Articles Posted by the Author:

 • புண்ணிய விதைகள் – சிறுகதை

  புண்ணிய விதைகள் – சிறுகதை

    அலாரம் இல்லாமலே கண்விழித்து எப்பொழுதும் போல அன்றும் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்ட கலியுலக மார்கண்டேயனான கதிரவன் போல, வயதாகிவிட்டாலும் தன் கடமையில் இருந்து தவறாமல் வழக்கம் போல அதிகாலை எழுந்து குளித்து, நெற்றியில் திலகம் இட்டு, வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து பெருக்கி கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் மங்கலம். பால் தீயும் நாற்றம் வரவே கோலத்தை பாதியிலே நிறுத்தி அடுப்படிச் சென்று பாலை இறக்கி வைத்துவிட்டு மறுபடியும் விட்ட இடத்திலிருந்து கோலத்தை முடித்தவள் தன் கணவன் […]


 • இருபது ரூபாய்

  இருபது ரூபாய்

  அது ஒரு மழைக்காலம், சாதாரண மழை என்றால் பரவாயில்லை, வானத்திற்கு பூமியின் மேல் என்ன கோவமோ என்று தெரியவில்லை, மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர். தண்ணீர் தவிர வேறெதுவும் இல்லை. வீதியெங்கும், வீட்டின் வெளியேயும், சிலர் வீட்டிற்குள்ளும், நிறம் தான் வேறுபட்டதே ஒழிய, எங்கும் தண்ணீர் தான். மண்ணின் நிறததிற்கு ஏற்ப தண்ணீரின் நிறம் மாறுபட்டும், நல்ல தண்ணீர் எது, சாக்கடை தண்ணீர் எதுவென்று தெரியாமல் தெருவெங்கும் எங்கும் ஒரே […]


 • டெஸ்ட் ட்யூப் காதல்

  டெஸ்ட் ட்யூப் காதல்

  புவனாவா அது… துணிக்கடையின் கண்ணாடியில் தெரிந்த அந்த உருவத்தைப் பார்த்து ஒரு தரம் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான் பிரதீப். அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்த கோபக்கனல் அவளைப் பார்த்ததும் எரிமலைக் குழம்பாய் கொதித்து கை நரம்புகள் புடைத்து கால்கள் தன்னிச்சையாக அவளை நோக்கி நடந்தது. கடைசியாய் ஒரு தரம் அவளைப் பார்த்து அக்னிச் சொற்களை அள்ளி தெளித்திட அலைபாயும் மனதுடன் தன் நடையை துரிதப்படுத்தினான். ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிருக்கு உயிராய்… ஈருயிர் ஓர் உயிராய் […]


 • நிறமற்றப் புறவெளி

  நிறமற்றப் புறவெளி

  விழி திறந்த பகலில் மொழி மறந்து மௌனமானாய் இமை மூடிய இரவில் தலைக்கோதி தாலாட்டினாய் நிழல் விழும் தூரத்தில் நீ எனது உறவானாய் தென்றலாய் எனைத் தொட்டு தீண்டும் இன்பம் தந்தாய் இளங்காற்றாய் மாறி வனப்பூக்களின் காதலை வளர்த்தாய் கடுங்காற்றாய் உருமாறி காதல் வேதனையைத் தந்தாய் நிறமற்றப் புறவெளியில் உருவற்ற உனை தலையசைத்து அறியவைத்தேன் எனை மறந்த நீயோ கடல் அலையைக் கைப்பிடித்து உடல் பிணைந்த மறதியில் புயலாய் வந்து சாய்த்து மரமான என்னை மரிக்க வைத்துவிட்டாயே […]


