பொம்மரிலு பாஸ்கரால் இயக்கப்பட்டு, வெற்றியடைந்த ‘ஆரஞ்ச்’, மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. வாழ்க்கை முழுதும் காதல் இருக்கும் என்று நம்பும் பெண்ணும், காதல் கொஞ்ச நாட்கள் தான் இருக்கும். பிறகு, சொல்லப்படும் பொய்களே அதன் ஆயுளை நீட்டிக்கும் என்று உணரும் ஆணும், ஆஸ்திரேலிய பின்னணியில் நடத்தும் ‘நீயாநானா’ பார்த்தவுடனே காதலிப்பதும், பொய் சொல்ல வேண்டி வந்தால், அதை முறித்துப் போடுவதுமான கொள்கை கொண்ட ராம் ( ராம் சரண் ), ஜானுவை ( ஜெனிலியா டிசோசா ) […]
பத்து நிமிடங்களில் ஒரு திரில்லரைச் சொல்ல முடியும் என்று நிருபித்திருக்கிறார் அனில். மூன்றே பாத்திரங்கள். இரண்டு ஆண், ஒரு பெண். இடையில் நுழையும் காதல். அதனால் ஏற்படும் மரணங்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் ரியாவுக்கு ஒரு செல்பேசி அழைப்பு. “என் பி கம்பென்¢யில் உன் ரிசூயுமைப் பார்த்தேன். உன்னை தேர்ந்தெடுத்து விட்டார்கள். உடனே வேலையில் சேர்ந்து விடு “ “ மை காட்.. தாங்க்யூ.. எங்கே வர வேண்டும் ?” “ இந்திரா நகர் எக்ஸ்டென்சனில் பூலுவப்பட்டி […]
ரிலே ரேஸ் போல, ஒரு கடத்தலை, ஓரு சில நிமிடங்களில், திகிலுடன் சொல்லியிருக்கிறார் ஹ¤சைன். விரைவில் தெலுங்கில் ‘ பர்கர் ‘ என்று ஒரு முழு நீள திகில் படம், அவரிடமிருந்து வரலாம். தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் இளைஞனுக்கு, ஒரு செல்பேசி அழைப்பு வருகிறது. குரல் தன்னை ‘பாஸ்’ என அடையாளம் சொல்கிறது. ‘ உனக்கு பத்து லட்சம் வேண்டுமா? நான் சொல்கிறபடி செய் ‘ என்கிறது குரல். பத்து நிமிட அவகாசத்தில், உடை […]
சிறகு இரவிச்சந்திரன் கணினி சம்பந்தப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்தி, அதுவல்லாத ஒரு டேட்டிங், மீட்டிங், காதலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர், காமெடியுடன்.. கதை கொஞ்சம் பாண்டசி ரகம். பெரிய டிபார்ட்மெண்ட் கடையில், ஒரு வாலிபனும், ஒரு பெண்ணும். சைட் அடிக்கும் சராசரி வயது, இருவருக்கும். பெண் ஒரு டெடி பேர் எடுக்கிறாள். பையன் ஒரு ஜட்டி பெட்டியை.. ‘பிளாஸ்டிக் பைகள் இந்தக் கடையில் பயன்படுத்தவில்லை’ என்று ஒரு அறிவிப்பு பலகை. சிகப்புக் கலர் அட்டைப் பைகளில், பொருட்கள் தரப்படுகின்றன. வீட்டில், […]
காந்தியவாதியின் மகன், தில்லுமுல்லு பேர்வழி. கோடீசுவர மது வியாபாரியின் மகள் சமூக சேவகி. மதுவை வென்று, காந்தீயம் நிலைக்கும் கதையை, கிச்சு கிச்சுவோடு சொல்லியிருக்கிறார்கள் 145 நிமிடங்களில். அடிப்படையில் ஒரு காதல் கதை. ஆனால் சுவாரஸ்யமாக, சிறு வயது பகை, ஆள் மாறாட்டம், நகைக் களவு என்று சில வண்ணங்களைச் சேர்த்து, பளபள பட்டாக்கி இருக்கிறார் இயக்குனர் ஷ·பி. நடிகர்கள் தேர்வில், தலைமையாசிரியர் பட்டம் அவருக்கே. நாயகன் குஞ்சாக்கோ போபன் என்றாலும், நடிக்க வாய்ப்பு, ஜெயசூர்யாவுக்குத்தான். பெண் […]
