ஷைலஜா ஆண்டு தோறும் மைசூரில் நடக்கும் தசராத்திருவிழா உலகப்பிரசித்திபெற்றது. அதற்கான ஏற்பாடுகளை பலநாட்கள் முன்னமே தொடங்கிவிடுவார்கள். கலை நிகழ்ச்சிகள் பாரம்பரிய நடனங்கள் இசை நாடகம் என மைசூர் நகரமே களை கட்டும்! தசராவில் முக்கிய அம்சமாய் இடம் பெறுவது ‘ஜம்போசவாரி’ எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவைகளின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுக்களும். . தசரா வைபவத்தையொட்டி யானைகள் காட்டிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. அவைகளை ஒத்திகையின்போதே நகரத்தின் தார் சாலையில் ஏறத்தாழ 40கிலோமீட்டர் தினமும் நடந்து செல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. […]