வல்லரசாவோமா..!

  முழுப் பூசணிக்காய்கள் முற்றிலுமாய் மறைக்கப்படுகின்றன சோற்றுக்குள்.. மீறியும் தெரிந்தால், அதை மறைக்க அறப்போராட்டங்கள்.. திகார் கம்பிகளுக்கும் தெரியாமல் வெளியே தவறிழைக்கும் வாரிசுகள்.. ஆணவ அரசியலில், அக்கரையில்லாமல் போச்சுது மக்கள் மீது.. போவது தெரியாததுபோல் நடிக்கும் பொம்மை அரசுகள்.. ஊழலை எதிர்ப்பவன்…

அந்தப் பாடம்

பூவைப் பறிக்கிறோம், செடி புன்னகைக்கிறது மறுநாளும்.. காயைக் கனியைக் கவர்கிறோம், கவலைப்படவில்லை காய்க்கிறது மறுபடியும்.. கிளைகளை ஒடிக்கிறோம், தளைக்கிறது திரும்பவும்.. தாங்கிக்கொள்கிறது புள்ளினத்தை- ஓங்கிக்கேட்கிறது பலகுரலிசை.. அட மரத்தையே வெட்டுகிறோம், மறுபடியும் துளிர்க்கிறதே ! மீண்டும் வெட்டாதே .. மனிதனே, உனக்கு…

அவனேதான்

ஆட்டுக்கு புல்லைக்காட்டி அழைத்துச் செல்கிறான் கழுத்தை வெட்ட.. மீனுக்கு புழுவைக்காட்டி தூண்டிலில் பிடித்து துடிக்க வைக்கிறான்.. பசுவிடம் பால்கறக்க போலியாய்க் கன்றைக் காட்டி காரியம் சாதிக்கிறான்.. இத்தனையும் தானாகி இலவசத்தால் ஏமாந்து ஜனநாயகம் என்ற பேரில் சந்தியில் நிற்கிறான் ! -செண்பக…