செங்காளி பொழுது புலரும் நேரத்தில் ஒரு சிற்றூரில் எழும் ஓசைகளெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து எப்படி பூபாளம் என்னும் பண்ணில் பாடுவதைப்போல் இருக்கின்றது என்பதைச் சொல்லும் பாடல்கள் —————————————————————————————————– பொழுதும் புள்ளினமும் கொக்கரக் கோவெனக் கோழிகள் கூவிட காக்கைகள் ஒருசில காவெனக் கரைந்திட குருவிகள் கூட்டம் கீச்செனக் கத்திட இருள்தான் மெதுவாய் இளகிடும் நேரம் வெள்ளி முளைக்குமிவ் விடியற் காலையில் மெல்லென கிராமம் முழித்திடும் வேளையில் பண்ணை வீட்டில் பட்டியில் தொட்டியில் என்னதான் நடக்குதென எட்டிப் பார்ப்போம் அவளும் குடும்பமும் கிழவன் எழுமுன் கிழத்தி எழுந்து நழுவின சேலையை நன்றாய்க் கட்டி அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்து தொழுதபின் கண்களில் தாலியை ஒற்றி […]
– செங்காளி – மறைந்த யுகத்தில் மானிடர் எல்லாம் இறைவன் அருளால் இருந்தனர் கடவுளாய் கடவுள் தாமென்ற கர்வத்தில் அவர்கள் அடக்கம் இன்றி அழும்புகள் செய்தனர். இதனைப் பார்த்த இதர கடவுளர் வேதனை மிகைப்பட வேண்டுதல் செய்திட நாடியே வந்தனர் நான்முகன் தன்னை வாடிய முகத்துடன் வந்ததைச் சொல்லிட மூவருள் செயலால் முதலில் வருபவன் ஆவன செய்வோம் அஞ்சிட வேண்டாம் தவறு செய்வோர் தெய்வத் தன்மையை அவரிட மிருந்து அகற்றி விடுவோம் தீவினை செய்பவர் திறனே போய்விடும் […]