ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் என்றோ பார்த்து பாதிக்கப்பட்ட உணர்வுகள் இதயத்தில் ஆழமாகப் புதைந்து தங்கிவிடுகின்றன. அதன் எதிரொலி பிற்காலத்தில் வரலாம் அல்லது வராமலும் போகலாம். கல்லூரிப் படிப்பை முடிக்கவும் படித்த பள்ளியிலேயே வேலை கிடைத்தது எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. அப்படியே தொடர்ந்திருந்தால் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆகும்வரை நீடித்து அங்கேயே இருந்திருக்கலாம். பிள்ளைப் பருவம் முதல் ஓடி விளையாடிய பூமியில் அமைதியான வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கலாம். காலம் என்னைப் […]
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாதீர் வையக்கு அணி இரு செய்திகளைப் பதிவு செய்யவே இத்தொடர் தொடங்கப்பட்டது வெறும் செய்திகளை மட்டும் கூறுதல் அந்தச் செயல்பாடுகளின் வலிமை தெரியாமல் போகும். அரசு எடுக்கும் எந்தத் திட்டமும் மக்களுக்காகத்தான்.. அதாவது நமக்காக. செலவழிக்கப்படும் நிதியும் நம்முடையது. எனவே முழுமையான பலன் கிடைக்க நம்முடைய பொறுப்புகளையும் எழுத வேண்டி வந்தது. சில எடுத்துக் காட்டுகளுடன் விளக்கம் தரப்பட்டது. இப்பொழுது தொடரைத் தொடரலாம். குழந்தைகள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைப் […]
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு இருட்டுக் குடிலிலிருந்து உயிர் வெளியே வந்தது. வெளி வந்த உயிரிடமிருந்து எழுந்த முதல் ஓசை அழுகை அதன் பயணத்தை உணரும் சக்தி அப்பொழுதே அந்த உயிருக்கு இருந்ததோ?! சுற்றி நின்றவர் சிரித்தனர். மகிழ்ச்சியாலா அல்லது அவர்கள் போராட்டத்திற்கு ஓர் கூட்டாளி வந்துவிட்டான் என்பதாலா?! நாம் இலக்கியம் படைக்கும் பொழுதே வாழ்வியலை அகம் என்றும் புறம் என்றும் பிரித்திருக்கின்றோம். மனிதனின் வளர்ச்சியையும் அப்படியே பிரித்துப் பார்ப்பதே சிறந்தது. குழந்தையின் […]
புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப் படும். மனிதனின் வாழ்க்கையில் பல பருவங்கள் அவன் உருவாகும் காலத்தில் பிள்ளைப் பருவம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. உடல் மற்றும் மனம் வலிமை பெறுவது இக்காலத்தில்தான். மனித வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் இப்பருவத்தினைப் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சுவதற்கும் விளையாடு வதற்கும் மட்டுமல்ல. மனிதன் பொறுப்புடனும் அக்கறையுடனும் பாதுகாக்கப்பபட வேண்டியது , குழந்தைப் பருவம், சிறுவர்களாக இருக்கும் காலம். இவைகளில் கவனம் செலுத்தும் […]
சீதாலட்சுமி அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொல னாகப் பெறின் இசையில் ஏழு ஸ்வரங்கள் ஆனால் அது காட்டும் பரிமாணங்கள் எத்தனை எத்தனை ! இசை கற்றவரெல்லாம் சுயமாக ஸ்வரங்கள் அமைத்து ராகம் பாடிவிட முடிவ தில்லை. அது ஒரு சிலரால் மட்டுமே முடிகின்றது. இது சங்கீதத்தில் மட்டுமல்ல. சமூக நலப் பணிசெய்ய வந்தவரெல்லாம் பெரிதும் ஈடுபட்டு தொண்டு செய்ய முடிவதில்லை .அதனால் பலரின் விமர்சனங்களுக்கு இந்த பணி ஆளாக நேரிடுகின்றது. எனக்கு நான் […]
