Articles Posted by the Author:

 • புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்

  புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்

  A.P.G சரத்சந்திர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை […]


 • சூறாவளியின் பாடல்

  சூறாவளியின் பாடல்

      பலம் பொருந்திய பாடலொன்றைச் சுமந்த காற்று அங்குமிங்குமாக அலைகிறது   இறக்கி வைக்கச் சாத்தியமான எதையும் காணவியலாமல் மலைகளின் முதுகுகளிலும் மேகங்களினிடையிலும் வனங்களின் கூரைகளிலும் நின்று நின்று தேடுகிறது   சமுத்திரவெளிகளிலும் சந்தைத் தெருக்களிலும் சுற்றித்திரிய நேரிடும்போது இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல் பொத்திக்கொள்கிறது பாடலை   பறவைகள் தாண்டிப் பறக்கையிலும் காத்துக்கொள்ளப்படும் இசை செறிந்த பாடல் சலித்துக் கொள்கிறது ஓய்வின்றிய அலைச்சலின் எல்லை எதுவென்றறியாது   தனிமைப்பட்டதை இறுதியிலுணர்ந்தது தெளிந்த நீர் சலசலக்கும் ஓரெழில் […]


 • பின்னற்தூக்கு

  பின்னற்தூக்கு

  ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.   செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத் தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் […]


 • கொக்குகள் பூக்கும் மரம்

  கொக்குகள் பூக்கும் மரம்

      தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது காலையில் பறக்கும் கிளைகளை தலையில் கொண்ட பெரு விருட்சம்   ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய் நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்   வெள்ளைப் பூக்களென வந்து தங்கிச் செல்லும் கொக்குகள் இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால் கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும்   இரை தேடி விடிகாலையில் தமதிரு நெடிய கிளைகளையும் வயிற்றில் பதித்துப் பறப்பவை விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள […]


 • சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்

  தன்னை விடவும் 75 வயதுகள் கூடிய ஒரு முதியவரைத் திருமணம் செய்ய நேர்ந்த 15 வயது இளம்பெண் மற்றும் அனைத்து நாடுகளினதும் கெஞ்சல்களை மீறி சிரச்சேதம் செய்யப்பட்ட இளம்பெண் ரிஸானா நபீக். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த இரண்டு இளவயதுப் பெண்கள் தொடர்பான செய்திகளே சவூதி அரேபிய ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாக அமைந்தன. தாம் இந்தளவுக்குப் பிரபலமாகப் போகிறோமென கிஞ்சித்தேனும் நினைத்துக் கூடப் பார்த்திராத இப் பெண்கள் முழு உலகத்தினதும் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். 90 […]


 • தெளிதல்

  தெளிதல்

      ஏமாற்றத்தின் சலனங்களோடு மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும் அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம் இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன் எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள் மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை   மகிழ்ச்சி ததும்பிய நேற்றின் தருணங்கள் ஒரு புகையென மறைந்து அழிந்துவிட்டன நூதனங்களை மிஞ்சிய பழங்காலத் தடயமொன்றைப் பேணிக் காக்கும் மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து […]


 • நவீன தோட்டிகள்

  நவீன தோட்டிகள்

      ‘இங்கும் அதே தமிழன்தான் அங்கும் இதே தமிழன்தான்’ கூரிய பார்வைகளும் குற்றச்சாட்டுகளும் குத்தும் ஊசிமுனைகளும் முடிவற்றவை   தலைக்கு மேலே சூரியனும் நோயுற்ற தீக் காற்றும் கொதிக்கச் செய்கிறது குருதியை. பரம்பரை வழித் திண்ணையும் செந்தணலாய்ச் சுடுகிறது.   காகங்கள் வரிசையாக எச்சமிடுகின்றன எச்சங்களை விற்றும் பிழைப்பவர்கள் ‘இங்கும் அதே தமிழன்தான் அங்கும் இதே தமிழன்தான்’ என்கின்றனர்.   – விஜய நந்தன பெரேரா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்


 • நள்ளிரவின்பாடல்

  நள்ளிரவின்பாடல்

    நடுத்தெருவில்விளையாடும் பூனைக்குட்டிகளைப்பார்த்திருக்கும் இரவொன்றின்பாடலை நான்கேட்டேன்   மோதிச்செல்லக்கூடியநகர்வனபற்றிய எந்தப்பதற்றமுமின்றி துள்ளுமவற்றைத் தாங்கிக் கூடவிளையாடுகிறது சலனமற்றதெரு   யாருமற்றவீட்டின்கதவைத்தாளிட்டு அந்தநள்ளிரவில்தெருவிலிறங்கி நடக்கத்தொடங்குகையில் திசைக்கொன்றாகத்தெறித்தோடி எங்கெங்கோபதுங்கிக்கொள்கின்றன மூன்றுகுட்டிகளும்   நான்நடக்கிறேன் தெருசபிக்கிறது நிசிதன்பாடலை வெறுப்போடுநிறுத்துகிறது   இந்தத்தனிமையும் இருளும்தெருவும் வன்மம்தேக்கி வைத்து எப்பொழுதேனுமென்னை வீழ்த்திவிடக்கூடும்   – எம்.ரிஷான்ஷெரீப், இலங்கை mrishanshareef@gmail.com


 • ஒரு காதல் குறிப்பு

  ஒரு காதல் குறிப்பு

    பௌர்ணமி நாளின் முன்னிரவுப் பொழுதொன்றில் காற்று வரத் திறந்திருந்த யன்னல் பிடித்தமான மெல்லிசைப் பாடலொன்றினை ஏந்தி வந்து தனித்திருந்த அறையினை நிறைக்கத் தொடங்கிய இக்கணத்தில் உன்னை நினைத்துக் கொள்வது கூட மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. உன்னைக் காற்று ஏந்தி வருகிறதா? மெல்லிசையின் ராகங்களுக்குள் நீ மறைந்து வந்து குதிக்கிறாயா ? பௌர்ணமியின் ஒளிக் கீற்றுக்கள் உன் உருவம் தாங்கி வருகிறதா போன்ற மாயக் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடைகளில்லை. என்னைப் போல இவையெல்லாவற்றையும் ரசிக்கும் மனம் கொண்ட […]


 • காலத்தின் கொலைகாரன்

  காலத்தின் கொலைகாரன்

  வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென புதிதாக விழுந்திருக்கிறது ஐங்கூர் பழுத்த இலை சிவப்புக் கலந்த நிறமதற்கு உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில் சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும் எப்படிப் பூத்ததுவோ பசுமையெரிந்த செடிகளுக்கிடையில் எதற்கும் வாடிடா மலரொன்று அன்றியும் எந்தக் கனிக்குள் இருக்கின்றது அடுத்த மரத்துக்கான விதை எல்லா வாசனைகளும் பூக்களாகி நாசிக்குள் நுழையும் கணமொன்றில் செழித்த ஏரியின் கரைகளைக் காக்கின்றன ஓர மரங்கள் வசந்தத்தின் முகில் கூட்டங்களலையும் சுவரோவியங்களில் தோப்புக்கள் எவ்வளவு ரம்யமானதாயிருக்கின்றன இங்கு நீர் தேங்கிய குட்டைகளில் தலைகீழாக வளருகின்றன […]