author

ஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்

This entry is part 3 of 31 in the series 11 ஜனவரி 2015

முனைவர் பட்ட ஆய்வாளர் இந்தியமொழிகள் மற்றும் ஓப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 தெலுங்குமொழி பழமையான மொழியாக இருந்தாலும் அம்மொழியை அடையாளப்படுத்துவதற்கான எழுத்துச்சான்றுகள் கி.பி 6 நூற்றாண்டிற்குரியவையாகத்தான் அமைந்துள்ளன. அதன்பிறகு அம்மொழிக்குரிய எழுத்துச்சான்றுக்கான முதல் இலக்கியம் மொழிபெயர்ப்பு இலக்கியமாக மகாபாரதம் அமைகிறது. இதனை இயற்றியவர் நன்னையா ஆவார். இவரின் வருகைக்குப் பிறகே தெலுங்கு மொழிக்கான அடையாளம் கிடைத்தது என்றால் மிகையாகாது. தெலுங்கு மொழியமைப்பை விளக்குவதற்காகச் சமற்கிருத மரபிற்குரிய கோட்பாடுகளைத் தெலுங்கர்களுக்காகச் சமற்கிருதத்தில் இலக்கணம் எழுதினார். இந்நூல் சமற்கிருதம் நன்கு […]

தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்

This entry is part 17 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

ரா.பிரேம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர். முன்னுரை: ஒரு மொழியின்கண் உள்ள எழுத்தமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு போன்றவற்றை வரையறை செய்து விளக்குவது இலக்கணமாகும். இவ்விலக்கணத்தில் மொழியின் வளமை, மரபு மற்றும் கட்டமைப்பு வரையறைகளை விளக்குவதிலும் இலக்கணம் இன்றியமையாத இடம் வகிக்கிறது. உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்குமே இலக்கணக் கட்டுக்கோப்பும் வரையறையும் உண்டு. இவ்வாறு இல்லாமற் போயின் ஒருவர் பேசுவது இன்னொருவருக்குப் புரியாமல் போய்விடும். தென் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த […]