author

நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா

This entry is part 12 of 15 in the series 23 அக்டோபர் 2016

பிரமிளின் ‘ழ’ இதழ் நின்று போன பிறகு அழகிய சிங்கர் அதைத் தொடர்ந்து நடத்த முன் வந்தார். அது அமையாமற் போன போது ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘விருட்சம்’ என்ற பெயரில் துவங்கிய சிற்றிதழ் சிறிய தடைகளுக்குப் பின் ‘நவீன விருட்சம்’ இதழாய்த் தொடர்ந்து இன்று (23.10.2016)அதன் நூறாவது இதழ் 250 பக்கங்களுக்கும் மேலான பெரிய இதழாக வெளியிடப்பட்டது. மேற்கு மாம்பலத்தில் ஒரு சிறிய அரங்கில் நண்பர்களும் எழுத்தாளர்களும் பங்கேற்ற இனிமையான மாலை விழா அது. […]

களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’

This entry is part 15 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

ஆகஸ்ட் 2016 காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’ யதார்த்தக் கதைக்குள் பல அடுக்குகளைக் காட்டும் நல்ல முயற்சியாயமைந்திருக்கிறது.   சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பற்றி மிகையில்லாமல் சாளரங்களைத் திறக்கும் படைப்புக்கள் மிகக் குறைவு. நமக்கு அவர்களது வாழ்க்கைப் போராட்டம், குடும்பத்துக்குள்ளே வருமான அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள், உள்ளீடற்ற வெறுமை ஆகியவை மற்ற மதத்தவரிடமிருந்து எந்த விதத்திலும் வேறானதல்ல என்ற ஜன்னலே இந்தக் கதையில் திறக்கிறது.   இஸ்லாமியர் அனைவரும் பிற கலாச்சாரங்களை வெறுப்பவர் போன்ற ஒரு பிம்பத்தைப் […]

லெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை

This entry is part 4 of 13 in the series 20 ஜூன் 2016

ஜூன் 2016 மூன்றாம் வாரத்தில் ஒரு படகில் 44 இலங்கைத் தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவில் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட பிறகு இந்தோனேசியா அருகே உள்ள கடலில் நாட்கணக்கில் தத்தளித்ததும், இறுதியாக அவர்கள் இந்தோனேசியக் கரையில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளதும் பரப்பரப்பாக ஊடகத்தில் பேசப்பட்டது. மிகவும் வருத்தம் அளித்தது அவர்கள் திரும்ப இலைங்கைக்குப் போக விரும்பவில்லை. ஆஸ்திரேலியாவுக்குப் போகவே விரும்பினார்கள். ஜூன் 2016 காலச்சுவடு இதழில் இரண்டு கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. ‘இருண்ட பங்குனி’ என்னும் கட்டுரையில் அஜிதா தமிழ்ப் […]

ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு

This entry is part 14 of 15 in the series 5 ஜூன் 2016

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக குமுதம் ‘தீராநதி’ இதழைத் துவங்கிய போதே பெரிய பத்திரிக்கைகள் இலக்கியத்துக்கு சமகாலத்தில் வாசகர் தரும் கவனத்தைப் புரிந்து கொண்டது தெளிவானது. விகடன் தாமதமாக விழித்துக் கொண்டதற்குப் பரிகாரமாக கனமாக வந்திருக்கிறது.   மாத இதழ் இது. ஜூன் 2016 முதல் இதழ். பிரபஞ்சனின் நேர்காணலில் அவருடைய தனித்தன்மையான ஒரு கவனத்தை மறுபடி காண்கிறோம். பெண் படைப்பாளிகளை கவனிப்பதோ பாராட்டுவதோ மூத்த எழுத்தாளர்கள் தவிர்ப்பது. பிரபஞ்சன் எப்போதுமே அதில் விதிவிலக்கானவர். நேர்காணலிலும் தீவிர பெண் […]

19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள்

This entry is part 3 of 12 in the series 22 மே 2016

சுமார் மூன்றாண்டு காலத்துக்கு முன்பே வைகோ, சசி பெருமாள் போன்ற சமூக ஆர்வலர் மட்டுமே கையிலெடுத்த மது ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தார். ராமதாஸின் அரசியலில் மதுவுக்கு எதிரான நிலைப்பாடு எல்லா ஜாதி மக்களும் பாராட்டுவதாக இருந்தது. ஆறுமாதங்களுக்கு முன் வரை மதுவிலக்கே தேர்தலின் மையப் பிரச்சனையாக உருவெடுக்கும் என்னும் ஒரு தோற்றமே இருந்தது. ஆனால் அணி சேரும் கணக்குகள் ஆரம்பித்ததும் ஊடகங்கள் அதை ஒட்டி பொது மக்கள் கவனம் திரும்பி விட்டது. மதுவுக்கு அடுத்தபடியாக இலவசங்களை நாம் […]