 • கரையைத் தாண்டும் அலைகள்

  கரையைத் தாண்டும் அலைகள்

  ‘முடிவா  நீ என்ன சொல்ல வர்ற….’ சுந்தர், ஹரிப்பிரியாவைக் கண்களால் நேருக்கு நேர் பார்த்துக் கேட்டான், அவன் பேச்சில், முகபாவத்தில், கண்களில் எரிச்சல் இழையோடியதை அவன் சொன்ன விதம் உணர்த்தியது. இருவரும் மூன்றடி இடைவெளியில் அந்தக் கடற்கரையில் அமர்ந்திருந்தார்கள். அவள் கடலைப் பார்த்து அமர்ந்திருந்த விதமும்… கன்னங்களில் வழிந்தோடிய  சுருள் முடியை  எடுத்து பின்புறம் தள்ளிய லாவகமும்… கேசத்திலிருந்து வீசும் மல்லிகைப் பூவின் வாசமும்… காற்றில் இடைச்சேலை விலக பளிச்சென்று தெரிந்த இடைப்பிரதேசமும்… அவன் கை பரபரக்கத்தான் […]


 • விட்டில் பூச்சிகள்

  விட்டில் பூச்சிகள்

  அன்று அலுவலகத்தில் அதிசயமாய் நீண்ட நேரம் பிடிக்கும் என்று எதிர்பார்த்த வேலை, எதிர்பாராமல் சீக்கிரமாய் முடிந்ததில் கார்த்திக் சந்தோஷத்தின் உச்சத்துக்குச் சென்றான். தினமும் காலையில் ஒன்பது மணிக்கு வந்து, இரவு பத்து மணிக்கு மேல் ஹோட்டலுக்குச் செல்வதிலிருந்து இன்று விடுதலை. வெளியில் வானம் வேறு மப்பும் மந்தாராமாய் இருந்தது, லேசான தூறலும் அதனால் ஏற்பட்ட சாரலும் அதனுடன் இணைந்த மண் வாசனையும் அவன் மனதுக்கு இனிமையைத் தந்தது. கார்த்திக், நல்ல சிவந்த தேகம், ஆறு அடி வாட்டசாட்டமான […]


 • ஆழிப்பேரலை

  ஆழிப்பேரலை

    – சிறுகதை   கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களின் துறைமுக நகரமாம் மாமல்லபுர கடற்கரை, சூரியன் மேற்கே பழுத்த கோவைப்பழ வெளிச்சக்கீற்றை தன் அன்றைய நாளின் இறுதி மூச்சாய் விட்டுக் கொண்டிருந்தது. அந்திசாயும் இளம்மாலை நேரமானதால் பொருட்கள் கப்பலில் ஏற்றப்படுவதும் வந்த கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப்படுவதுமாக துறைமுகம் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட..  அயல் தேச வியாபாரிகள் தாங்கள் தங்கள் தேசத்திலிருந்து கொணர்ந்த வைரம், ரத்தினம், வைடூரியம், கோமேதகம், பவளம், மரகதம் மற்றும் விலை […]


 • இரண்டு ஏக்கர் நிலம்- சிறுகதை

  இரண்டு ஏக்கர் நிலம்- சிறுகதை

  ‘ஏம்மா… கூடைய ஒரு ஓரமா சீட்டுக்கு அடியில தள்ளலாமில்ல..  இப்படி மத்தியில வச்சிருக்கியே..  மத்தவங்களும் நிக்க வேண்டாம்’ கடா மீசையோடு வெள்ளை வேட்டி சட்டையுமாய் நின்று கொண்டு  வந்த  அந்த ஆஜானுபாவமான மனிதர் நெற்றி புருவம் மேலேறியபடி சொல்ல… ‘ஆங்… கூடைக்கும் சேத்துத்தான் டிக்கெட் வாங்கிருக்கேன்… அது அப்படித்தான் இருக்கும்… நீ வேணுமின்னா உடம்பு நோகாம சொகுசா கார்ல வரவேண்டியது தானே…’ வெடுக்கென்று அந்த மூதாட்டி சொல்ல… ‘ஒரு கூடைக்கு டிக்கெட் வாங்கிட்டா… பஸ்சையே  வெலைக்கு வாங்கிட்டதா […]


