Articles Posted by the Author:

 • கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு

  கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு

  காலப்போக்கில் களிமண் திரண்டு கரையை நிறைத்ததால் கடல் வணிகம் குன்றிப்போக காலாவதியாகிப்போன கஸ்டம்ஸ் கட்டிடங்களுக்கும் காரைக்குடி சென்னை கம்பன் எக்ஸ்பிரஸ் கைவிடப்பட்டதால் காற்று வாங்கும் ரயிலடிக்கும் இடையே பல ஆண்டுகளாக பசுமை மாறாமல் பரந்து நிற்கின்ற பாதாம் மரத்தடியில் பள்ளிப் பருவத்தில் பரீட்ச்சைக்குப் படிக்கச் செல்வதுண்டு குட்டிக்ககுரா பவுடரும் கொலுசுச் சப்தமுமாக உலவும் மோகினிப் பிசாசுக்குப் பயந்து கட்டிடத்துள் செல்வதில்லை எனினும் இயற்கையின் ஓர் உபாதைக்கு கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஒதுங்குகயில் ஆர்வம் எட்டிப்பார்க்க தூசு படிந்த தரையில் […]


 • தொலைவில் மழை

  தொலைவில் மழை

      தொலைக்காட்சியில் மழை கண்டு அலைபேசியில் ஊரழைத்தால் தொலைபேசியில் சப்தமாய் மழை   சாளரம் வழியாக சாரலாய் மழை கூரையின் நுனியிலும் குட்டிக் குற்றாலமாய் மழை   கத்திக் கப்பல்களும் காகிதக் கப்பல்களும் கரை சேரவில்லையாம் கனுக்கால் வரை மழை   மின்சாரம் வெட்டுப்பட முட்டை விளக்கின் மட்டுப்பட்ட வெளிச்சத்தில் முகங்களில் மழை   இரவின் இருளில் மழை பெய்வதில்லை அதன் பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்   அடைமழை காலத்தில் குடைமேல் மழை […]


 • சனநாயகம்:

  சனநாயகம்:

  தாத்தா நினைவு தப்பி தன்மை பிறழ்ந்து முன்னிலை மறந்து படர்கைகளை பிழையாக அனுமானித்து முதுமையை வாழுகையில் பரிதாபமா யிருக்கும் கட்டிக் காலங்கழித்தப் பாட்டியையும் பெற்றுப் பேர் வைத்த அம்மாவையும் பேரன்பு காட்டிய எங்களையும்கூட இதுதான் இவர்தான் நான்தான் நீதான் என அடிக்கடி அடையாளம் காட்டியே பேச வேண்டியிருந்தது தேர்தல் விழா தேர்த் திருவிழாவென படு விமரிசையாக நடந்து முடிய கட்சி சார்புக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் அவர் சுய நினைவோடு தீர்மாணித்திருக்க முடியா தெனினும் தாத்தாவின் சுட்டு விரலிலும் […]


 • வீடு

  வீடு

  விடுமுறை நாளொன்றில் வீடு சுத்தம் செய்யுகையில் விடுபட்ட இடங்களில் விரல்கள் துலாவியதில் தொலைந்துபோன பொம்மைக்காரின் ரிமோட் தீர்ந்துபோன பேட்டரிகள் மூடிகள் மூடிகளற்றப் பேனாக்கள் பொத்தான்கள் பொத்தான் குறைந்த சொக்காய்கள் ஓரிரண்டு உலர்ந்த உணவுத் துணுக்குகள் என எல்லாவற்றையும் அகற்றியும் கைப்பற்றியும் தொடர்ந்து அத்தனைப் பொருட்களையும் அதனதன் இடத்தில் அடுக்கியும் நிறுத்தியும் அழகுற வைத்த்தும் ஏனோ ஷாப்பிங் மாலின் நடைபாதை கடைகளின் கட்டுக்குள் இருப்பதுபோலொரு உணர்வு வியாபிக்க பிள்ளைகள் பள்ளிக்கூடம்விட்டு வரும்வரைக் காத்திருக்கலானேன் மீண்டும் கலைத்துப் போட்டு வீடாக […]


 • மேலும் மேலும் நசுங்குது சொம்பு!

  மேலும் மேலும் நசுங்குது சொம்பு!

    ஊரைவிட்டு விலக்கி வைத்தனர் என்னை நீரைவிட்டு நிலத்தி லிட்டனர் மீனை   ஊரினம் யாவரும் ஓரின மாயினர் எனக் கெதிராய் காரண மாயிரம் தோரண மாயின   சீர்திருத்தம் சொன்னவரை பெரியார் என்றனர் சிறுதிருத்தம் சொன்ன எனை பிரிந்துபோ என்றனர்   பஞ்சாயத்தில் புலிவேஷத்துடன் பத்தாயத்து எலிகள்… படிப்பறிவு இன்றியே ஒரு பிடி பிடித்தன   பிஞ்சுகள் இருவர் பிழை செய்தனர் விடியோ விளையாட்டென வாழ்க்கயை எண்ணினர் வாழத் தலைப்பட்டு வீடுகள் துறந்தனர்   ஓடிப் […]


 • “அவர் தங்கமானவர்”

  “அவர் தங்கமானவர்”