அவளின் தரிசனம்

This entry is part 10 of 11 in the series 15 மே 2016

நான் படுக்கைக்கு எப்போது எப்படி வந்தேன் வியந்தபடி எழுந்தான் புள்ளினங்கள் விடிவெள்ளிக்கு நற்காலை வாழ்த்துகையில் நகை தாலி கூரைப்புடவை வைத்த இடத்தில் அப்படியே அவள் எங்கே? தாழிடாமல் வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது அவள் வந்ததே கனவோ? மீண்டும் அறைக்கு விரைந்தான் அவள் அமர்ந்த இருக்கைக்குக் கீழ் சிதறிய காட்டுப்புக்கள் வாடாமல் சிரித்தன குதிரையை விரட்டினான் பனித்துளிகள் படர்ந்த மலைவனத்தில் சுனை அருகே நினைவில் தேடி அடைந்தான் நேற்று புற்களாயிருந்த இடத்தில் ரோஜாக்கள் இளங்காலைப் பொற்கதிர்களில் புன்னகையில் மிளிர்ந்தன எங்கே […]

உரிமையில் ஒன்றானோம்

This entry is part 4 of 10 in the series 8 மே 2016

    சொற்பக் கூலிக்கு பல கோடி மதிப்புப் பொதிகளை இடம் மாற்றும் கூலிக்கு கடனே நிரந்தரம் பணி அல்ல இந்தத் தேர்தலுக்குப் பின்னும்   அவரது சயன அறை மற்றும் ஒரே தோழனான கட்டை வண்டியை விட அதிகம் ஒன்றும் பெரிதல்ல குடும்ப இருப்பிடம்   எனக்கிணையான உரிமை அவருக்கும் உண்டு வாக்களிக்க   இவர்களுக்கான என் சொற்கள் அனல் பறக்கும் என்பதைத் தவிர இவரது வாழ்க்கையுடன் எனக்குத் தொடர்பேதுமில்லை இன்னும் கூர்மையாய் என் எழுத்தைத் […]

நிறை

This entry is part 1 of 16 in the series 24 ஏப்ரல் 2016

    மனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர​ நினைவில் எதுவுமில் லை   காந்தமாக​ ஒரு தேவை நினைவூட்டலாக​ ஒரு அதிகார​ உரசல் மனவெளியைத் தோண்டித் தோண்டி ஊற்று நீர் தேடும்   என் குறைகளை நீக்க​ ஒண்ணாது உள்ளே என்ன​ குறை என்றே அவரோகணம்   பொம்மலாட்டக் கயிறு மட்டுமல்ல​ பொம்மைகளும் மாற்றிக் கொள்ளும் மேடையில் தன்வயமாயில்லாமல் இருப்பை வடிவை கைகளை   நிறைவு தந்த​ புனைவுக் கவிதையின் கதையின் […]

அன்னியமாய் ஓர் உடல்மொழி

This entry is part 13 of 16 in the series 24 ஏப்ரல் 2016

    அவர்கள் விட்டு வைத்தவை அவனுக்காக விட்டுக் கொடுக்கப் பட்டவை என்றார்கள்   பணியிடமும் வீடும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றனர்   மைல்கற்கள் கோலத்தின் வேவ்வேறு புள்ளிகள் வரைபடங்களின் அம்புக் குறிகள் அதிகாரத்தின் துய்ப்பின் மையங்களாய் வாய்ப்புக்களுக்கு வழி காட்டின   விதைப்பு உழைப்பு என்னும் கண்ணிகளே இல்லாத அறுப்பு பங்களிப்பே இல்லாத லாபம் உறுதி செய்யும் உடல் மொழி என்றுணர்ந்தான்   மாய வித்தைக்காரன் பாம்பாட்டி கழைக்கூத்தாடி கல்லூளிமங்கன் யாரிடமும் புதிய […]

அக இருப்பு

This entry is part 17 of 17 in the series 10 ஏப்ரல் 2016

அம்மாவின் ஸ்பரிசத்தில் அனுதினமும் தென்றலாயிருந்தது பசி வந்து அழைக்கும் போது மட்டும் வீடு சேரும் நாளில் செல்லப் பிராணியாய் அலுவல் குடும்பம் அலைக்கழிக்க துய்ப்பு செல்வம் தொடுவானில் நிற்க வழித்துணையாய் புனைவும் பொறுப்பும் கயிறு இழுத்த போட்டிக்கு இடைப்பட்டு சுமைதாங்கியாய் தரிசனங்களின் அலைகள் கட்டுமரமாய் அசைக்கும் நடு ஆயுளில் சொரணை அதிகமான இணையாய் உறக்கம் பறவைகளுக்கு ஆதவன் அடியொட்டி சிறகு விரிப்போ ஒடுங்குவதோ அகமென்பதில்லை அகமே புனைவின் அடிப்படையாயிருக்க சிறகுகளுக்குப் பகலிரவில்லை