author

பாலாஜி சக்திவேலின் “ வழக்கு எண் 18 / 9

This entry is part 5 of 41 in the series 13 மே 2012

“ என்னண்ணே இந்தப் பொம்பள இவ்ளோ அசிங்க அசிங்கமா பேசுது? “ “ ஆம்பள இல்லாத குடும்பம். ஒத்தப் பொட்டப்புள்ளைய வச்சிக்கிட்டிருக்குது.. பேசலேன்னா ஒன்னிய மாதிரி பசங்க வுட்டு வப்பீங்களா? “ ஒரு ஏழைத்தாயின் பாதுகாப்பு வளையத்தைப் பற்றி, இவ்வளவு தெளிவாக, இதற்கு முன்னால், வேறு ஏதாவது படங்களில் வசனம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. கேட்டவுடன் பொட்டில் அறைவது போலிருந்தது. என்னைப் பொருத்தவரை, பாராட்டுகள் நடிகர்களுக்கு முன்னால், திரைக்கதைக்கும், இயக்கத்துக்கும் போய்ச் சேரவேண்டும். அடுத்தது அறிமுக இசையமைப்பாளர் […]

அகஸ்டோவின் “ அச்சு அசல் “

This entry is part 12 of 40 in the series 6 மே 2012

கார்த்திக் பைன் ஆர்ட்சின் கோடை நாடகவிழாவில் ஞாயிற்றுக்கிழமை (22.4.2011) அன்று அரங்கேறிய நாடகம் “ அச்சு அசல்.” முதலில் ஒரு விசயத்திற்கு அகஸ்டோவைப் பாராட்டியாக வேண்டும். தொழில் ரீதியாக மூக்குக் கண்ணாடிக் கடை வைத்திருப்பவர் அவர். ஆனால் இலக்கிய ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள, அவர் எடுத்துக் கொள்ளும் அக்கறை, அலாதியானது. நாடகம் கொஞ்சம் சமூக நீதிக் கதை கொண்டதுதான். அதைத் தன் பாணியில் ஒரு திரில்லராகப் படைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அகஸ்டோ. வெற்றி […]

ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “

This entry is part 3 of 40 in the series 6 மே 2012

பாராட்ட வேண்டிய விசயம் ஒன்றிருக்கிறது இந்தப் படத்தில்! பண்டி சரோஜ்குமாரின் “ அஸ்தமனம்” படத்திற்குப் பிறகு, இந்தப் படமும் 90 நிமிடம் தான். ஆனால் சினிமாவின் எந்த அத்தியாவசியத்தையும் களைந்து விடவில்லை இதன் இயக்குனர். நான்கு பாட்டுகள், இரண்டு சண்டைகள் எல்லாம் உண்டு இந்த நேரத்திற்குள். சபாஷ்! சூரியா( தருண் ஷத்திரியா) கட்டணக் கொலையாளி. அதனால் பெரும் பணம். கார், பங்களா என்று வசதியாக வாழ்பவன். கூடுதல் தகுதி, அவன் ஒரு அனாதை. கன்னியாகுமரியில் போட்டோ ஸ்டூடியோ […]

ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “

This entry is part 1 of 40 in the series 6 மே 2012

‘ அலைபாயுதே ‘ வின் நவீனப் பிரதியைப் பார்த்தது போலிருக்கிறது. அத்தனை இளமை! இரண்டரை மணிநேரப் படம் போனதே தெரியவில்லை. இன்னொரு மணிரத்னம் in the making! வெல் டன் ஆண்ட்ரூ! கார்த்திக் ( ஷிவ் பண்டிட்) அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவன். மலர் ( மானஸி பரேக் ) என்கிற கருணைமலர் எஸ் ஆர் எம்.. கார்த்திக், படிக்கும் காலத்தில், பழகும், இரண்டு பெண்கள், சோனா, காயத்ரி. முதலாவது மக்கு. இரண்டாவது புத்திசாலி என்று தன்னை […]

விவேக் ராஜகோபாலின் “ குறுக்கு வழியில் ஒரு டிராபிக் ஜாம் “

This entry is part 16 of 28 in the series 29 ஏப்ரல் 2012

மயிலாப்பூரில், இருந்து பல ஆண்டு காலமாக இயங்கி வரும், பாரம்பரியம் மிக்க சபை ‘கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் ‘. ஏப்ரல், மே மாதங்களில், ஒவ்வொரு ஆண்டும், பத்து நாட்களுக்கு மேல், கோடை நாடக விழா நடத்தி, நாடகக் கலையை நசிந்து விடாமல் பாதுகாத்து வருகிறார்கள். பாராட்டுக்கள். 27.04.2012 அன்று மாலை மேடையேறிய நாடகம் தான் தலைப்பில் வரும் நாடகம். நகைச்சுவை நாடகம் என்பதைத், தலைப்பிலேயே உணர்த்தும் இக்குழுவினர்க்கு ஒரு ஷொட்டு. மெட்ரோ கட்டுமானமும் , அதனால்  ஒரு […]

