பிறந்த மண்

மணல் குன்றில் விளையாடுகின்றன குழந்தைகள். மலை ஏற்ற வீரர்களைப்போல் அதன் உச்சியில் ஏற நெகிழ்ந்து மண் சரிய சிரிக்கின்றன . மணலில் மலை செய்து அதில் குகைகளைக்குடைந்து கூழாங்கற்களை வாசலுக்குப்பதிக்கின்றன மணலில் சித்திரங்களை,பெயர்களை வரைந்து அழிக்கின்றன. மணலில் செடியை நட்டு நீர்…

காட்சி மயக்கம்

பளிங்கு நீர் சிலை நாரை அழகு அலகு உற்று உற்றுப்பார்க்கிறது சிறு நொடியில் இரையாகப்போகிற செம்மீனொன்று. ரவி உதயன். raviuthayan@gmail.com

பம்பரம்

மிருதுவாக்கிய அடி நுனி ஆணியை நடுநாக்கில் தொட்டெடுத்து சொடுக்கிச்  சுழற்ற தரையில் மிதக்கிறது வண்ணக் குமிழி. சாட்டைக் கையிற்றில் எத்திஎடுத்து உள்ளங்கையில் விடுகிறான். அட்சய ரேகையிலிருந்து இடம் மாறி சிறுவனது ஆயுள்ரேகையின் மீது பயணிக்கிறது சுழலும் பூமிப்பம்பரம்.

கடக்க முடியாத கணங்கள்

  கதவு திறந்து  கடந்த கணத்தில் பதறி சாந்தமடைகின்றன கண்ணாடித்தொட்டிமீன்கள் நின்று விட்டது நனைந்து கொண்டிருந்த குளியலறை பாடல் ஒன்று சட்டென பிரிகின்றன முத்தங்ககொள்ளும் இரு ஜோடி உதடுகள் காண நேர்ந்துவிடுகிற அக்கணம். படபடக்கிறது மேலும் கடக்க முடியாத கணங்களாகி விடுகின்றன…