ஆழத்தில் புதைந்த விதை ஒன்று தனது வாழா வெட்டித்தனத்தை எண்ணியபடி அழுகிறது முளைக்கும் காலத்தில் தூங்கிப் போனதால் இறப்பதற்கும் பிழைக்கவும் வழியற்றது புரிகிறது தன்னோடு விதைக்கப்பட்ட விதைகள் யாவும் முளைத்து செடியாய் அவதரித்தது கண்ணுக்குள் விரிகிறது அந்தச் செடிகளின் வேர்கள் தன்னை சூழ்ந்து நெருக்குவதாகவும் அவமதிப்பதாகவும் தோன்ற இன்னும் ஆழத்தில் புதைந்தது. தானும் மீள்வேன் மண் மீது முளைப்பேன் எனும் நம்பிக்கையின் மீது ஒரு நாள் மண் விழுந்தது யுகங்களாய் நடந்த விளைச்சலுக்கு முடிவெழுத பாத்தி கட்டிய […]
செல்வாக்கால் வெளுக்கப்பட்ட மடிப்புக் கலையாத வெண்மை ஆடைக்குள் புகுந்த தலைவர்களால் நிரம்பியது குளிரூட்டப்பட்ட அரங்கு ரத்தக் கறை படிந்த பற்களும் அரிவாளாய் முறுக்கிய மீசைகளும் தங்களது அதிகாரத்தின் எல்லைகளை அளந்து கொண்டிருந்தன தங்களை குபேரன்கலாக்கிய குடிமகன்கள் இருக்கும்வரை பதவிக்குப் பங்கம் இல்லை இந்த வாக்கு எந்திரகளுக்கு சிந்திக்கும் அறிவுமில்லை என்ற ஏளனத்தில் மிதந்தன. அடிமட்டத் தொண்டன் நான் அவையின் ஓர் மூலையில் கறிவேப்பிலையாய் கிடந்தேன் எதிகாலத் திட்டங்களை மனதிலும் குறைபாடுகளை மனுவிலும் வைத்துத் தவித்தபடி தேர்தல் சீட்டுக் […]
இப்படியொரு புயல் அடிக்குமென்று எந்த அரசியல்வாதியும் இதுவரை நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை இப்படியொரு கத்தி கழுத்திற்கு வருமென்று தேசத்தை சுரண்டுவோர் யாரும் சிந்தித்து இருக்கவும் வாய்ப்பில்லை . இந்த தேசத்தேரை நல்வழியில் செலுத்த எந்தக் கறை படியாத கரம் நீளுமோ என்று தவித்திருந்த நமக்கெல்லாம் காலதேவன் நேரம் பார்த்து அறிமுகம் செய்கிறான் அஹிம்சை வழியில் தர்மம் காக்கப்படும் என்று அருள் பாலிக்கிறான். அவர் நாடாள்பவர்களுக்கு இடைமறிக்கும் நந்தியாய் தோன்றினாலும் சமூகத்தின் நற்கதிக்கு வழிகாட்டும் ரூபமகிறார் இன்னொரு காந்தியாய் […]
இரத்தின மூர்த்தி நிறையக் கனவுகள் அதில் புதிய புதிய பரிமாணங்கள் உன்னை சந்திக்க வருகின்ற எனக்குள் என்னைப் பற்றியும் என் இருப்பிடம் பற்றியும் ஒரு நிமிடம்கூட நினைத்தறியாத உன்னைப்பற்றியே நினைத்திருக்கும் எனக்குள் எப்போதும் உன் உலகம் சுழன்றபடியே இருக்கும் கால மாற்றத்தில் நான் பெரிய ஆல மரமாய் வளர்ந்து நின்ற போதும் பால்ய காலத்தில் எனக்குள் நட்பை விதைத்துச் சென்ற உன்னை தாலாட்டி மகிழ விழுதுகளை வளர்த்து காத்திருந்து தவித்துப் போனது உண்டு உன் பாராமுகத்தால் ஏமாற்றங்களை […]
தேர்வு எழுதி முடித்த அடுத்த வினாடி என் மகன் என்னிடம் குதூகலித்தான் விடுமுறை விட்டதென்று படிக்கையில் என்னை பக்கம் வர அனுமதிக்காதவன் பென்சில் எடுக்கக் கூட அவன் அம்மாவை விரட்டியவன் தேர்வு முடிந்ததும் பாட நூல்களை அலமா¡¢யில் நேர்த்தியாக அடிக்கி வைக்கிறான் புத்தகங்களை அடுத்த ஆண்டு இலவசமாகக் கூட யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்கிறான் புத்தகங்கள் அவனை மிரட்டியிருக்கும்போலும். உருவேற்றுவதில் இருந்து மீண்டு வந்தவன் படிப்பதற்கு எந்த உதவியையும் இதனை நாளும் எதிர்பார்க்காதவன் விளையாட்டுத் திடலை நோக்கி […]