ஏமாற்றிக் கெடுத்தவனை, ஏமாந்தவள் ஒருத்தி, பழி வாங்கும் பழைய கதை. ஆனால் பழைய பானையில் புதிய கள்ளு என்பது போல், வ்¢த்தியாசமான திரைக்கதை, நடிப்பு எல்லாமே. டெஸ்ஸா ஆப்ரகாம் ( ரீமா கலிங்கல் ) பெங்களூர்¢ல் வேலை பார்க்கும் இளம் செவ்¢லித்தாய். அவளுக்கும், அவளைப் போன்றோருக்கும், ஒரே கனவு, கனடா போய் செட்டில் ஆவது. அறைத் தோழி ஒருத்தி சிரில் ( ·பகாத் ·பாசில் ) என்பவனின் டிராவல் ஏஜென்சி மூலமாக, கனடா போகும் வாய்ப்பைப் பெறுகிறாள். […]
தோப்பில் முகம்மது மீரான் மொழிபெயர்ப்பில் அம்ருதா இதழில் வெளிவந்த கதையைப் படித்தவுடன் இதைப்பற்றி எழுதியே தீரவேண்டும் என்கிற ஒரு உந்துதல். ரோசி என்கிற மணமான பெண்ணைப் பற்றிய கதை. இனோஸ் அவளது கணவன். சுரேஷ் என்கிற மருத்துவன் அவனது பள்ளிக்கால நண்பன். கதை இவர்கள் மூவரைப் பற்றியது. கதை செக்ஸ் சம்பந்தப்பட்டது என்றாலும், அதை ஒரு மணமான இளம் பெண்ணின் கோணத்தில் அலசியிருப்பதுதான் இந்தக் கதையின் புதுமை. இனோஸ் சுரேஷை வற்புறுத்தி, தான் வசிக்கும் ஊரில், கிளினிக் […]
எதிரி உன் விருந்தாளியெனில், அவனைக் காப்பது உன் கடமை – சீக்கியர்களின் வேத வாசகம். 25 ஆண்டு கால பகையைப் புறந்தள்ளி, விருந்துக்கு அழைத்த எதிரியை காத்து, கொல்லவும் காத்திருக்கும் பில்லுவும், அதிலிருந்து தப்பிக்க அசத்தல் திட்டம் போடும் ஜெசியும், சேர்ந்து ஆடும் ஜோக்கர் ஆட்டம். ‘நான் ஈ ‘ ராஜமௌலியின் தெலுங்கு ‘மரியாத ராமண்ணா’வின் இந்தியாக்கம். சர்தார்ஜி, பஞ்சாபி என களம் மாறியதில், காமெடி கனம் இழந்து நிற்கிறது. ஆனாலும் சொன்ன வரையில், சுவைதான் என்பதில், […]
தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு வேளை கதையே தாவித் தாவி தலைகீழாகத் தொங்குவதால் வைத்திருப்பாய்ங்களோ? காசிராமன் என்கிற வவ்வால் ( அறிமுகம் ராகுல் ) கேபிள் டிவி கனெக்ஷன் கொடுக்கும் பையன். குடும்பத்தில் எல்லோரும் படித்தவர்கள். இவன் மட்டும் படிக்காத மேதை. அப்பா அனந்தராமனின் ( நரேன் ) பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகும் கேரக்டர், வயசுப்பொண்ணு சௌம்யா ( உத்ரா உன்னி ) மேல் இண்ட்ரஸ்ட் ஆகிறான். நடுவில் திடீரென்று தாவி, சென்னை வருகிறான். ஏன்? […]
எல்லோரும் சுயநலத்துடன் வாழ்வதால் தாயை இழந்து, தன் குடும்பத்துக்காக மட்டும் வாழும் ஒருவனை, பொதுநலத்தை நோக்கித் திருப்பும் பட பட பட்டாசு கதை. பத்துக்கு ஆறு இலாக்களைக் கையில் வைத்துக் கொண்டு பேரரசு இயக்கிய படம். அதில் முன்னோடியான டி.ஆரைப் பாடவைத்தது புத்திசாலித்தனம். ஆனால் எத்தனை நாட்களூக்கு ஒரே மாவை வைத்து இட்லி, தொசை, ஊத்தப்பம் என சுடுவார் என்பது ரசனைப் பசி உள்ள ரசிகனின் கேள்வி. ஐந்து நட்சத்திர ஓட்டல் சமையல்காரர், வேலை இழந்து கையேந்தி […]