அன்பின் ஆசிரியருக்கு, இவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா நேற்று 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன. இந் நிகழ்வில், கடந்த வருடம் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு […]
வருவதையும் போவதையும் கூற முடியாத குளிரொன்றைப் போன்ற அது தென்படாதெனினும் உணரலாம் எம்மைச் சுற்றி இருப்பதை அது எம்மைத் தூண்டும் கண்டதையும் காணாதது போல வாய் பொத்தி, விழிகள் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்க பசியின் போதும் குருதி பீறிடும் போதும் அடுத்தவன் செத்துக் கொண்டிருக்கும் போதும் அமைதியாக சடலங்களின் மேலால் பாய்ந்து நாம் வேலைக்குச் செல்லும் வரை அது என்னது? எங்கிருந்து வந்தது? – இஸுரு சாமர […]
தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடொன்றென்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது. எனினும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்தினாலல்ல. பொருளாதார பலத்தினாலும் மட்டுமல்ல. ஆயுத சக்தி எனப்படுவது உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்குகொள்ளும் ஒன்றென்பது பூகோள அரசியல் யதார்த்தத்தின் மூலமாகத் தெளிவாகும் ஒன்று. அதி நவீன ஆயுத பலங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவானது, எக் […]
சிநேகிதனொருவன் இருக்கிறான் எனக்கு ஒரு பயனுமற்ற பொறுக்கியென அனேகர் கூறும்படியான அவ்வப்போது நள்ளிரவுகளில் பயங்கரமான கனவொன்றைப் போல உறக்கத்தைச் சிதைத்தபடி வருவான் அவன் எனதறைக்கு வடையொன்றை, கடலைச் சுருளொன்றை எனது கையில் திணிக்குமவன் வரண்ட உதடுகளை விரித்து குழந்தைப் புன்னகையை எழுப்புவான் உரையாடல்களை உடைக்கும் சொற்களோடு சிவந்த விழிகளைச் சிறிதாக்கி புரியாதவற்றை வினவுவான் எனது தோள்களைப் பிடித்து பதிலொன்றைக் கேட்டு இரு விழிகளையும் ஊடுருவுவான் அத்தோடு எனது தோள்மீது அவனது […]
நடுச்சாமத்தில் உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையே மனம் ஓடும் எல்லா இடங்களுக்கும் அறியா வெளிகளுக்கும். ‘டொக் டொக் டொக்’ யாரது? உள்ளம் கேட்கும் ‘யார் நீ?’ உரத்த குரலில் வினவுகிறேன் நான். ‘நான். வந்து… வந்து… வழி தவறிய கவிதையொன்று. கதவைக் கொஞ்சம் திறக்க இயலுமா?’ கவிதையொன்றாம். வழி தவறி விட்டதாம். திறப்பதா கதவை? எனது கதவைத் திறக்காது விடின் வழி தவறிப் போகும் கவிதை. கதவைத் திறப்பின்…. வழி தவறிப் போவேன் நான். […]
