அட(ய்)யும் சக்கை பிரதமனும் கழிக்கா(த்)த கேரளக்காரன் உண்டோ? சோவின் நாடகமும் நையாண்டியும் களிக்காத தமிழ்ப் பாமரன் உண்டோ? டி.வி. வரதராஜனின் யுனைட்டெட் விஷ¤வல்ஸ் குழு மீண்டும் மேடையேற்றிய நாடகம். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்குப் பிறகு ( 1971 ) மீண்டும் மேடையேற்றுவதால், தற்கால அரசியல் கிண்டல்கள் ஏதும் இருக்குமோ என்கிற நப்பாசையில், வந்த கூட்டம், கடைசியில் ஏமாந்து திரும்பியது. சோ எதையும் மாற்றவில்லை. மாற்றவும் விடவில்லை. வந்தவர்கள் எல்லாம் பெரும்பான்மை ஐம்பது ப்ளஸ். அதனால் பலமுறை கேட்டது […]
வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்வு செய்ததற்காக, இயக்குனரைப் பாராட்ட வேண்டும். இன்னொரு மைனாவாக வேண்டிய படம். மலைப்பாதைகளில் எடுக்கப் பட்டதால், கொஞ்சம் சறுக்கி விட்டது. படத்தில் இன்னொரு வருடும் அம்சம், பிஜ்லி பட்டாசுகள் போல் ஆங்காங்கே தெறித்து விழும் மெல்லிய நகைச்சுவை. இளைஞர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். ஒரு சாதாரண மெட்டை, ஆர்கெஸ்ட்ரேஷனில், இன்னொரு தளத்திற்குக் கொண்டு போக முடியும் என்று, ஏற்கனவே இளையராஜா நிரூபித்து விட்டார் பல பாடல்களில், அவரே பாடி. வாரிசு இன்னொரு முறை […]
தெருவோர ஜூஸ் கடைகளில், நெல்லைப் பழரசம் என்று ஒன்று தருவார்கள். சிகப்பு கலரில், கொழகொழவென்று, பெரிய கண்ணாடி டம்ளரில் இருக்கும் அது. பாயசத்துக்கு முந்திரி போல், நடுவில் ஒரு சில பைன்னாப்பிள் துண்டுகள் பல்லில் சிக்கும். சாப்பிட்டால் கொஞ்ச நேரத்துக்கு ‘ திம் ‘என்று இருக்கும். அப்புறம் கலக்கும். அப்படி இருக்கிறது படம். ‘ காக்க காக்க ‘ வெற்றிக்குப் பிறகு, போலீஸ் என்கவுண்டர் கதைகள், புற்றீசல் போல் வரத் தொடங்கி விட்டன. கௌதம் மேனனே மீண்டும் […]
உயிர்மை மார்ச் இதழில், சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘ மூன்று பெண்கள் ‘ கதை. ஒரு நூறு வருட நம்பிக்கையை முன்வைத்து பின்னப்பட்டிருக்கிறது கதை. அதாவது, குழந்தையின்மை காரணமாக, தத்து கொடுக்கப்படும் பெண் குழந்தைகளுக்கும், குழந்தையில்லை என்பது மையக்கரு. நூறு வருடங்களுக்கு முன், நாயகி அமிர்தாவின் முப்பாட்டனோ அல்லது அதற்கு முந்தைய பாட்டனோ, சாரட் வண்டி ஓட்டும்போது, வேடுவப்பெண்ணின் குழந்தையை, வண்டிச் சக்கரம் ஏற்றிக் கொன்று விடுவதாகவும், அவள் விடுத்த சாபம் ‘ ஏழேழு சென்மத்துக்கும் உனக்கு சந்ததியில்லாமல் […]
அமராவதியில் அஜீத்தை அறிமுகப்படுத்தியவர், இந்தப் படத்தில் பத்து புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மீண்டும் பாலபாரதியின் இசை. கமலும் ரஜினியும் ஆசி வழங்கி இருக்கிறார்கள். நடித்தவர்களெல்லாம், சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகள். எல்லாமே புதுமையாக இருக்கிறதா? ஆனால் புதுமை எல்லாம் இதோடு ஸ்டாப். படத்தில்? 1985 கல்லூரிக்கால நண்பர்கள். பாஷா, தயா, சந்துரு, பாலா, பாண்டி என்பது போன்ற அந்தக் காலகட்ட பெயர்கள். அவர்களின் காதலிகள். ரெயில்வே வேலைக்காக பாடகனாகும் ஆசையை தியாகம் செய்யும் ஒருவன். அவன் ஆசையை ஈடு செய்ய […]
ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட, உலகத் திரைப்படங்களின் திரையிடலில், கொஞ்சம் புரொஜெக்டர் சொதப்பியதால், இம்முறை திரையிடும் முன்பு, ஒரு வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டார்கள். அப்படி ஓட்டிய குறும்படம் பொன். சுதா இயக்கிய, எழுத்தாளர் அழகியபெரியவனின் சிறுகதையான ‘ நடந்த கதை ‘ கீழத்தெரு தலித்துகளால் செருப்பு போட முடியாத அவலம். மேட்டுத்தெரு வாசிகளின் அதிகாரம், அகங்காரம். கதை நாயகன் செருப்பு போட முடியாத வெறுப்பில், கோயில் வாசலில் கிடக்கும் செருப்புகளை, யாரும் பார்க்காத போது லவட்டி, பொட்டல் காட்டில் திசைக்கொன்றாய் […]
சின்ன வயதில் மைடியர் குட்டிச்சாத்தான் பார்த்து ரசித்த இனிய நினைவுகளோடு பார்க்கப் போன படம். கொஞ்சம் வேர்வுல்ப், கொஞ்சம் கிங்காங், எழுபதுகளில் காட்டப்பட்ட கிராமம், பெல் பாட்டம், பியட் கார், சின்ன வயது ஹாரிஸ் ஜெயராஜ் போல ஒருவன், சின்ன வயது மனோபாலா போல ஒருவன், அதீத மேக்கப்புடன் ஒரு நடிகை, மேக்கப்பே இல்லாமல் ஒரு நடிகை, பாக்யராஜ் பாணி பாடல்கள், ஹிட்ச்காக் பின்னணி இசை. இதையெல்லாம் மிக்சியில் போட்டுக் கலக்கினால், மொக்கையாக ஒரு படம் வரும். […]
எம் ஜி சுரேஷை, ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னர், இலக்கியக் கூட்டங்களில் பார்த்துப் பேசிய அனுபவம் எனக்கு உண்டு. அவர் அதிகம் உலகத் திரைப்படங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார். நன்றாக ஊதியம் வரக்கூடிய வங்கி வேலையை விட்டு விட்டு, புத்தகம் எழுதுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் ‘ என்று சற்று விசித்திரமான தலைப்பு கொண்ட புத்தகத்தை, அவர் வெளியிட முயன்று கொண்டிருந்தார். சமீபத்தில் வெளியிடப்பட்ட, இருவாட்சி இலக்கியத் துறைமுகம் பொங்கல் […]
வெயில், அங்காடித்தெரு இயக்குனர். சு.வெங்கடேசனின் கதை. பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கிறது படம். கள்ளர்களையும் காவல்காரர்களையும் மையமாகக் கொண்ட கதை. வேம்பூர், மாத்தூர், மதுரைக் கோட்டை, காவானிகாவல் என்று பழக்கத்தில் இல்லாத பெயர்களில் ஊர்கள். கதை நடைபெறும் காலம், பதினெட்டாம் நூற்றாண்டு. மன்னராட்சிக் காலம். கொம்புலி ( பசுபதி ) கள்ளர்களின் தலைவன். வரிப்புலி ( ஆதி ) காவல்காரனாக இருந்து கள்ளனாக மாறியவன். ராணியின் வைர அட்டிகையை, தனி ஒரு ஆளாக திருடியிருக்கும் வரிப்புலியைத் தேடிக் கண்டுபிடிக்கிறான் […]
நானொன்றும் இசை நிபுணன் இல்லை. எனக்கு சில ராகங்களின் பெயர்கள் தெரியும் அதுவும் பாப்புலரான சினிமாப்பாட்டுகளை வைத்து, பத்திரிக்கை செய்திகளின் அடிப் படையில், அவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறேன். ‘ மன்னவன் வந்தானடி ‘ கல்யாணி என்று படித்ததாக ஞாபகம். பூபாளம் உதயத்திற்கும், முகாரி சோகத்திற்குமான ராகங் கள் என்கிற அளவில் இருக்கிறது எனது இசை அறிவு. சின்ன வயதில் ஒற்றைத் தந்தியில் கொட்டாங்கச்சி பிடிலில் ‘ அன்று ஊமைப் பெண்ணல்லோ ‘ வைத் திரும்பத்திரும்ப வாசித்த ரோட்டோர […]