 • நேர்த்திக்கடன்

  நேர்த்திக்கடன்

  சார்… என்னை மாதிரி ஒரு முட்டாள நீங்க பார்த்து இருக்கீங்களா… இருக்காதுன்னு தான் நெனக்கறேன்… என்ன நடந்துச்சுன்னு நீங்க கேட்டீங்க.. உங்களுக்கும் அந்த நம்பிக்கை என் மேல உறுதியா வந்தே தீரும்…  வாழ்க்கையில எப்பவாவது  ஒரு தரம் அதிர்ஷ்டம் வரும்ன்னு சொல்வாங்க.. அதுவும் அலாவுதீனுக்கு கெடைச்ச அற்புத விளக்கு மாதிரி ஒரு பொருள் நம்ம கைக்கு கெடைச்சி… அதனால நமக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டோன்னு கொட்டிச்சினா… சொல்லவே வேண்டாம்… அப்படித்தான் எனக்கு ஒரு பொருள் கெடைச்சது… அது […]


 • தொலைந்த உறவுகள் – சிறுகதை

  தொலைந்த உறவுகள் – சிறுகதை

  ‘சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்…சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்’   தெருவில்  விளையாடிக்  கொண்டிருந்த என் மகள் உற்சாகமாய் ஓடிவந்து என் அப்பாவிடம் சொல்லிவிட்டு மறுபடியும் தெருவை நோக்கிச் சென்றாள்,  நீண்ட  நாள் எண்ணை விடாத வீட்டின்  காம்பவுண்ட் கேட்  ‘கிரீச்’   என்று  பாம்பின்  வாயில் மாட்டிக்கொண்ட எலியாய்  முனகியது, எனக்கு புரிந்துவிட்டது…வந்தவர் அப்பாவின் சிநேகிதர் ராஜாராமன் தான்… அப்பாவுடன் ஒன்றாக ஒரே ஆபீசில் வேலை பார்த்து  ரிட்டையர் ஆனவர். அவர் வரும் சமயமெல்லாம் ‘சாக்லேட்’வாங்கி வந்து என் குழந்தைகளுக்கு கொடுத்தே அந்தப் பெயரைப் பெற்றுவிட்டார்.   மகளுக்கு என்னவோ அவர்  ‘சாக்லேட் தாத்தா’ என்றாலும்… நாங்கள்  எல்லோரும்  சேர்ந்து அவருக்கு வைத்தப் பெயர் ‘நாரதர்’ அது  ஏன்  என்று  நீங்களே  போகப் போக புரிந்து கொள்வீர்கள்.   அவர் எங்கள் விட்டுக்கு வந்து சென்றாலே,  அன்று எங்கள் வீட்டில் அலை  அடிக்காமலே சுனாமி வந்து சென்றது போல ஒரு பிரளயத்தை உண்டு பண்ணிவிட்டு தான் செல்வார்,  அது அவருக்கு தெரியாமலே எப்பொழுதும் நடந்து  வரும்   வழக்கமான நிகழ்வுதான் .. சுனாமிக்கு தெரியுமா  தன்னால்  இவ்வளவு  அழிவு ஏற்பட்டது  என்று..   அவர் தன்னைப்பற்றி சுயதம்பட்டம் அடிப்பதில் பல்கலை பட்டம் வாங்காமலே டாக்டர் பட்டம் வாங்கியவர்.  ஒவ்வொரு முறையும் அவர் வரும் சமயம் தம்பட்டம் அடிப்பதும் அதனால் எங்கள்  வீட்டில்  அப்பாவின் கோபம் எங்கள் மேல் விஸ்வரூபமாகி அப்பாவுக்கும்  எங்களுக்கும்  வாய்ச்சண்டையாய் ஆரம்பித்து  அந்தச் […]