author

இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்

This entry is part 25 of 46 in the series 19 ஜூன் 2011

(01) ………………………….. உதயசூரியன் கவிழ்ந்து ஈர்க்குத் தடியாகிப் பெருக்காதா எங்கிலும் மழைக் குப்பை…குப்பை..   உண்மைதான். வானம் ஒரு குப்பைத் திடலெனில் அதிலிருந்து கீழே விழுபவை குப்பைகள் தானே? தனது ‘இலை துளிர்த்து குயில் கூவும்’ தொகுப்பின் முதலாவது கவிதையில் இப்படித்தான் மழையை ஒரு குப்பையெனச் சொல்கிறார் கவிஞர் எஸ். நளீம். சேவல் கூவும் அதிகாலைவேளையொன்றில் பெய்யும் மழை குறித்த அவரது பார்வை இக் கவிதையாகியிருக்கிறது. தன் பரட்டைத் தலை விரித்து எல்லா இடங்களிலும் படர்ந்திருக்கும் மூடுபனியை, […]

விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?

This entry is part 13 of 46 in the series 19 ஜூன் 2011

அது 2009ம் வருடத்தின் நடுப்பகுதி. கிளிநொச்சியில் ஷெல் குண்டு மழை பொழிந்த காலம். 2008 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு முகங்கொடுத்த விஜிதா நால்வர் அடங்கிய குடும்பத்தின் மூன்றாமவள். அப்பொழுது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பிச் செல்லத் தேவையானவற்றைத் தயார்படுத்துவதற்காக அவள் அவசர அவசரமாக தனது தாய்க்கு உதவிக் கொண்டிருந்தாள்.   தப்பிச் செல்வது ஷெல் குண்டுகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் கட்டளையை செயற்படுத்தாது விடின் வரும் ரீ56 குண்டுகளிலிருந்தும் காத்துக் கொள்ளத்தான். […]

தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !

This entry is part 12 of 33 in the series 12 ஜூன் 2011

அது 1993ம் வருடம். சரியாகச் சொன்னால் ஜூலை மாதம் 16ம் திகதி. ‘நல்லரத்தினம் சிங்கராசா’வுக்கு அப்பொழுது வயது 17. அவர் இப்போதைக்குச் சில தினங்கள் முன்பிருந்தே வீட்டுப் பரணின் இருட்டு மூலையொன்றில் ஒளிந்திருக்கிறார்.   அவரது ஊர் மட்டக்களப்பின் நாவற்காடு. ஒளிந்திருப்பது இரு குழுக்களின் மீதுள்ள அச்சத்தால். ஒரு குழு இலங்கை அரசின் இராணுவப் படை. மற்றைய குழு விடுதலைப் புலிகள் இயக்கம். இது பயனற்ற கதையொன்றென எவருக்கும் தோன்றக் கூடும். விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் […]

தண்டனை !

This entry is part 36 of 46 in the series 5 ஜூன் 2011

அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன். எனது தளத்திற்கான மின்னுயர்த்தியில் என்னுடன் பயணித்த எனது பக்கத்து வீட்டு இளம்பெண் மென்மையாகச் சிரித்து நலம் விசாரித்ததற்கான எனது பதில், மதுவாடை கலந்த ஏப்பத்துடன் வெளியானதில் அவள் முகம் சுளித்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. எல்லா அழகிகளும் ஒன்று போல மதுவாடையை ஏற்றுக் கொள்பவர்களல்லர். அல்லது அஸ்விதாவைப் போல […]

அம்மாவின் நடிகைத் தோழி

This entry is part 32 of 46 in the series 5 ஜூன் 2011

மூலம் – இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை   அம்மா சொல்வாள் அந் நடிகையின் நடிப்பைப் பார்க்க நேரும் போதெல்லாம்   ‘பள்ளிக்கூடக் காலத்தில் உயிர்த் தோழிகள் நாம் அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில் ஒரே பலகை வாங்கில் அந் நாட்களிலென்றால் அவள் இந்தளவு அழகில்லை’   பிறகு அம்மா பார்ப்பது தனது கைகளை உடைந்த நகங்களை காய்கறிகள் நறுக்குகையில் வெட்டுப்பட்ட பெருவிரலை   அத்தோடு அவள் எங்களைப் பார்ப்பாள் […]

இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?

