நான், சவுந்தர், ராமன், ஜானி, இந்த நாலு பேரும் ஒரு கேங்க். எங்களுக்குள் இரண்டு ஒற்றுமைகள். ஒன்று நால்வரும் ஒரே காலேஜ். இன்னொன்று நாங்கள் எல்லோரும் நாகேஷ் வெறியர்கள். அந்த காலத்திலேயே ‘ காதலிக்க நேரமில்லை படத்தை பன்னிரெண்டு தடவை ( இப்போது இருபதைத் தாண்டியிருக்கும்) பார்த்து பரவசமானவர்கள் நாங்கள். இத்தனைக்கும் அது நாகேஷின் முதல் படம். எங்களுக்கு அந்தப் படத்தில் வரும் நாகேஷின் வசனங்கள் ( சித்ராலயா கோபுவின் வசனங்கள் என்றாலும் ) மனப்பாடம். அதே […]
சமீபத்திய செய்தித்தாள் ரிப்போர்ட் சொல்கிறது, நாம் வாங்கும் அரசு பாலில், இந்தியா முழுவதுமான சர்வேயில், குஜராத் மாநிலப் பால்தான் தரத்தில் 99 விழுக்காடு சுத்தமாம். அப்போ நம் ஆவின் பால்? கிட்டத்தட்ட நாலரை சதவிகிதம் கலப்படம். அதாவது 95 சொச்சம் சதவிகிதம் தான் சுத்தம். இத்தனைக்கும் வாங்கும் பாலைத், தரம் பிரித்து வாங்குவதாக, ஆவின் நிர்வாகம் மார் தட்டிக் கொள்கிறது. சரி என்னதான் நடக்கிறது. கறந்த பால் ஆவினுக்கு கொண்டு வரப்பட்டு, அதிலிருக்கும் கொழுப்புச் சத்து நீக்கப்படுகிறது. […]
விருதுநகர் அருகிலிருக்கும், மல்லாங்கிணறு என்கிற கிராமத்திலிருந்து, பல ஆண்டுகளாக வருகிறது இந்த இதழ். இலக்கியம் எங்கோ இருப்பவர்களையெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இந்த இதழ் ஒரு சாட்சி. சிற்றிதழ்கள் தனிமனித முயற்சியிலேயே வெளிவருகின்றன. அதனால் விளம்பரம் எதுவும் வரக்கூடாது என்பதில் இன்னமும் பல இதழ்கள் பிடிவாதமாக இருக்கின்றன. அவர்களுக்கு விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நமது கையில் இப்போது இருக்கும் இதழ், 86வது இதழ். இதன் ஆசிரியர் சுந்தர்ராஜ். அவரே ஒரு அச்சகமும் வைத்திருக்கிறார். […]
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, மருதன் எழுதிய, சிம்மசொப்பனம் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெறும் நாளின் போது, எனக்கு வந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. ஒரு ப்ளாங்க் சிலேட்டாகத்தான் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப அத்தியாயமே பொடனியில் பளேர் என்று அறைகிறது. கியூபாவை ஆக்ரமித்திருக்கும் அமெரிக்க படைகளின் சுங்கச்சாவடிகள்! அவர்களுக்கு முன்னே நிறைய ஜீப்புகள். அதில் ஏராளமான கணினிகள், அதன் தொடர்புடைய பொருட்கள். மொத்தம் 450 கணினிகள். லூசியஸ் வார்க்கர் என்கிற பாதிரியார் அந்தக் குழுவின் […]
ஒளிப்பதிவாளர் மகிபாலன் தேசிய விருது பெற்ற ‘ வேதம் புதிது ‘ கண்ணனுக்குத் தெரிந்தவர். அவருடைய ஓளிப்பதிவில் வந்திருக்கிறது இந்தப் படம். அதனால் அன்பின் அடிப்படையில் நான், கண்ணன், முகமது அலி, சென்னை அண்ணா தியேட்டரில் நேற்று படம் பார்த்தோம். கிட்டத்தட்ட பாதி திரையரங்கு நிறைந்திருந்தது ஆச்சர்யம். இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று நேற்று குடியரசு தினம். விடுமுறை. பொங்கல் பொருட்காட்சிக்கு போக விரும்பாதவர்கள், நேரத்தைச் செலவிட, அங்கு வந்திருக்கலாம். அவர்கள் தேனி மாவட்டக்காரர்களாக இருந்தால், ஊர் […]
