ஸ்பீல்பெர்க்கின் பேக் டு பியூச்சரையும் ஆர்னால்டின் டெர்மினேட்டரையும் கலந்து கட்டி அடித்த சயின்ஸ் பிக்ஷன் கதை. கிபி 2074ல் கால இயந்திரத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் அரசாங்கம் தடை செய்த அதைக் கொண்டு, ரெயின் மேக்கர், வயதானவர்களை, 2044க்கு அனுப்பி, அழிக்கிறான். அதைச் செய்து முடிக்கும் கொலைகாரப் படைக்கு லூப்பர்கள் என்று பெயர். அவர்கள் கிபி 2044ல் வாழும் இளைஞர்கள். கொன்றால், பரிசு, செத்தவன் முதுகில் கட்டப்பட்டிருக்கும் வெள்ளிக் கட்டிகள். ஒரு லூப்பர் 2074ல் இருந்து வரும், […]
·பேம் மல்டிப்ளெக்சில் சக்கரவியூஹ் இந்திப்படம். பத்து ரூபாய் டிக்கெட்டை பாப்கார்னோடு 100 ரூபாய்க்கு விற்றுவிட்டதாலும், பாப்கார்னும் பெப்சியும் நிதான நிலையில் நான் உட்கொள்வதில்லை என்பதாலும், 120 டிக்கெட்டில் போனேன். என் சீட் எம் 8. அஷ்டமத்தில் சனி! 7ம் நம்பர் ஆசாமி பழைய துணி போட்டு வாங்கிய பிளாட்டிக் டப்பில் பாப்கார்ன் கொரித்துக் கொண்டிருந்தார். ஆள் இரட்டை நாடி. இரு புறமும் கடோத்கஜ புஜங்கள். ஒடுங்கிக் கொண்டு படம் பார்த்தது பத்ம வியூக அனுபவம் எனக்கு. ஆயாளும் […]
மூன்று வாரமாக மல்டிப்ளெக்சில் ஓடுகிறதே என்கிற கியூரியாசிட்டியில், படம் பார்க்கப் போனேன். கிடைத்த அனுபவம் சூப்பர். ஓரளவிற்கு ரன்பீர் கபூர் நல்ல நடிகர் என்பது, எனக்கு ராக்கெட் சிங் பார்த்தபோதே புலப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்தவுடன் அது உறுதி பட்டது. ஒல்லி பெல்லி இலியானா, இதில் கனமான (!) பாத்திரத்தில். அந்த ஒட்டிய கன்னங்களும், அழகுக் கண்களும், கவிதை பேசுகின்றன. படத்தில் பிரியங்கா சோப்ரா இருக்கிறார் என்று தெரியும். ஆனால் இப்படி இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. சிம்ப்ளி […]
“ மைசூருக்கு பக்கத்திலேயாமே? சாந்தா சொன்னாள் “ செல்லம்மாள் குரலில் குதூகலம் தெரிந்தது. இனிமே லீவுக்கு மாயவரம் போக வேண்டாம். புது இடம் ஒன்று க்¢டைத்து விட்டது. வருடா வருடம் மாயவரம் போய் பிள்ளைகளும் செல்லம்மாவும் அலுத்துப் போயிருந்தார்கள். மூன்று வேளையும் சோறு, மாமரத்து ஊஞ்சல் எல்லாம் போரடிக்க ஆரம்பித்து விட்டது. எல்டிசி என்றால் எனக்கு மாயவரம் தான். அங்கேதான் என் அம்மாவைப் பெற்ற தாத்தா இருக்கிறார். பூர்வீக வீடு இருக்கிறது. மூன்று கட்டு வீடு. உள்ளே […]
சிறகு இரவிச்சந்திரன். போரூர் நூலகத்தில், நாளிதழ்களுக்குத்தான் கூட்டம் அலைமோதுகிறது. இதழ்களைக், குறிப்பாக இலக்கிய இதழ்களைச், சீந்துவாரில்லை. வேலை தேடும் வசதியில்லாத இளைஞர்கள், கிடைக்கிற பேருந்துப் பயணச்சீட்டுகளில், குறிப்பெடுத்துக் கொள்கிறார்கள். அதுவும் கிடைக்காதவர்கள், வார, மாத இதழ்களின் வெள்ளை மார்ஜின்களை லாவகமாகக் கிழித்துப் பயன்படுத்துகிறார்கள். நான் பார்த்த வரை, யுவதிகள் கண்ணில் படக்காணோம். ஒரு வேளை அந்த வேலையை, அவர்களுக்காக, அவர்களின் தந்தைமார்கள் செய்து கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில், குறிப்பேட்டுடன் போன என்னை விநோதமாகப் பார்த்தவர்கள் உண்டு. […]
