author

ஆர். பன்னீர்செல்வத்தின் “ 18 வயசு “

This entry is part 35 of 37 in the series 2 செப்டம்பர் 2012

சிறகு இரவிச்சந்திரன். ஒரு சிக்கலான முடிச்சை எடுத்துக் கொண்டு, ஓரளவு தெளிவாக கதை சொல்ல முடியுமென்றால், அந்த இயக்குனருக்கு ஓரளவுக்குத் திறமை இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளலாம். அது பன்னீர்செல்வத்தின் விசயத்தில் உண்மையும் கூட. ஆனால், மறை கழண்ட கதையா, கூப்பிடு பன்னீரை என்று திரையுலகம் ஏலம் போடும் ஆபத்தும் அவருக்கு இருக்கிறது. உஷார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பிரபல தயாரிப்பாளர். ஆனால், அதற்காக, தன் மகன் ஜானிக்கு, இம்மாதிரி வேடங்களையே அவர் தேர்ந்தெடுத்தால், நிக் மகன் […]

கவிமுகில் – தாராபாரதி விருது வழங்கும் விழா

This entry is part 13 of 37 in the series 2 செப்டம்பர் 2012

  சிறகு இரவிச்சந்திரன். பத்தாண்டுகளுக்கு முன்னர், கவிஞர் தாராபாரதி பெயரால், விழா எடுத்து, விருது வழங்கியவர்களில் முன்னோடி, இலக்கியவீதி இனியவன். அப்போது அவருடன் துணை நின்றவர் தாராபாரதியின் அண்ணன் கவிஞர் மலர்மகன். முதுமை காரணமாக இனியவன் செயல்பட இயலாததால், கடந்த சில வருடங்களாக, ஆண்டு தோறும் அமரரான தம்பிக்கு விழா எடுத்து, சிறந்த நூல்களுக்குப் பரிசும் பாராட்டுப்பத்திரமும் கொடுக்கிறார் மலர்மகன். வெறுங்கை என்பது மூடத்தனம் / விரல்கள் பத்தும் உன் மூலதனம் என்ற நம்பிக்கை வரிகளை எழுதிய […]

பா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “

This entry is part 26 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சிறகு இரவிச்சந்திரன். விளையாட்டைப் பற்றிப் பல படங்கள் வந்ததுண்டு. இது ‘விளையாட்டு ‘ப் பையனை பற்றிய படம். நாமும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். மரத்தடியில், பஸ் ஸ்டாப்பில், ஒத்த வயது நண்பர்கள் இயல்பாகப் பேசிக் கொள்வது போலவே, படம் எடுப்பது, இப்போதைய டிரெண்ட். அதற்கு முதல் வித்து வெங்கட்பிரபு. ரஞ்சித் அவரது சிஷ்யன். பின் படம் வேறு எப்படி இருக்கும்? தினகரன் (எ) தீனா ( தினேஷ் ) +2 அரியர்ஸ் மாணவன். பூர்ணிமா […]

ஆழி – ஜாகீர்ராஜா நூல்கள் வெளியீடு

This entry is part 13 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சிறகு இரவிச்சந்திரன். முகநூலில் மாலை 5 மணி என்று அறிவிப்பு. இடம் டிஸ்கவரி புக் பேலஸ், கே கே நகர். வழமை போல 6 மணிக்கு ஆரம்பித்தார்கள். அதற்குள் சொற்பக் கூட்டம் தேங்கியது. விழா முடியும்போது 50 பேருக்குக் குறையாமல் இருந்தார்கள். விழா மேடையில் சா. கந்தசாமி, ( 7 மணிக்கு வந்த ) பாரதி கிருஷ்ணகுமார், தி.பரமேசுவரி, கவின்மலர், ஆழி செந்தில்நாதன். உட்கார மறுத்த ஜாகீர்ராஜா! 21ம் நூற்றாண்டுச் சிறுகதைகளை வெளியிட்டுப் பேசினார். சா. கந்தசாமி. […]

அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “

This entry is part 31 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

  சிறகு இரவிச்சந்திரன். பாலியல் கதைகளைத் தாண்டி, எப்போதாவது வணிக இலக்கிய(!) இதழ்களில், நல்ல கதைகள் வரும். அப்படி நான் கண்ணுற்று எழுதியதுதான் சுகுமாரனின் ‘சர்ப்பம் ‘, பிரபஞ்சனின் ‘ மரி என்கிற ஆட்டுக்குட்டி ‘. எந்வொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நான் நூலகத்திற்குப் போகிறேன். இன்றும் அப்படித்தான் போனேன். ஆனால் அதிர்ஷ்டம் பாருங்கள்! ஒரு நல்ல கதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே ஒரு குறை. கதை தமிழில் என்றாலும், மூலம் மலையாளம். வந்தது உயிர்மை ஜூலை […]

