காதல் கோட்டையில் ஆரம்பித்து, மௌனராகத்தில் கொஞ்சம் கலந்து, தேவதாஸ் பாணியில் முடித்து விட வேண்டும். நவீனத்திற்கு லண்டன், மெடிக்கல் காலேஜ், புகழ் பெற்ற டாக்டர் என்று சில மசாலாப் பொடிகளைத் தூவ வேண்டும். டிரம்ஸ் இசையுடன் டிஜிட்டலில் எடுத்து விட்டால் தமிழ் சினிமாவுக்கு ஒரு பேல் பூரி ரெடி. ஜீவா முத்துசாமி ( அனிருத் ) புகழ் பெற்ற சர்ஜன். இந்தியாவே கொண்டாடும் ஜூனியஸ். கூடவே கவிக்கோ என்கிற பெயரில் கவிதைகள் எழுதுபவன். அவன் படித்த மருத்துவக்கல்லூரி, […]
ஒரு கறுப்பு வெள்ளை திரைப்படக்காலத்துக் கதையை எடுத்து, அதேபோல் உருவம் கொண்ட நடிகர், நடிகையைத் தேர்ந்தெடுத்து, கொஞ்சம் வண்ணம் சேர்த்து டிஜிட்டலில் எடுத்தால் அது நவீனப் படமாகிவிடுமா? இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என் மனதில் எழுந்த கேள்வி இதுதான். கதாநாயகன் பிரவீன், ஏ வி எம் ராஜனின் கறுப்பு ஜெராக்ஸ். கதாநாயகி பிரிந்தா, அப்படியே சின்ன வயது புஷ்பலதா. பழைய காலத்து சாராய வியாபாரி ( பாலாசிங் ), குடிகாரர்கள் நிறைந்த கிராமம். இது நடுவே விடலைக் […]
ஒரு சாதாரணக் குடிமகனை ஜெட் லீயாக ஆக்கும் கதைகள் சாகாவரம் பெற்றவை. அப்படி ஒரு கதைதான், தடையறத் தாக்க. இம்மாதிரிப் படங்கள், சரியான திரைக் கதையும், பாத்திரங்களும், சம்பவங்களும், தேர்ந்த நடிகர்களும் சேரும்போது, சூப்பர் டூப்பர் வெற்றியாகின்றன. அப்படி ஒரு வெற்றி பெற்ற படம், சமீபத்திய ‘ நான் மகான் அல்ல ‘ இம்மாதிரிப் படங்களுக்கு, ரசிகனை யோசிக்க விடாமல் செய்யும், பர பர காட்சிகள் முக்கியம். எதிர்பாராத திருப்பங்கள் அவசியம். கடைசியில் நாயகன் வென்றே தீர […]
சிறகு இரவிச்சந்திரன். சினிமாவுக்கான கோணங்களைக் கொண்டு, ஒரு தொலைக்காட்சித் தொடர் எடுத்தால் எப்படியிருக்கும்? இந்தப்படத்தைப் போல் இருக்கும். அப்படி வரும் எண்ணத்தை மனதை விட்டு பிடுங்கி எறிய முற்பட்டாலும் சிவகார்த்திகேயன் அந்த முயற்சியை முறியடித்து விடுகிறார், க்ளோஸப்பில் முகம் காட்டி, டி டி எஸ்ஸில் குரல் காட்டி. ஒரு சராசரிக் கதையைத், தேர்ந்த நடிகர்களே, இன்னொரு தளத்துக்குக் கொண்டு போவார்கள் என்று, திடமாக நம்புபவன் நான். அதே சமயம், ஒரு திறமையான இயக்குனர் பளிச்சிட, தேர்ந்த நடிகர்கள் […]
சிறகு இரவிச்சந்திரன். பசியோடு, மலையாளக்கரையோரம் ஒதுங்கும், தமிழ் பாடும் குருவிக்கு, புட்டும் கடலைக் கறியும் வைத்தால் எப்படியிருக்கும்? பசிக்கு கொஞ்சம் உள்ளே போகும். அடங்கியவுடன் புறந்தள்ளும். இட்லி வடை கிடைக்காதா என்று ஏங்கும். அப்படி இருக்கிறது படம். சந்தோஷ் சிவன், பிரபு தேவா, ப்ருத்விராஜ், ஜெனலியா, வித்யா பாலன். பெத்த பெயர்கள். சிறந்த ஒளிப்பதிவு, சோடை போகாத நடிப்பு. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் தமிழ் மணம். கேரளக் கரை. பதினைந்தாம் நூற்றாண்டுக் […]