யாவரும் நலம் படத்திற்குப் பிறகு, நல்லதொரு திகில் படத்தைப் பார்த்த அனுபவம். பாடல்கள் மட்டும் இல்லாதிருந்தால், நல்லதொரு ஹாலிவுட் படத்தின் மொழி மாற்றம் என்றே சொல்லலாம். தேசிய விருதுக்கு தகுதியான நடிகைதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறார் பிரியா மணி. வாலி அஜீத்தை, பெண் பாத்திரமாகக் கற்பனை செய்து கொண்டால், அதுதான் லதா. அப்படியொரு வன்மம் கண்களில். சபாஷ். அமானுஷ்ய கதையில், வெறும் பயமுறுத்தலை மட்டுமே பிரதானமாகக் கொள்ளாமல், சில எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டு வந்ததற்கு, இயக்குனரைப் […]
சிறகு இரவிச்சந்திரன். சிறகின் ஆரம்பமே, கல்வெட்டு சொர்ணபாரதி நிகழ்த்திய, ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவில்தான் நடந்தது. கவிஞர் பால்நிலவன் “ தேவநேயப்பாவாணர் சிற்றரங்குக்கு வாருங்கள்.. அங்கே சில தோழர்களைச் சந்திக்கலாம் “ என்றார். போனதில், ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கும் முன்பே, கையில் கல்வெட்டும், ஒரு கவிதை நூலும் திணிக்கப்பட்டது. அப்படி அற்¢முகமானவர்தான் முகவை முனியாண்டி (எ) சொர்ணபாரதி. சில காலம் தொடர்பில்லாமல் போய், திடீரென்று என் வீட்டு கடிதப் பெட்டியில் கல்வெட்டு! ஆகஸ்டு இதழ்! […]
சேத்தன் பகத் – தமிழில் சிறகு இரவிச்சந்திரன். அன்னிய ஆங்கில எழுத்தாளர்களுக்கு நிகராக சேத்தன் பகத் நாவல்கள் போற்றப்படுகின்றன. பகத் வட இந்தியக்காரர். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுகிறார். எல்லாம் இந்தியாவைப் பற்றி. ஒரு நாட்டின் உள்விசயங்களைத் தெரிந்து கொள்ள, அவரது கதைகளை, அயல்நாட்டினர் அள்ளிக் கொண்டு போகிறார்கள். சுவாரஸ்யம் கூடினால், சுற்றுலா பயணியாக வந்து விட்டு போகிறார்கள். அரசுக்கு லாபம் அன்னிய செலாவணி. சேத்தன் பகத்தின் ஒரு நாவலைத் தழுவி 3 இடியட்ஸ் எடுத்து நண்பனாகவும் […]
சிறகு இரவிச்சந்திரன். Little drops make an ocean என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. Little scenes make a Mishkin film என்பது புதுமொழி. முகமூடி அக்மார்க் தமிழ்ப் படம். ஆனால் டைட்டில் கார்டில் காட்டப்படும் பெயர்கள் எல்லாம் ஆங்கிலத்தில்! புதுமை அத்தோடு குளோஸ். மற்றபடி, படத்தில் வருவது எல்லாம், வழக்கமான உட்டாலக்கடிதான். வழக்கமான கதைகள் இப்படி இருக்கும். அண்ணன் கடத்தல்காரன். தம்பி போலீஸ்காரன். இது எம் ஜி ஆர், நம்பியார், அசோகன் பார்முலா. ஒரே […]
சிறகு இரவிச்சந்திரன். ஹீரோ சைக்கிளின் கதை ஒன்றும் புதுமையில்லை. ஆனால் ஒரு சைக்கிள் ஹீரோவாகும் கதை புதுமைதானே! பாகனின் அச்சாணியே ஒரு சைக்கிள் தான். வாய்ஸ் ஓவரில் கதை நகர்த்தும் உத்தி அரதப் பழசு. ஆனால் அந்த வாய்ஸ் ஒரு சைக்கிளுடையது என்றால் புதுசுதானே! அதுதான் பாகனின் ஸ்பெஷாலிட்டி. சித்தார்த்தின் “ காதலில் சொதப்புவது எப்படி “ யை, ரீ வைண்ட் பண்ணி, ஓட்டிப் பாருங்கள். அதில் சித்துவுக்கு பதிலாக ஸ்ரீகாந்தைப் போடுங்கள். பேக்கிரவுண்டை கிராமமாக […]