சே.ரா.கோபாலனின் “ மை “

This entry is part 2 of 28 in the series 29 ஏப்ரல் 2012

கத்தரி வெயிலின் கொடுமையைக் கொஞ்சம் நீக்கும், கடல் காற்றை அனுபவித் திருக்கிறீர்களா? அப்படி ஒரு சுகமான அனுபவத்தைக் கொடுத்தது “ மை” படம். ஒரு பொட்டலம் சோறு கிடைக்குமா என்று ஏங்கும் ராப்பிச்சையை, உள்ளே அழைத்து விருந்து படைக்கப்பட்டால், எப்படி உணருவான்? அப்படி உணர்ந்திருப்பான், படம் பார்த்த பதினைந்து ரசிகர்களில் ஒவ்வொருவனும்! சுனாமி சுப்பு என்கிற சுப்பிரமணி, பானுமதி, இருவரும் பால்ய வயது நண்பர்கள். பானு படித்து, சொந்தமாக ஒரு தொலைக்காட்சி சேனல் வைத்திருக்கிறாள். சமூகம் சார்ந்த […]

பவித்திரனின் “ மாட்டுத்தாவணி “

This entry is part 41 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சரத்குமார் நடித்த சூப்பர் படம் ஒன்று ‘சூரியன்.’ அதில் சரத் முதன் முறையாக மொட்டை போட்டிருப்பார். அதோடு பிரபுதேவா பிரபலமாகாத போது சுகன்யாவுடன் ஆடிய ‘ கட்டெறும்பு என்னைக் கடிக்குது ‘ என்ற பாடலும் அதில் தான். ஆனால் அதன் இயக்குனர் யார் தெரியுமா? பவித்திரன்! பல ஆண்டுகள் அஞ்ஞாத வாசம் முடித்து, இப்போது பவித்திரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மாட்டுத்தாவணி. சம்பந்தப்பட்ட மாடு படத்தைப் பார்த்திருந்தால் முக்காடே போட்டிருக்கும்! அவலை நினைத்து உரலை இடிப்பது என்பார்கள். […]

எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “

This entry is part 9 of 44 in the series 22 ஏப்ரல் 2012

ஸ்ரீதரின் “ காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, உத்தரவின்றி உள்ளே வா, கலாட்டா கல்யாணம் “ போன்ற படங்களைப் பார்த்தவரா நீங்கள்? வின்சென்டின் ஒளிப்பதிவு, கோபுவின் நகைச்சுவை வசனங்கள், மெல்லிசை மன்னரின் பாடல்கள், கண்ணதாசனின் வரிகள், சிவாஜி, நாகேஷ், பாலையா, முத்துராமன், ரமாபிரபா, சச்சு போன்ற இந்திய சாப்ளின்களின் நடிப்பு என, நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்ட படங்கள். இப்போது அம்மாதிரி இல்லையே என்று பெருமூச்சு வருகிறதா? கொஞ்சம் நிறுத்தி வையுங்கள், ‘ ஒரு கல் ஒரு […]

ஆலிங்கனம்

This entry is part 8 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சதாசிவ சாஸ்திரிகளுக்கு மேலுக்கு முடியவில்லை. போளூர் கிராமத்தில் இருந்த சொற்ப அந்தணர்களும் பட்டணம் போய் விட்டார்கள் பிழைக்க. மனைவியில்லாத சோகம், வறுமை, யாசிக்காத வைராக்கியம் அவரை இன்னும் படுக்கையில் கிடத்தி விட்டது. இருந்த ஒரே ஓட்டுவீட்டின் வாசற்திண்ணையில் யாராவது கொஞ்சம் அரிசி வைத்து விட்டுப் போவார்கள். அதையும் அவர் தொடமாட்டார்தான். ஆனால் வாழ வேண்டிய மகன் பசியில் துடிப்பானே என்று எண்ணி எடுத்துக் கொள்வார். கொடுப்பது யாரென்று தெரிந்தால் தான் யாசகம். தெரியாத போது இறைவன் கொடுத்ததாக […]

இலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012

This entry is part 42 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ஏப்ரல் மாதம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஓர் இலக்கிய விழா இது. அமைப்பு தொடங்கி 42 ஆண்டுகள் ஆகிவிட்டன எனச் சொல்லும்போதே நிறுவனர் லட்சுமணனுக்கு குரல் கம்மி விட்டது. பாரதி என்பவர் தன் உடல்நிலையைக்கூடப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை அன்று மாலை சென்னையில் நடத்தி வருகிறார். விழா அவரை முதன்மைப்படுத்துவதில்லை என்பது ஒரு குறை. இந்த வருடம் மேடையில் முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன், அவரைப் பற்றிக் குறும்படம் எடுத்த பாரதி கிருஷ்ணகுமார், கவிஞர் வெண்ணிலா, […]