படம் பார்த்தேன். கொலையாளி யார் என்கிற பார்வையாளனின் கேள்விக்கு படம் முழுவதும் வெவ்வேறு மனிதர்களை காட்சிகள் வாயிலாகவும் , வசனங்கள் வாயிலாகவும் சூசகமாக கைகாட்டிவிட்டு, இறுதியில் கொலையாளியை அடையாளம் காட்டுகிறது கதை. திரைப்படம் மூலம் இயக்குனர் சொல்ல வரும் மனப்பிணி குறித்து சொல்வதானால், ஒரு நாவலே எழுதலாம். இந்த உலகில் போனால் திரும்பி வராத, இழந்தால் திரும்பவும் பெறமுடியாதவைகளுள் ஒன்றே கதையின் மையம். மரணம் நிகழ்கையில், அதைப் பார்த்தவர்கள் தவறுதலாக பச்சை நிற கார் தான் விபத்துக்கு […]
ராம்ப்ரசாத் பேரண்டம் முப்பரிமாணங்களை கொண்டது. அதனோடு, காலம் நான்காவது பரிமாணமாகிறது. இதை ஸ்பேஸ்டைம் (Spacetime) என்கிறார்கள். இதை ஒரு அலையாக கொண்டோமானால், பேரண்டத்தில் ஈர்ப்பு விசை கொண்ட ஒவ்வொரு வஸ்துவினது ஈர்ப்பு விசையிலும் , அதனருகில் வர நேரும் பிரிதொரு வஸ்துவினால், ஈர்ப்பு விசை அலையில் வேறுபாடு உருவாகும். எளிமையாக சொல்ல வேண்டுமானால், ஒரு நீச்சல் குளத்தில் யாரேனும் கால் வைத்தாலோ, அல்லது சிறியதாக இலையொன்று விழுந்தாலோ, ஒரு அலை உருவாகும் அல்லவா. அது போல் என்று […]
எக்மோர் ப்ளாட்பாரத்தை மின்சார ரயில் முழுமையாக அண்டிவிட நேரம் தராமல், உமா என்கிற உமா சங்கர், ப்ளாட்பாரத்தில் குதித்தபோது மணி மாலை 4.40 ஆகியிருந்தது. ஓட்ட ஓட்டமாக ஹைதராபாத் செல்லும் கச்சேகுடா விரைவு வண்டியின் ப்ளாட்பாரத்தை விசாரித்து இரண்டு இரண்டு படிகளாக ஏறி இறங்கி ரயிலை நெருங்க பத்து நிமிடம் கடந்துவிட்டிருந்தது. முகம் சுளிக்க வைக்கும் அலங்கோல சிமென்ட் தரை ப்ளாட்பாரத்தில், ரயில் திண்ணமாக நின்றுகொண்டிருந்தது. ‘ச்சாய்..ச்சாயே’ என ராகமாய் பெரிய சைஸ் எவர்சில்வர் தூக்கு ஒரு […]
சுவற்றில் அட்டை போல் ஒட்டிக்கிடந்த கடிகாரத்தின் சின்ன முள் ஆறில் நிற்க, பெரிய முள் சத்தமில்லாமல் பன்னிரண்டில் வந்து நிற்கையில், வாசல் கேட் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் பக்கத்துவீட்டு ரகு. ஹாலில் அமர்ந்து ஜோதிட மலர் படித்துக்கொண்டிருந்த ராதாவின் அப்பா நீலகண்டனிடம், ‘குட் ஈவ்னிங் தாத்தா’ என்றான். ‘ஆங்..வாப்பா’ என்றார் தாத்தா ஜோதிட மலரில் புதைத்த முகத்தை விடுவிக்காமல். ரகு பக்கவாட்டிலிருந்த ராதாவின் அறைக்குள் நுழைந்து சப்பனிக்காலிட்டு அமர்ந்து, கொண்டு வந்திருந்த பத்தாம் வகுப்பு […]
அன்புடையீர், எதிர்வரும் 10-ஜனவரி-2014 அன்று சென்னையில் நந்தனம் மைதானத்தில் புத்தகத்திருவிழா துவங்க இருக்கிறது. காவ்யா பதிப்பகம் வாயிலாக எனது இரண்டு நாவல்கள் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ மற்றும் ‘முடிச்சு’ தொகுக்கப்பட்டு நாவல் தொகுப்பென வெளியாக இருக்கிறது. எனது நாவல் தொகுப்பு கிடைக்கும் இடம் காவ்யா பதிப்பகம், ஸ்டால் 491 & 492. எனது நாவல் புத்தகத்தின் முன் & பின் அட்டைகளையும், காவ்யா பதிப்பகம் சார்பில் விழா அழைப்பிதழையும் இங்கே இணைத்திருக்கிறேன். 2009 ல் எனது முதல் கவிதை […]
வாசலில் பைக் சத்தம் கேட்டு, ரவி, படித்துக்கொண்டிருந்த நாவலை விரித்த நிலையில் குப்புற மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து சென்று கதவு திறக்கையில், மஞ்சு, மகேஷின் பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். பைக்கின் ஹெட்லைட் ஒளிவீசிக்கொண்டிருந்ததில், எதிர் வீட்டு வாசலில் சடகோபனும், அவர் பையன் சுந்தரும், மனைவி வசந்தியும், மகள் வினோதினியும் நின்றிருந்தது தெரிந்தது. சடகோபனும் அவர் மனைவியும் எப்போதும் போல் சினேகமாய் சிரித்தார்கள். “ஹாய், ரவி” “ஹாய் மகேஷ், பாத்து ரொம்ப நாள் ஆச்சு. எப்படி இருக்கீங்க?” […]
இனி வரப்போகும் பெயரறியா மின்னிக்கென காத்திருக்கின்றன சில கோட்பாடுகளும், தத்துவங்களும்… பழையன தொலைத்துவிட்டு புதியன புகும் நாழிகைகள் காலத்தை மொழிபெயர்க்கத்துவங்கிவிட்டன… கவனங்களின்றி சில பிழைகளின் முகங்கள் பூசிக்கொண்ட அரிதாரங்கள் உரிந்துவிட்டது… இயற்கை எக்காளமிட்டு சிரிக்கிறது உரிந்த அரிதாரங்களின் மீது… – ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
மிதமிஞ்சி உண்டுவிட்டு அடங்காத பசியில் தன்னையும் சேர்த்தே உண்டுவிடுகிறது அந்தக் கரிய துளை… உண்ட மயக்கத்தில் கொண்ட உறக்கத்தில் காணும் கனவுகளிலெல்லாம் முக்காலமும் உணர்கிறது அது… அக்கனவுகளுக்குள் பாதையிட காத்திருக்கிறது சிலிக்கான் சமூகம்…
மண்ணைப் பிழிந்து நீரை உரிஞ்சுகின்றன ஆலமரத்தின் வேர்கள்… தனக்கான நீரின்றி துவள்கிறது அருகிலேயே செவ்வாழையொன்று… குடியோன் பசிக்கு நிழலை அள்ளியள்ளித் தந்துவிட்டு கைபிசைந்து நிற்கிறது ஆலமரம்…