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின். தமிழ்நாடு சமூக நல வாரியம் திருமதி .அம்புஜம்மாள் தொடங்கி திருமதி சரோஜினி வரதப்பன், இன்னும் பலர் அதன் தலைமைப் பொறுப்பேற்று செய்த சாதனைகள் பல. அதனால்தான் அவர்கள் இன்றும் வரலாற்றில் நிலைபெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். திருமதி. அம்புஜம்மாள் அண்ணல் காந்திஜியின் மகள். ஆம் அப்படித்தன் அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பெற்ற தந்தையின் பெயர் திரு சீனிவாசன் ஆகும் ஆனாலும் தனக்கு தந்தைகள் இருவர் […]
ஊறெரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டில் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் நாட்டுக்காக விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் அதன் எழுச்சியின் வேகம் கூட்டுப் பறவையாக இருந்த பெண்ணை வெளியில் எட்டி பார்க்க வைத்தது. “பெண் விடுதலை” என்ற புதுப்பாட்டும் ஒலிக்க ஆரம்பித்தது. அப்படியென்றால் அவள் வாழ்ந்து வந்தது சிறைக்குள்ளா? வேறு பெயர் வைத்திருக்கலாமோ ? பெண் கல்வி, பெண் சுதந்திரம் என்று ஆரம்பித்தால் இதிகாசமும் இலக்கியமும் வரலாறும் போட்டி போட்டுக் கொண்டு சில நிகழ்வுகளைக் காட்டி […]
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு முதுமை ஒரு சுமையா? ஒடுங்கியிருக்கும் உள்ளத்திற்கு உயிர்ச் சத்து கொடுக்க கடந்த கால நினைவு களுக்கு வலிமை உண்டு. பயனுள்ள பயணமாக இருத்தல் வேண்டும். உடல் வலி மறக்க வாசிப்பு, எழுத்து, தியானம் உதவிக்கரம் நீட்டும். வாடிப்பட்டியில் இருந்த ஐந்தாண்டு காலம் ஓர் பல்கலைக் கழகத்தில் படித்த உணர்வும் நிறைவும் இப்பொழுதும் இருக்கின்றது. எத்தனை மாறுதல்கள்?! அரசியல் பாடம் நேரடியாகப் பெற்றதும் இங்கேதான். […]
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல் அடிமைத்தளை நீங்கியவுடன் நம் முதல் இலக்கு கிராமப் புனருத்தாரணம் கிராம ராஜ்யம் நம்மிடம் மந்திரக்கோலா இருக்கின்றது ?! கிராமங்களில் அனைத்து வசதிகளும் வர வேண்டும். சுதந்திர நாட்டின் உயிர்நாடி கிராமங்கள். எத்தனை பணிகள் செய்ய வேண்டியிருக்கின்றன ?! ஊரக வளர்ச்சித் திட்டம் தோன்றியது. எங்கும் காந்தீய மணம். பயிற்சி நிலையங்களான காந்தி கிராமமும் கல்லுப்பட்டியும் வார்தாவின் வார்ப்புகள். ஒவ்வொரு நடவடிக்கையும் ஆசிரம வாழ்க்கையாக இருந்தது. கழிப்பறை கூட […]
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் நினைவலைகள் 60 ஆண்டுகளுக்குமுன் செல்கின்றது. சுதந்திரம் பெற்றவுடன் என்ன மகிழ்ச்சி ! என்ன பெருமை. திருவிழாக்களின் உற்சாகம். புதிய ஆடைகள் வாங்கி உடுத்தி மகிழ்வதுபோல் புதிது புதிதாக திட்டங்கள் வகுத்து, செயலாற்றத் தொடங்கினோம். கட்டப்பட்ட அணைக்கட்டுக்களின் காலத்தைப் பாருங்கள். ஆட்சிகள் மாற்றத்தில் அணைகள் இடிக்கப்படவில்லை. பராமரிப்பும் நிற்கவில்லை. மின்வசதியில்லா கிராமங்களைப் பார்த்துப் பார்த்து இணைப்புகள் கொடுக்கப்பட்டன (இன்று இணைப்பு இருந்தும் கரண்ட் வரவில்லையே என்று இருக்கின்றதா? இதற்கு […]