும் இளைஞர்களுக்கு ‘லவ்’கீகமாகவும் சிறுவர்களுக்கு விளையாடவும், வாழ்க்கையை வெறுத்தவர்களுக்கு முடிவாகவும் அந்தக் கோவிலும் டேங்கும் திகழ்ந்துகொண்டிருந்தன. கிறிஸ்தவர்களுக்கு மூன்று அழகிய தேவாலயங்கள் ஊரின் நடுவிலும், மேற்கிலும் மற்றும் வடக்குக் கோடியிலும் வழிபாட்டுக்கென இருந்தன. […]
மாரியம்மன் கோவில் பஸ் ஸ்டாப்தான் கடைசி ஸ்டாப். நிறைய தூங்குமூஞ்சி மரங்களும் ஒன்றிரண்டு வேப்பமரங்களும் சூழ்ந்த இடத்தில், பஸ்கள் ஒரு அரைவட்டமடித்து, கடல் அலைமேல் பயணம்போல் இரண்டு பள்ளங்களில் குதித்தெழுந்து, எல்லை தாண்டி வந்த பக்கத்துத்தெரு நாயைப்பார்த்து நம் நாய் ஆக்ரோஷமாய் உறுமுவதைபோல் ஒரு சவுண்டைக்கொடுத்துவிட்டுப் பின் சாந்தமாகிப்போகும். வந்த உடனே பஸ்கள் கிளம்பிப்போவது என்பது எப்போதாவதுதான். ஸீட்டிற்குக் கீழே போட்டிருந்த சூடான டவலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு ட்ரைவர்கள், கண்டக்டர்களோடு அந்தப் பெரிய தூங்குமூஞ்சி மரத்தின் […]
ரயில்வே காலணியின் கோடியில் அமைந்திருந்த அந்த இரண்டு ப்ளாக்குகள் எங்களுக்கு அமானுஷ்யமாகத் தெரியும். அவற்றின் முன்புறம் ஒரு பெரிய புளியமரம் அடர்ந்து கிளைபரப்பி நிற்கும். சாதாரணக் குருவிகள், காக்கைகள் மற்றும் எப்போதாவது குரல் கொடுக்கும் கிளிகளோடு பெயர்தெரியாத பல இறகு ஜீவன்கள் அந்த மரத்தில் காலை நேரத்தில் உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கும் . பின்புறம் பம்பிங்க் ஸ்டேஷனும் அதைத்தொடர்ந்து நாங்கள் அதிகம் பார்க்கக்கிடைக்கும் நத்தைகள் ஊறும் யானைப்புல் காடும் நீண்டிருக்கும். புளியமரம் ஆயிரம் வருஷங்களாக அங்கிருப்பதாகவும் அதில் […]
கார்த்திகை மாதத்து இரவுகளில் காற்றில் ஈரம் அதிகம் அடர்ந்திருக்க, பேருந்துகளிலோ ரயிலிலோ பயணிக்கும்போது முகத்தில் மோதும் குளிர்ச்சி கொடுக்கும் கிளர்ச்சி வார்த்தைகளுக்குள் அடங்காது. ஆனால், நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் ஜன்னல் திறந்திருப்பதை அனுமதிக்கவே மாட்டார்கள். வண்டி ஓடும்போது, தூரத்து மரங்களும் வீடுகளும் மனிதர்களும் மெதுவாகவும், அருகிலுள்ளவை யாவையும் வேகமாகவும் நகரும் பௌதிகம் புரியாத நாட்களிலும், ரயிலில் பயணிக்கும் இரவு நேரங்களில் வயல்களின் நடுவே உள்ள பம்ப் ஹவுஸின் வெளியே நிற்கும் லைட் போஸ்ட்டின் தலையிலிருந்து தொங்கும் குண்டு […]
பொதிப்பொதியாக மேகங்களைக் காற்று சுமந்துகொண்டு போகிறது. கண்ணுக்குத் தெரியாத யாரோ பொத்துவிட மேகம் உடைந்து மழை கொட்டுகிறது. இப்படித்தான் அக்கா சொல்லிக்கொடுத்தாள். இதற்குமேல் சொன்னால் எனக்குப் புரியாது என்று அவள் நினைத்துச் சொன்னதில் நான் அவ்வளவாகத் திருப்திப்படவில்லை. மழையின் வெவ்வேறு தாளகதியில் அமைந்த இசையும், ஜன்னலின்பின் தங்கமாய் நெளிந்து கலைடாஸ்கோப் ஜாலம் காட்டும் மின்னலும் மழை இரவுகளுக்காக மனதை ஏங்கவைக்கும். மழைக்கு அடுத்த நாள் காளான்கள் வாமனரின் குடைகளாக முளைத்து நிற்பதையும், புற்களெல்லாம் பற்றியெரிகிறப் பச்சையைப் பூசிக்கொண்டு […]
சீக்கிரம் இருட்டிவிடுகிறது இப்போதெல்லாம். இரவு போர்த்திக்கொள்ளும் அளவுக்குக் குளிர்கிறது. வெயில் சாய்ந்தபின் நிறைய விதமான பூச்சிகள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் மொய்த்தெடுக்கின்றன. பல வண்ணங்களிலும் அளவுகளிலும் பறந்தோ ஊர்ந்தோ வந்துவிடுகின்றன. சில புழு போல தவழ்ந்து போகிறதே என்று நினைக்கும்போதே அவை சட்டெனத் தாவிப் பறக்கும். இவற்றை விரட்டுவதும் கஷ்டம். கால் கைகளில் உட்கார்ந்தால் கூடப் பரவாயில்லை. முதுகில்போய் உட்கார்ந்து கடிக்கும். அடிக்கும்போது விட்டலாச்சார்யா படம்போல மாயமாய் எங்கோ போய்விடும். எப்போதாவது தவறி சரியாக அடித்துவிட்டால், சாவதற்குமுன் சுள்ளென்று […]