author

ஜூலையின் ஞாபகங்கள்

This entry is part 2 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

– ப்ரியந்த லியனகே தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் ஜூலை மாதம் குறித்த எனது ஞாபகங்களில் முதலில் பதிவாகியிருப்பது 1980, ஜூலை வேலைநிறுத்தம். அப்பா வேலையை இழந்து வீட்டுக்கு வந்தார். ‘இனி நாங்கள் வாழ்வது எப்படி?’ என அம்மா கேட்டார். ‘நாம் எப்படியாவது வாழ்வோம். வேலை இல்லாமல் போனாலும், நான் ஒருபோதும் உங்களை பசியோடிருக்க விட மாட்டேன்.’ ‘வேலை நிறுத்தத்தை வென்று விட முடியுமா?’ அம்மா கேட்டார். ‘முடியாது. எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லை. ஒருங்கமைப்பு இல்லை. அவ்வாறிருக்கையில் […]

புன்னகையை விற்பவளின் கதை

This entry is part 33 of 47 in the series 31 ஜூலை 2011

– திலினி தயானந்த தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் […]

யாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்

This entry is part 8 of 47 in the series 31 ஜூலை 2011

மொழிபெயர்ப்புக் கட்டுரை – சுனந்த தேஸப்ரிய தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை உங்களது வீட்டில் நீங்கள் செல்லப் பிராணியாகவும் பாதுகாப்புக்கெனவும் வளர்க்கும் நாயின் கழுத்தை வெட்டிக் கொன்று உடலை நடுத்தெருவிலும் தலையை உங்கள் வீட்டு முன்னாலும் வைத்து விட்டுப் போனால் உங்களுக்குள் எவ்வாறான உணர்வு எழும்? அவ்வாறே உங்கள் வீட்டு நாயைப் படுகொலை செய்து சடலத்தைப் பார்சல் செய்து நீங்கள் தண்ணீரந்தும் கிணற்றில் போட்டுவிட்டுச் சென்றால் உங்களுக்குள் எவ்வாறான உணர்வு எழும்? ஒரு இனத்தின் பாதுகாப்பு […]

செல்லம்மாவின் கதை

This entry is part 23 of 34 in the series 17 ஜூலை 2011

– தயா நெத்தசிங்க தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை நாங்கள் அவரை நெருங்கினோம். ‘அம்மா’ என்று அழைத்த உடனேயே அவரது வாடியிருந்த முகத்தில் தோன்றிய பிரகாசம், இன்னும் நினைவிலிருக்கிறது. எனினும், அடுத்த கணமே மழை மேகம் சூழ்ந்த வானம் போல அவரது வதனம் இருண்டது. அவரிடம் சொல்வதற்கு ஏதோ இருக்கிறது. எங்களால் அவரைத் தாண்டிச் செல்ல இயலாது. “அம்மா, வியாபாரம் எப்படியிருக்கிறது?” எனது பயணத் தோழன் கேட்ட கேள்விக்கு, அவர் வெறுமனே புன்னகைத்தார். எனினும் அடுத்த […]

பூமராங்

This entry is part 26 of 38 in the series 10 ஜூலை 2011

கறுப்பென்றால் கறுப்பு அந்தப் பெண் அப்படியொரு கறுப்பு. தொட்டால் விரல்களில் ஒட்டிக் கொள்ளக் கூடுமோ என்ற நினைப்பினைத் தோற்றுவிக்கும்படியான அட்டைக் கறுப்பு. அட்டை, கறுப்பு நிறமா என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. அது எனக்குத் தெரியாது. அவள் கறுப்பு நிறம். அவ்வளவுதான். அணுவளவேனும் வெளிச்சமற்ற ஓர் அமாவாசை இரவில் அவளைத் தனியே நிற்கவைத்து, ஊசித் தும்பிகளின் சிறகடிப்பினைப் போல அடிக்கடி அடித்துக் கொள்ளும் இமைகளை மூடிக் கொள்ளும்படியும், சிரிப்பில் மின்னும் வெள்ளைப் பற்களைக் காட்டக் கூடாதெனவும் கட்டளையிட்டால், […]

சாபங்களைச் சுமப்பவன்

This entry is part 23 of 51 in the series 3 ஜூலை 2011

  நேர் பார்வைக்குக் குறுக்கீடென ஒரு வலிய திரை ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று   பசப்பு வரிகளைக் கொண்ட பாடல்களை இசைத்தபோதும் வெறித்த பார்வையோடு தான் துயருறுவதாகச் சொன்ன போதும் பொய்யெனத் தோன்றவில்லை ஏமாறியவளுக்கு இருள் வனத்திலொரு ஒளியென அவனைக் கண்டாள்   புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன அவனது கைகள் ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள்   அவளது கைகளைப் பிணைத்திருந்தது அவனிட்ட மாயச் சங்கிலி விலங்கிடப்பட்ட பறவையென காலடியில் வீழ்ந்துகிடந்தாள் […]

திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்

This entry is part 19 of 51 in the series 3 ஜூலை 2011

– உதுல் பிரேமரத்ன தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், திருமகள், 1996 செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி  இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் ஆறு மாத கர்ப்பிணி. அவர் மட்டுமல்லாது அவரது கணவரான அந்தோணிப் பிள்ளை ரொபர்ட் மெக்ஸலனும் அன்று கைது செய்யப்பட்டார். திருமகள் வயிற்றிலிருந்த குழந்தையோடு சேர்த்து அன்றைய தினம் சிறிய குடும்பமொன்று கைது செய்யப்பட்டது.   கைது செய்யப்பட்ட இச் சிறிய குடும்பமானது விசாலமானதொரு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். அது வெலிக்கடைச் சிறைச்சாலை. இன்னுமொரு […]

குரூர மனச் சிந்தனையாளர்கள்

This entry is part 2 of 51 in the series 3 ஜூலை 2011

ஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம்? சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் […]

என்னைக் கைது செய்யப் போகிறார்கள்

This entry is part 30 of 46 in the series 26 ஜூன் 2011

தற்போது இலங்கையில் வசிக்கும் என்னை விரைவில் கைது செய்யப் போகிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் நான் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளி. தண்டனையாக, ஐந்து லட்ச இலங்கை ரூபாய்களை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும். தவறினால் குறைந்த பட்சம் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். என்ன செய்யப் போகிறேன் நான்? என்னிடம் நன்றாக வேலை செய்யும் ஒரு கணினி இருக்கிறது. அதில்தான் இதையெல்லாம் எழுதுகிறேன். இனி, அதன் திரைக் கண்ணாடியை உடைத்து, தலை கீழாய்க் கவிழ்த்து […]

அரச மாளிகை ஊக்க மருத்துவர்

This entry is part 35 of 46 in the series 19 ஜூன் 2011

ஒருவர் திடீரென உங்களின் முன்னால் வந்து நின்று, உங்களைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் வெறும் பார்வையாலேயே உங்களிடம் இன்னின்ன வியாதிகள் இருக்கிறதெனச் சொல்லி, அதற்காக சில குளிகைகளைத் தந்து விழுங்கச் சொன்னால் உடனே அதை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது விரட்டியடிப்பீர்களா? இலங்கையிலென்றால் ராஜ மரியாதையோடு, ஜனாதிபதியே அவரை அரச மாளிகைக்கு அழைத்துக் கொள்வார்.   விடயத்துக்கு வருவோம். எமது நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், மக்களது பணத்தைக் கொண்டு ‘விளையாட்டு மருத்துவப் […]