வளையல்களைத் தேர்ந்தெடுத்த இடத்தில் நான் சந்தித்த விலைமகள் மிகவும் அகங்காரத்துடனும் அழகுடனும் கருப்பாகவுமிருந்தாள் காலையில் நாம் உணவுக்காகச் செல்லும் உணவகத்தின் இன்னுமொரு மூலையில் பீங்கான் நிறையச் சோறெடுத்து உண்பாள் அவளது வயிறு மேடிட்டிருப்பதை கதிரைகளுக்கிடையேயிருந்து கண்டேன் கருவுற்றிருந்தாள் பசியகன்றதும் மரத்தடிக்குச் சென்றாள் நாள்தோறும் சந்திக்க நேரும் அவ் வதனத்தை எவ்வாறு தாங்கிக்கொள்ள இயலும் வங்கி முன்னாலிருக்கும் ஒரேயொரு சிறு நிழல் மரம் அவளது இருப்பிடம் ஒருவர் மாத்திரமே இருக்க முடியுமான அவ்விடத்திலமர்ந்து வயிற்றைத் […]
சின்னவனைச் சுழற்றியெடுக்கும் ‘சுழிக் காற்று’ அவனுக்கென்றொரு பெயர் இருக்கிறது. ஆனால் அவனது வீட்டில், கிராமத்தில் எல்லோரும் சிறு வயதிலிருந்து ‘சின்னவனே’ என்றுதான் அவனை அழைக்கிறார்கள். பலகைகளால் ஆன குடிசையொன்றில் அவனும், அவனது விதவைத் தாயும், சகோதரியும் வசிக்கிறார்கள். எழுதப் படிக்கத் தெரியாத சிறுவன் அக் குடிசையின் பலகைச் சுவரில் கரிக் கட்டியால் மூன்று + அடையாளங்களை இட்டு, அவை தானும், அக்காவும், அம்மாவும் என்கிறான். அச் சிறுவனால் சித்தப்பா என அழைக்கப்படும் ஒருவனால் அந்தக் குடும்பத்துக்கு அவ்வப்போது […]
சேகரிக்க வேண்டாம், கரையில் மின்னும் மென்மையான பாற்சிப்பிகளை உப்புச் சுவை மா கடலுக்கே அவை சொந்தமானவை ஏன் தண்ணீரில் இறங்குவதில்லை அச்சமா??? எண்ணிலடங்கா ரகசியங்கள் இல்லை கடலிடம் இருப்பது ஒற்றைச் சிறு ரகசியமே… எல்லையில் வானும் கடலும் இணையாதென்பது குறித்து நன்கறிந்தும் ஏன் பொய்யான கனவுக் கவிதைகள் கரையிலிருந்து கொண்டு கடல் குறித்து? சேகரிக்க வேண்டாம் இப் பாற்சிப்பிகளை கடலுக்குள் இறங்காமல் கரையில் சுகமாக இருந்துகொண்டு… – இஸுரு சாமர […]
அன்றைய மழைக்கால முன்னிரவில் அவளது நீண்ட நேரக் காத்திருப்பின் முடிவு பேருந்துத் தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம் தாண்டிச் சென்ற எவரையோ அழைத்துப் பேசி கூடச் செல்லுமுனது பார்வையின் கீழே நழுவியதவளது பூமி தெருவோரம் எவரோ வெட்டி வீழ்த்தியிருந்த மரத்தினை நோக்கிக் கூடு திரும்பிய பட்சிகள் இருளாய் வட்டமிட்ட அன்றைய இரவு ஒரு சாத்தானின் உருவம் கொண்டது அந்தகாரத்தில் உனது நடை மீன்களின் நீச்சலை ஒத்திருந்தது நீ எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டிலும் நதிகள் உதித்தன தண்ணீரில் […]
காற்றுக் குதிரைகள் கிளர்ந்து கிளப்பிய தூசுப் படலத்தினுள் சேர்த்து வைத்திருந்த இனிய பாடல்களும் அந்தி விசும்போடு சிதைந்தழிந்தன பகல் முழுதும் தீக் கண்களால் பார்த்திருந்த வெயில் மேகக் கூட்டத்துக்கு மேலும் நீர் கோர்த்தது கதவுகளைத் திறந்தேதான் வைத்திருக்கிறேன் எந்த ஓவியனாவது வந்து வெயிலைப்போல அல்லது சாரலைப்போல ஏதேனும் கிறுக்கிச் செல்லட்டும் ஒரு தபால்காரனாவது வந்து ஏதேனும் தந்துசெல்லட்டும் ஒரு வண்ணத்துப்பூச்சி பூக்களின் வாசனைகளோடு வந்துசெல்லட்டும் அன்றேல் மெதுநடைப் பூனையொன்றேனும் – எம்.ரிஷான் ஷெரீப் mrishanshareef@gmail.com