This entry is part 24 of 46 in the series 5 ஜூன் 2011

அஸங்க சாயக்கார தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை தம்பியின் முகத்தைச் சற்றுப் பார்த்துக் கொள்ள எமது பாட்டி தொலைக்காட்சிப் பெட்டியை நெருங்கி விழிகளைக் கூர்மையாக்கிக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்று முறை க.பொ.உயர்தரப் பரீட்சையெழுதி மூன்றாம் முறை ஒரு வழியாக பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் அளவுக்கு தம்பி சித்தியடைந்தது சில நாட்களுக்கு முன்புதான். இப்பொழுது தம்பி ஒரு இராணுவ முகாமில் இருக்கிறான். அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க அன்பாகக் கற்றுத் தரும் இராணுவ ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளவே அவன் […]

போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்

This entry is part 27 of 43 in the series 29 மே 2011

இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு மட்டுமல்ல. அது நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் அனுப்பப்பட்டவோர் தகவல்.   ‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ எனும் வாழ்த்துச் செய்தி அது. அவ் வாழ்த்தினை நினைவிலிருத்திக் கொண்டு நான் இப்பொழுது கிழக்குக்குச் செல்கிறேன்.   இப்பொழுது நான் திருகோணமலை – சேருநுவர வீதியிலிருக்கும் கிளிவெட்டி […]

யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்

This entry is part 13 of 43 in the series 29 மே 2011

விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த யுத்த வெற்றி மனப்பான்மையை மக்கள் மத்தியிலும் இராணுவத்தினர் மத்தியிலும் நிலை நிறுத்துவதற்காக பல விதமான விழாக்களை ஏற்பாடு செய்திருக்கிறது. அதனடிப்படையில் இன்றும் கூட அது போன்ற விழாக்கள் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.   மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கெனில் இன்றைய தினமானது ‘பலகாரம், பாற்சோறு சாப்பிட்டு’க் கொண்டாடப்பட வேண்டிய தினமென்பது உண்மை. ஏனெனில் […]

அரசியல்

This entry is part 22 of 42 in the series 22 மே 2011

கீதங்கள் இசைத்து கிரிக்கட் விளையாடி வெள்ளித் திரையில் சின்னத் திரையில் மேடைகளில் நடித்து கொலை செய்து கொள்ளையடித்து தாதாவாகி மிரட்டி அதுவும் முடியாதெனில் குறைந்த பட்சம் பாலியல் வன்முறையொன்றையாவது பிரயோகித்து பெயரை உருவாக்கிக் கொண்டு உருவத்தை அலங்கரித்து உடலைச் சமைத்து அப் பெயரை விற்று தேர்தலில் வென்று அமைச்சரவையில் ஆசனமொன்றையும் பெற்றுக் கொள்ளும் சோறுண்ணும் எருமைகள் அநேகமுள்ள நாட்டில் புல்லுண்ணும் எருமைகள் வாழ்க !!!   – பியன்காரகே பந்துல ஜயவீர (சிங்கள மொழியில்) தமிழில் – […]

உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்

This entry is part 20 of 42 in the series 22 மே 2011

நான் மழை ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன் உன் பழங்கால ஞாபகங்களை ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன்   எனை மறந்து சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும் குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய் ஆனாலும் உன் முன்னால் உனைச் சூழச் சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன்   உனைக் காண்பவர்க்கெலாம் நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க் கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும் எனக்குள்ளிருக்கும் உன் மழைக்கால நினைவுகளைத்தான் நீ மீட்கிறாயென எனை உணரவைக்கிறது எனது தூய்மை மட்டும் […]