யூ டியூப்பில் அருமையான குறும்படங்கள் காணக்கிடைக்கின்றன. நல்ல நடிப்பு, துல்லிய ஒளிப்பதிவு என அமர்க்களப்படுத்துகின்றன அவைகள். சில காதலில் சொதப்பும் ரகம். சில பிரச்சார நெடி. இனி நான் பார்த்த இரண்டு குறும்படங்கள் பற்றிய எனது பார்வை. ஹரியின் “ 1680 “ தினமும் தண்ணியடித்துக்கொண்டு வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் முன்று இளைஞர்கள். அதில் ஒருவனுக்கு காது கேட்காது, ஆனால் சினிமா பைத்தியம். இன்னொருவன் மேலைநாட்டுச் சங்கீதத்துக்கு குத்து நடனம் ஆடுபவன். அவனுக்கு அது மட்டும்தான் தெரியும். […]
முதலில் ஒன்று சொல்லியாக வேண்டும். விமலுக்கு இந்தப் படத்தில் தொள தொள பேண்ட் இல்லை. அழுக்குச் சட்டை இல்லை. சார்லி சாப்ளின் நடை இல்லை. ஆள் மாநிறத்திலிருந்து, சிகப்புக்கு மாறி இருக்கிறார். வரவேற்கத்தக்க மாற்றம். கதாநாயகி நிஷா அகர்வால், காஜல் அகர்வாலின் தங்கை. வனப்பில் அக்கா என்றே சொல்லி விடலாம். அதாவது, அவரை விட இன்னமும் வாளிப்பாக இருக்கிறார். கண்கள் பெருசாக,அக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேற கட் ஆப் மார்க்கை விட கூடுதல் தகுதி இவரிடம். சந்தானம் […]
இப்போதெல்லாம் டிஜிட்டலில் எடுப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. வழக்கு எண்ணை ரெட் 1ல் எடுத்ததாக வேதம் புதிது கண்ணன் சொன்னார். பிலிம்மில் எடுப்பதில் 70 விழுக்காடு ரிசல்ட்தான் வரும் என்று அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 70க்கு 100 என்றால் கசக்குமா என்ன? கருப்பட்டியைக் கேட்பரீஸ் ரேப்பரில் கொடுத்த கதைதான். அப்படிப்பட்ட ஒரு படம்தான் ராட்டினம். தூத்துக்குடி களம். கயிறு விற்பனைக்கடையில் நாயகன். நாயகி துறைமுக அதிகாரியின் மகள். அவளது மாமா பப்ளிக் பிராசிகுயூட்டர். நாயகன் அண்ணன் உள்ளூர் கட்சித் […]
சிறகு இரவிச்சந்திரன். ‘உள்ளத்தை அள்ளித்தா’வுக்குப் பிறகு இன்னொரு வெற்றியைத் தொட்டிருக்கிறார் சு.சி. வெற்றிக்குக் காரணம்? இவரிடம், ஏதோ உலகமகா சினிமா காட்டப்போகிறேன், என்கிற பாசாங்கு எல்லாம் இல்லை. பெரிய நட்சத்திரப் பட்டாளம் இல்லை. எல்லாம் இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை நடிகர்கள், நடிகைகள். வசனம் எழுதிய பத்ரிக்கு நகைச்சுவை நன்றாக வருகிறது. சுந்தருக்கு ஸ்லாப்ஸ்டிக் காமெடி பலம் உண்டு. முகத்தை, அஷ்டகோணல் ஆக்கிக் கொள்ளாமல், இயல்பாக நடிக்க, நடித்தவர்களுக்குத் தெரிகிறது. பிறகென்ன? சூப்பர்டூப்பர் ஹிட் தான். அதிலும் […]
தஞ்சாவூரிலிருந்து 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் சௌந்தரசுகன். ஆசிரியை சுந்தரசரவணன். இதன் வெள்ளிவிழா ஆண்டும், 300வது இதழ் வெளியீட்டு விழாவும் மே மாதம் 5 , 6 தேதிகளில் தஞ்சையில் நடந்தது. 5 அமர்வுகள், ஒன்றரை நாட்கள் கூட்டம், 8 பக்க அழைப்பிதழ் என்று ஏகத்துக்குத் தடபுடல். முதல் அமர்வில் கவிஞர் கிருஷ்ணப்பிரியாவின் “ வெட்கத்தில் நனைகின்ற .. “ என்கிற கவிதைத் தொகுப்பு, அமிர்தம் சூர்யா தலைமையில், நிலாமகள் வெளியிட, நடைபெற்றது. இரண்டாவது அமர்வில் […]