புலம் பெயர்ந்த எழுத்தாளர்களோடு எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களோடு, எனக்கு பரிச்சயம் உண்டு. எம் ஜி ஆர் ஆதரவால், அவரது நகரிலேயே, அவர்கள் பெருமளவில் குடியிருந்தார்கள். எண்பதுகளில் எனது வங்கி கே கே நகர் கிளையில், அவர்கள் கணக்கு வைத்திருந்தார்கள். தலையில் விக் வைத்துக் கொண்டு தமிழ்மகன் என்கிற பெயரை சி டி மகான் என்று மாற்றிக் கொண்ட ஒருவர் எனக்கு, மாசக்கடைசியில் பணப்பற்றாக்குறை காரணமாக யஷிகா கேமராவை இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு விற்றார். […]
மெல் கிப்ஸனின்ன் ‘ அப்போகாலிப்டோ ‘ பார்த்திருக்கிறீர்களா? அடிக்கடி சோனி பிக்ஸில் போடுகிறார்கள். சூப்பர் படம். அருமையான வண்ணங்கள். துல்லியமான ஒளிப்பதிவு. காட்டில் வாழும் இரு ஆதிவாசிக் கூட்டங்களுக்கிடையே நடக்கும் சண்டை. வலிய கூட்டம், எளிய கூட்டத்தைப் பிடித்து, கட்டிப்போட்டு, சித்திரவதை செய்து, கொன்றொழிக்கும் கதை. கொஞ்சம் ஈழச் சாயல். தப்பிக்கும் ஒருவன், அவனது நிறைக்கர்ப்பிணி மனைவி, இரண்டு வயது மகன், துரத்தும் நான்கைந்து பேர். அவன் அவர்களை வென்றெடுத்து, மனைவி, குழந்தையை மீட்பது அப்போகாலிப்டோ. கருணா […]
அறுபதுகளில் வந்த படம், சிலரின் அரிய முயற்சியால் டிஜிட்டலாக்கப்பட்டு, வரவேற்பும் பெற்றிருப்பது ஆச்சர்யம். பிரம்மாண்டமும், துல்லிய வண்ணமும் காரணமாக இருக்கலாம். சிவாஜியைப் பற்றி அறியாத, அப்போது பிறந்திராத இளைய தலைமுறை கூட, அவ்வப்போது மெல்லிய சிரிப்பினை வெளியிடுவது, இது ஒரு திரைக்காவியம் என்றே பறை சாற்றுகிறது. கர்ணன் வெளிவந்த புதிதில் சாந்தி தியேட்டரில் திரையிட்டிருந்தார்கள். பெரிய கட் அவுட்டுகளில், தங்கத் தேர்களில் சிவாஜியும்( கர்ணன்)என் டி ராமாராவும் ( கண்ணன் ) எதிரெதிர் நின்று கொண்டிருக்கும் போஸ், […]
ராம் சரணின் ‘ மகாதீரா ‘ தமிழில் டப்பாகி மாவீரனாகச் சக்கை போடு போட்டதில் குதூகலம் மேலிட சூப்பர் குட் சவுத்திரி ‘ரச்சா’ அரவம் மாட்லாட ரகளை ஆக்கியிருக் கிறார். அவலை நினைத்து உரலை இடித்த கதைதான். இத்தனைக்கும் அவர் மகன் ஜீவாவின் படங்கள் தெலுங்கில் நன்றாகப் போவதாகத் தகவல். சூரியநாராயணன் ( பார்த்திபன் ), அவர் நண்பர் பெருநிலக்காரர் ( நாசர் ) இருவரும் தமக்கிருக்கும் நூறு ஏக்கர் நிலத்தைக் உழுபவர்களுக்கே குத்தகைக்கு விடும் காட்சி […]
எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை சூப்பர். சிற்றிதழ்கள் பால் அவர் கொண்ட ஈடுபாடு விலையில்லாதது. அவரது ‘ அம்மணதேசம் ‘ இப்படி ஒரு வம்புக் கதைதான். ஜெயில் கைதி ஒருவனின் அண்டர்வேர் கிழிந்து விடுகிறது. அவன் வேறு வழியில்லாமல் குடியரசு தினத்தன்று ஏற்றப்பட்ட கொடியை மறுநாள் எடுத்து உள்ளாடையாக பயன்படுத்திக் கொள்கிறான். யாரும் வெளியிட முன்வராத போது நான் சிறகில் வெளியிட்டேன் என்பது இதழுக்குப் பெருமை. இன்றளவும் அவர் என் இதழுக்கு எழுதிவருகிறார் என்பது என்பால் அவர் கொண்ட […]
சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு, புகழ் நட்சத்திரங்களின் படங்கள் மத்தியில் சிக்கி, நசுங்கி, வெளியேறிய படம். முரணாக, படம் சம்பந்தப்பட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்த வெங்காயம்! இயக்குனர் சேரன் அதைத் துடைத்து மறு வெளியீடு செய்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள். காவல் அதிகாரி அன்புமணிக்கும் தமிழுக்கும் காதல். கிராமப்புறங்களில் திடீரெனக் காணாமல் போகும் போலிச்சாமியார்களைக் கண்டுபிடிக்கும் பணி அன்புக்கு. சாமியார்களைக் கடத்த கையாண்டிருக்கும் உத்திகளும் கிராமத்துப் பின்னணியிலேயே. அன்புமணி, கடத்தி கட்டி வைத்திருக்கும் சாமியார்களைக் கண்டுபிடிக்கும் முன்பே, […]
தமிழில் சிறகு இரவிச்சந்திரன் ஜெரமியால் நம்பவே முடியவில்லை. அவனுக்கெதிரே அரபெல்லா உட்கார்ந்திருந்தாள். அவன் கல்யாணம் செய்து கொள்ளப் போகிற பெண். ·பியான்சி! அவர்கள் ரிட்ஸ் ஓட்டலில் உட்கார்ந்திருந்தார்கள். சுற்றி இருந்தவர்களெல்லாம், அவளைப் பார்த்தும், கையசைத்தும், பறக்கும் முத்தங்களை தந்தும் கொண்டிருந்தார்கள். அவள் சொன்னது போல இது அவளுடைய ‘ செட் ‘. அவள் அடிக்கடி இங்கே வந்து பழக்கப்பட்டவளாக இருந்தாள். வழக்கமாக வருபவர்களுக்கு அவளை நன்றாகத் தெரிந்திருந்தது. ஜெரமி அவளை முதலில் ஆஸ்காட் குதிரைப் பந்தய மைதானத்தில் […]
தனுஷ், சுருதிஹாசன், சுந்தர் இவர்கள்தான் அந்த 3. கதைப்படி ராம், ஜனனி, செந்தில். முதலில் படத்தைப் பற்றிய நல்ல விசயங்களை, அவை கொஞ்சம் தான் எனினும் சொல்லிவிடுகிறேன். இப்போதைய படங்களில், பழைய காலம் போல் எந்தப் பின்கதையும் இல்லாத பாத்திரங்கள். இதிலும் அதே அதே. தனுஷ், சுருதி, சுந்தர் – மூவரின் பண்பட்ட நடிப்பு. அப்பழுக்கில்லாத கேமரா கோணங்கள். நல்ல இசை, பாடல்கள். ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு. இவ்வளவு இருக்கிறதே, போதாதா என்று நீங்கள் கேட்பது, கேட்கிறது. […]
இந்தோ சினி அப்ரிசியேசன் போரம் என்கிற அமைப்பு, பல ஆண்டுகளாக, உலகத் திரைப்படங்கள் திரையிடலை, நடத்திக் கொண்டு வருகிறது. சென்னை ருஷ்ய கலாச் சார மையத்துடன் இணைந்து, இந்த வாரம் நடத்திய ஐந்து நாட்கள் திரையிடலில், இந்தியப் பட வரிசையில் காட்டப்பட்ட படம் தான் விண்மீன்கள். தாயின் வயிற்றில் இருக்கும்போது, தொப்புள் கொடி கழுத்தை சுற்றி இறுக்கியதால், போதிய பிராணவாயு உடலில் சில பாகங்களுக்கு போகவில்லை. அதனால் நரேன், மீரா தம்பதியர்க்குப் பிறக்கும் ஜீவா cerebral palsy […]
சுப்ரமணியபுரத்திற்குப் பிறகு, சமுத்திரக்கனியும் சசிகுமாரும் ‘ நாடோடிகள் ‘ படம் எடுக்க முனைந்த போது, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, வாய்ப்பு கொடுத்தவர் மைக்கேல் ராயப்பன். அதே நம்பிக்கையுடன், ஷண்முகராஜை படமெடுக்க அழைத்திருக்கிறார். 174 நாட்கள் நடிப்புப் பயிற்சி, 71 புதுமுகங்கள், முகமே இல்லாத பாட்டு என்று ஏகத்துக்கு விளம்பரம். முத்தங்கள் என்ற தலைப்பு இருப்பதால், கமல் பாராட்டியதாக, படமெடுத்து போஸ்டரில் போட்டுவிட்டார்கள். எல்லாமே உதடு ஒட்டாத, பறக்கும் முத்தங்கள் ஆகும் என்று ராயப்பன், கனவு கூட […]