குன்றத்தூர் ரோடில் போனீர்களானால் பெரிய பணிச்சேரி என்று ஒரு பகுதி வரும். அந்தப் பகுதியில் போய் வாப்பா கடை என்று கேட்டால் யாரும் காட்டுவார்கள். காதர் பாய் அந்தக் கடையின் சொந்தக்காரர். இமிடேஷன் நகைகளை விற்கும் கடை அது. இப்போது பரவிக் கிடைக்கும், ஒரு கிராம் கோல்ட் கடைகளுக்கு முன்னாலேயே ரோல்ட் கோல்ட் கடைகள் சென்னையில் பிரசித்தம். அப்படி ஒரு கடைதான் காதர் பாயின் கடை. மங்களம் மாமி வாப்பா கடையில்தான் எல்லாவற்றையும் வாங்குவாள். சுற்றியிருக்கும் புர்க்கா […]
புதிய ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டவுடன், பலரும் பலவிதமாகக் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். நமக்கு ஒன்றும் பாதிப்பில்லை.. நாம்தான் வெளியிலேயே போவதில்லையே என்று எண்ணிக் கொண்டேன். சென்ற வாரம் ஒருவழி காரில் போய் விட்டு, போரூர் திரும்ப வேண்டிய கட்டாயம். மயிலாப்பூர் சுற்றிவிட்டு, மந்தைவெளி வந்தால், ஒரே பேருந்தில் திரும்பலாம், காசு மிச்சம் எண்ணிக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் நடந்தேன். போரூருக்கு அந்தப் பகுதியில் இருந்து ஒரே பேருந்து. 54 f. என் அதிர்ஷ்டம் ஒரு பேருந்து நின்று […]
தரணியின் ‘ ஒஸ்தி ‘ க்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை இந்தப் படம். என்ன.. மாதவன் இருப்பதால், படம் கொஞ்சம் பிழைத்துக் கொள்கிறது. மாதவன் திரை உலகை விட்டு விலக நேர்ந்தால், அனுபம் கேர் மாதிரி, யதார்த்த நடிப்பிற்கு ஒரு பள்ளி ஆரம்பிக்கலாம். நிறைய மாணவர்கள் கிடைப்பார்கள் இப்போதிருக்கும் நடிகர்களிடையே.. இனிமேல் பாக்ஸ் ஆபிஸில், பட்டையைக் கிளப்ப, படம் எடுக்க விரும்பும் தோற்ற இயக்குனர்கள், ஆங்கில டிவிடி படங்களைப் பார்க்க வேண்டாம். லிங்குசாமியிடம் போனால் போதும். அவரே […]
கவியோவியத்தமிழன், பல வருடங்களாக, சிற்றிதழ் உலகில் அறியப்பட்டவர். அவ்வப் போது, தன் இலக்கிய தாகத்தின் வெளிப்பாடாக, சில இதழ்களை ஆரம்பிப்பார். அவர் ஆரம்பிக்கும் இதழ்கள் எல்லாமே, அதிர்வு தன்மை கொண்ட பெயர்களைக் கொண்டிருக்கும். பல வருடங்களுக்கு முன் அவர் அப்படி ஆரம்பித்து, நின்று போன இதழ் தான் ‘ மலம் ‘ அழகான கையெழுத்து கொண்ட நவீன ஓவியர் அவர். எல்லா ஓவியர்களுக்கும் அழகான கையெழுத்து இருப்பதில்லை. ஓவியர் ஆதிமுலத்தின் கையெழுத்து அப்படியானது. ஆனால் கவி, தன் […]
சிறகு இரவிச்சந்திரன் நேர்த்தி என்பது இயக்குனர் ஷங்கரின் தவிர்க்க முடியாத ஒரு தன்மை என்பது அவரது முதல் படமான ஜென்டில்மேனிலேயே பார்த்ததுதான். இது இன்னமும் பல பரிமாணங்களில் பட்டை தீட்டப்பட்டு எந்திரனில் வெளிப்பட்டது. அவர் ஒரு இந்திப் படத்தை மறுபடியும் எடுக்க இசைந்துள்ளார் என்ற போது பலரது மனங்களில் எழுந்த ஐயம் இதில் அவரது தனித் தன்மையையோ பிரம்மாண்டத்தையோ நுழைத்து விட்டாரென்றால் படம் சுவைக்காது என்பது தான். திரையுலகில் பலரும் கூட அவர் அப்படிச் செய்து […]