உறவினர் எவரேனும் வந்தால் நலம் விசா¡¢க்கும் முன் கேட்பது உங்க ஊர்ல மழை உண்டா என்று மழைக்காக மேகத்தை பார்ப்பதும் வானத்தை வெறிப்பதுமாய் பல நாட்கள் வாடிப்போனதுண்டு மழை மட்டும் இல்லாவிட்டால் உலகில் எந்த ஒரு வேலையும் நடக்கதென நினைப்பதுண்டு கொளுத்தும் வெயிலையும் படுத்தி எடுக்கும் வெக்கையையும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை பெரும்பாலான நேரங்கள் இல்லாத மழைக்கான ஏக்கத்திலேயே கழிந்து கொண்டிருந்தது எப்போது விதைப்பது எப்போது வளர்வது எப்போது அறுவடை செய்வது அதற்கெல்லாம் மழை எப்போதெனும் எதிர்பார்ப்பு ஓங்கியிருந்தது […]
வாழ்க்கையின் வேளைதோறும் நெகிழும் கிழிசல்களை தைக்கிற சின்ன ஊசிக்கு சில நேரங்களில் கனவு நூல்கூட கனமாகிறது சிறு புள்ளியாய் மின்னும் ஒளிக்கு இருண்ட பிரபஞ்சத்தின் திசைகளில் பயணிக்க எத்தனிப்பதும் இன்னும் பிரகாசிக்க முயல்வதும் அகத்திற்குள்ளேயே முடிகிறது. கிளைகளாய் வி¡¢யும் மிக நீண்ட பாதைகளில் பயணமானது எவ்வழியில் என்பதை தீர்மானிக்க காலம் கற்றுத்தராதா என்ற ஏக்கம் மேலிடுகிறது. இலவம் பஞ்சாய் மெல்லியதான இதயவெளியை ஆக்கிரமித்த கால நெருப்பின் நிகழ்வுக் குஞ்சுகள் ஊதிப்பெருக்கின்றன சாம்பலாக்க. எங்கோ சில நேரம் காணாமல் […]
எங்கோ ஒரு கங்காய் தென்பட்டது இன்று பரவிப்பரவி பெரும் நெருப்பாய் எ¡¢கிறது தொலைவில் சிறு துளியாய் கண்டது இன்று பெருகிபெருகி பெரும் சாக்கடையாய் நாறுகிறது நமக்குப் பின்னால் தொடர்ந்திருந்த நிழல் ஒன்று இன்று நம்மையே விழுங்க வருகிறது இலட்சத்தில் ஒருவருக்குப் பிடித்த வியாதி படையெடுத்து எல்லாரையும் தொற்றுகிறது கண்ணுக்குத் தொ¢யாது உழன்ற ஒரு அணு வெடித்து சமுதாயத்தையே அழிக்கிறது. கேவலமாக கருதப்பட்டவை இன்று தம்பட்டம் அடித்து கௌரவமாய் கோலோச்சுகிறது சீரழிவது நாமென்று தொ¢ந்தும் வாயில்லாப் பூச்சியாக வாழப்பழகியதால் […]
மூடிய கண்களுக்குள் விழித்துக்கொண்ட ஒரு யோசனை பூனையை குருடாக்கியது விட்டத்தின் மீதும் மதில் மீதும் விட்டேற்றியாக அலைந்த பூனையை திடீரென குறுக்கிட்ட ஒரு எலி பதுங்க வைத்துவிட கண்டபடிக்கும் வியூகம் அமைக்க வேண்டியதாயிற்று. எலியின் சேட்டை அதிகமானாலும் பூனைக்கு மிகவும் பிடித்திருந்தது வாலைக்கூட ஆட்டாமல் கண்களை முழுசாய் திறக்காமல் பாசாங்கு செய்ய வேண்டிதாயிற்று சிறு குடலை பெருங்குடல் தின்னும் பசியிலும் இரை விழுங்கிய மதப்புடன் சுருண்டு கிடக்கும் பாம்பாய் நடிக்க வேண்டிதாயிற்று. கும்பலாய் கூச்சலிடும் எலிக் கூட்டத்தில் […]
என்றாவது வரும் மழைக்காக அன்றாடம் காத்திருப்பது நிரந்தரமானது வாழத் தவிக்கும் மரத்திற்கு ஞாபக வேர்கள் நீரைத் தேடுவதற்கும் திராணியற்று முடங்கிப்போக வேண்டியதாகிறது உங்களது உறவின் வெளிச்சத்தில் வளர்ந்த எனது நட்பின் கிளைகள் இலையுதிர் காலத்தை சந்திக்கிறது கடந்த காலங்களில் பதித்த தடங்களை தடவிப் பார்க்கவும்., தொலைந்துபோன நட்பின் சிறகுகளை தேடிப் பார்க்கவும் வாழ்க்கை வானில் கவிழ்ந்த சோக இருளைத் துடைக்க மனப்பகிர்வு மின்னலை வெளிப்படுத்தவும் வாய்ப்பு வருமென காத்திருக்கிறேன் காலம் காட்டிய திசையில் காற்றெனப் பறந்த உங்களின் […]