  நாய்க் கொரு நண்பகலில் வாய்த் ததொரு தெங்கம்பழம் தா னுண்ணத் தெரியாமலும் தரணிக் குத் தராமலும் உருட்டியும் புரட்டியும் ஊர்சுற்றி ஊர்சுற்றி ஓய்ந்து போனதந்த நாய் தமக்கும் வாய்த்தது தங்கமானவர் எனும் பட்டம் தரங் கெட்ட தலைக்குப் பின் தெளிவான ஒளிவட்டம் சோளக் காட்டு பொம்மைக்கு சேலையில் பரிவட்டம் சோற்றுக்கு வழி யில்லை மாற்றுக்குத் துணியில்லை இற்றுப்போன கூரை வேய கீற்றுக்கும் காசில்லை தகரத்தின் தரம்கூட தமக்கில்லை என உணர்ந்து தங்கமானவர் எனும் பட்டம் துறக்கவும் முடியவில்லை […]


 • பசி வகை!

  பசி வகை!

  பத்து மணி யிலிருந்து பல மணி நேரம் போராட்டம் செய்த பட்டினி வயிறு பாதையோரக் கடையின் பரோட்டா சால்னாவுடனான பேச்சு வார்த்தையில் சமாதானமானது வயிற்றுக்கு ஈயப்பட்டபின் செவிப் பசிக்கு என்பதுகளின் இரைச்சலற்ற இசை வாகனத்தில் விரவ தூக்கம் தொந்தரவானது இராப் பயணங்களில் இரவின் இருப்பை இசையே நிரப்பும் வழுக்கும் தார் சாலை விடுத்து உலுக்கும் கற்சாலை தொடங்க உறக்கமும் கிறக்கமும் சட்டென கலைந்தது மேற்சென்ற வழியெல்லாம் மற்றுமொரு பசிக்கான பரிவர்த்தனை காட்சிகள் பொதி உண்ட கனரக வாகனங்கள் […]


 • அதுவும் அவையும்!

  அதுவும் அவையும்!

  யாரங்கே என ஏய்த்துக்கொண்டிருந்தது அது பசுத்தோல் நம்பி மேய்ந்துகொண்டிருந்தன அவை பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டிக்கொண்டிருந்தது அது பாம்பென்று பயந்தும் மீனென்று வியந்தும் மாட்டிக்கொண்டிருந்தன யாதும் வாங்கமாட்டேன் வரதட்சனை யென விழித்துக்கொண்டது வாலிபம் வெள்ளையுஞ் சொள்ளையு மென வேட்டியுஞ் சட்டையுமோ பட்டும் பகட்டு மென சேலையுஞ் சோளியுமோ அணிந்து இளித்துக்கொண்டிருந்தது அது இருமனம் இணையும் திருமண நிகழ்வை ஒருமனதாக யாவரும் ஏற்றுக்கொண்டிருந்தும் ஆணுக்கு வரவும் பெண்ணுக்கு செலவுமென மாற்றிக்கொண்டிருந்தது அது சிலாகித்தும் சமாளித்தும் சிரித்தும் மழுப்பியும் […]


 • காதலாகிக் கசிந்துருகி…

  காதலாகிக் கசிந்துருகி…

  தோற்ற மயக்கம் தொற்றாகி மொட்டை மாடியில் மல்லாந்து கிடந்த கல்லூரிக் காலங்களில் அவளை வருணிக்க வாய்த்திருந்த நிலா காய்ந்திருக்கும் நிலா நுகர்ந்த முல்லையெனவும் என் நெஞ்சுக்குள் அடைபட்ட காலங்களே அகிலத்தாருக்கு அமாவாசை யெனவும் ஒளிந்தும் ஒளிர்ந்தும் நிலா நிலவியதை அவளோடு ஊடல் கூடல் என் ஒப்பிட்டும் கசிந்துருகிய காலங்களிலும் நிலா காய்ந்திருக்கும் கலைந்திறாத கூந்த லொதிக்கிய கையினூடே கழட்டியனுப்பிய கடைக்கண் பார்வை குறித்து கிறுக்கித் தள்ளிய கவிதைகளிலும் நிலா இருக்கும் மேலேப் பார்த்தபோது நிலா உதிர்ந்துகொண்டிருக்கும் பெள்ர்னமி! […]


 • இருப்பு!

  இருப்பு!

  முற்றத்துக் கயிற்றுக் கொடிக்கும் வீட்டிற்கு மென மாறிமாறி உலர்த்தியும் விட்டுவிட்டுப் பெய்த தூறலின் ஈரம் மிச்ச மிருந்ததால் இரண்டு ஆண்டுகளுக்குமுன் இறந்துபோன வாப்பாவின் சட்டை யொன்றை உம்மாவிடம் கேட்க ‘வாப்பாவுக்கு ரொம்பப் பிடித்த’தாக தந்தச் சட்டை… நான் பிரயோகித்துப் புறக்கனித்துக் கழட்டிப்போட்ட ஒன்று! தென்னந் தோப்பில் கரும் பச்சையாய் செழிப்பா யிருந்த ஒரு வரிசை மரங்களைக் காட்டி புருவம் சுருக்க ‘அவை வாப்பா நட்ட’வை என்றான் தோட்டக் காப்பாளன்! முன் முற்றத்தில் தலைவாசலுக்கு வலப்புறம் பந்தல் பிடித்து […]