ஆர். மாதேஷின் “ மிரட்டல் “

This entry is part 26 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

இன்னும் படம் பார்க்காதவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்குள் இருக்கும் கோபாலை, அதாங்க நக்கீரனை நகர்த்திவிட்டு, படம் பாருங்கள். பிடிக்கும். இல்லையென்றாலும் பிடிக்கும், பைத்தியம். பெண்மையின் நளினம் கலந்த ஒரு நாயகன் ( வினய் ), ஆண்மையின் கம்பீரம் கலந்த (சில கோணங்களில் அவன் இவன் விஷால் போலவே இருக்கும் ) நாயகி (ஷர்மிளா மந்த்ரே). இவர்களை வைத்துக் கொண்டு, காமெடி பண்ணப் புகுந்தால், படம் மிரட்டல் போல இருக்கும். ஆனால் மிரட்டலாக இருக்காது. கதை பட்டு நூல் […]

12 பியும் எகிறும் பி பி யும்

This entry is part 23 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

கூட்ட நெரிசலில், பனகல் பார்க் சமீபம் வரும்போது, அதிர்ஷ்டவசமாக, நின்றுகொண்டிருந்த என்னருகில் உட்காந்திருந்தவர், சட்டென்று எழுந்ததில், எனக்கு இடம் கிடைத்தது. அதற்கு முன்னால், முக்கால் மணிநேரம் லிபர்டி நிறுத்தத்தில், 12பிக்காக காத்திருந்த கால் வலிக்கு, இதமாக இருந்தது. பனகல் பார்க் நிறுத்ததில் இறங்கியவர்களோடு ஏறியவர்கள் அதிகம். மிசினில் மாட்டிய கரும்பு போல் கூட்டம் மொத்தமாக நசுக்கப்பட்டது. அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது. “ அய்யோ! அய்யோ ! குரலுக்குச் சொந்தக்காரருக்கு ஒரு 70 வயதிருக்கும். கையில் உடைமைகள் […]

பி.வி.பிரசாதின் “ எப்படி மனசுக்குள் வந்தாய்”

This entry is part 13 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

திரில்லர் படங்கள் இரு வகை. ஒன்று, குற்றமும் குற்றவாளியும் பார்வையாளர்களுக்குத் தெரிந்து விடும். ஆனால் கதாபாத்திரங்களுக்குத் தெரியாது. இரண்டாவது வகையில் பார்வையாளர்களுக்கும் தெரியாது. முதல் வகை எஸ். பாலச்சந்தரின் ‘பொம்மை’. ‘அதே கண்கள்’ இரண்டாவது வகை. எ.ம.வ. முதல் வகை. ஒரு குற்றம் நடந்த பின், கிடைக்கும் தடயங்களை வைத்துக் கொண்டு, அது எப்படி நடந்திருக்கும், யார் செய்திருப்பார்கள் என்று யூகிப்பது ஒரு துப்பறியும் நிபுணரின் மூளை. அதைக் குற்றம் செய்தவனின் குணமாக மாற்றியிருப்பது, இயக்குனரின் புத்திசாலித்தனம். […]

ம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘

This entry is part 20 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

பயணம் ஜூன் இதழில், தேவராஜ் விட்டலன் ‘ வாசிப்பை நேசிப்போம் ‘ என்கிற பகுதியில் தில்லி புத்தகச் சந்தையில் வாங்கிய ‘சேவல் கட்டு’ நாவலை விவரித்திருக்கிறார். நல்ல புத்தகங்களைப் பற்றி படித்தவுடன் ஏற்படும் அற்புத உணர்வை விட அதிர்வுதான் அதிகம் ஏற்பட்டது எனக்கு. சேவல்கட்டு கதை இதுதான். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நடக்கும் கதை. பிரதான பாத்திரங்கள் சேவுகபாண்டியன் என்கிற ஆப்ப நாட்டு ஜமீந்தார். சேவல் சண்டையில் தோற்றுப் போகும் சேவுகப்பாண்டியன், நிறையச் சேவல்களை வளர்த்து, சேவல் […]

சாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.

This entry is part 19 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஆகஸ்டு ஒன்றாம் தேதியன்று, சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலக அரங்கில், இரண்டு அமர்வுகளுடன் நடைபெற்றது மேற்சொன்ன விழா. காலை பத்து மணிக்கு க.நா.சுவின் மாப்பிள்ளையான பாரதி மணி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் துவக்கி வைத்தார்கள். மெல்லிய நகைச்சுவையுடன் எழுதப்பட்ட கட்டுரையை வாசித்தார் மணி. இந்திரா பார்த்தசாரதி தில்லி நினைவலைகளில் மூழ்கினார். முதல் அமர்வில் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறையில் பணி புரியும் தமிழவன் மற்றும் முனைவர் பஞ்சாங்கம் கலந்து கொண்டனர். தமிழவனின் உரை பல தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது. […]