எந்த வேலைக்கும் போகாமல், பகட்டாக உடையணிந்து, ஊரை வலம் வரும் விதார்த். பணத்தேவைக்கு, சிறு சிறு திருட்டுகளைச் செய்து, அக்காவிடம் அடி வாங்குபவர். மூளை சரியில்லாத தங்கை. கோயில் நிலத்தைக்கூட வளைத்துப்போடும் வில்லன். புதுமுகம் சஞ்சிதா, பக்கத்து ஊர் டுடோரியல் மாணவி, விதார்த்தின் காதலி. கொட்டாவி வருகிறதா? பார்த்து பார்த்து புளித்த கதை போல இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? உங்கள் ஊகம் சரிதான். ஆனால் படம் ஏதோ பரவாயில்லை என்று ஆக்குவதற்கு இரண்டு விசயங்கள் பயன்பட்டிருக்கின்றன. ஒன்று, […]
இப்போதுபோல பிரபலம் ஆகாத நிலையிலேயே எஸ்.ராமகிருஷ்ணனை நான் அறிவேன். இதற்கும் கிரியா ஊக்கி பால்நிலவன் தான். அப்போதைய இலக்கிய தேடலில் பல, எனக்கு அறிமுகமில்லாத படைப்பாளிகளை அவர் எனக்கு பரிச்சயப் படுத்தினார். அந்த வரிசையில் வந்தவர்தான் எஸ்.ரா. நாற்பதுகளைக் கடந்து ஐம்பதைத் தொட்டுக்கொண்டிருக்கும் வயதில் இருந்த அவரை நான் பார்த்தபோது பெரிதும் சிலாகிக்கவில்லை. நமக்கு எப்போதுமே ஒரு ஜெயகாந் தன் பிம்பம் முன்னேராக ஓடிக்கொண்டிருக்கும். அதன் வழியாகப் பார்க்கும்போது எதுவும் பளிச்செனப் பதியாது. வழுக்கைத் தலையை மறைக்க […]
சிறகு இரவிச்சந்திரன் ஓவியர் ஆதிமூலத்தின் புகைப்பட அட்டையுடன் வந்திருக்கிறது சுகனின் 296வது இதழ். தஞ்சையிலிருந்து தனியொருவன் முயற்சியாக வந்து கொண்டிருக்கும் இதழ். ஆசிரியர் என்று துணைவியின் பெயர் இருந்தாலும் முழு முயற்சி சுந்தரசரவணன் தான். என்ன பல ஆண்டுகளாக இதழின் பொருட்டே விளிக்கப்படுவதால் அவரும் சுகன் என்றே அழைக்கப்படுகிறார். மற்ற சிற்றிதழ்கள் போலல்லாமல் இது கொஞ்சம் அரசியல் பேசும். ஒரு நிலை எடுத்துக் கொள்ளும். சுகனின் பிடிக்காத பகுதி எனக்கு இது. ஆனால் உரிமை சுகனுக்கே. சிற்றிதழ் […]
ஆட்சி மாறி விட்டதே, அதனால் சென்னையின் மையப்பகுதியில், அண்ணா சாலையில், காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில், இந்த முறை சந்தை இருக்கும் என்று எதிர் பார்த்தேன். பொய்த்து விட்டது. வழக்கமாக டிசம்பர் கடைசி வாரத்தில் ஆரம்பிப்பார்கள். இம்முறை சனவரி ஐந்து. அதே தமிழ் மைய மைதானம். அப்படித்தான் சொன்னார்கள்.. தமிழ் மையம் காஸ்பர் பரிந்துரைப்படி கடந்த ஆட்சியில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக.. சென்னை மைலாப்பூரிலிருந்து இங்கு வருவதே கடினம். என் கதை இன்னமும் சோகம். […]
சென்னையை விட்டு பதினைந்து நாட்கள் போனதில் ராஜபாட்டை, மௌனகுருவைத் தூக்கி விட்டது. இருந்தாலும் விடுவதாயில்லை என்று மல்டிப்ளக்ஸில் தேடி, பார்த்தே விட்டேன். முதலிலேயே பத்திரிக்கை விமர்சனங்கள் நல்ல படம் என்று சொல்லிவிட்டதால் பணத்திற்கு பங்கமில்லை என்று எதிர்பார்ப்புடன் போய் உட்கார்ந்தேன். படத்தின் பின் பாதி கொஞ்சம் போராளி சாயல் இருக்கிறது. அதே மாதிரி கொசு ரீங்காரம் பின்னணி எபெக்டுடன்.. ஆனால் அதோடு ஒற்றுமை ஓவர். சட்டென்று கோபப்படும் கதைநாயகன் அருள்நிதி அதிகம் பேசாதவன். அடிதடி என்று ஆகி […]
. முப்பது வருடங்களுக்கு மேலாக கடலூரிலிருந்து வந்து கொண்டிருக்கும் சிற்றிதழ். சுப்பிரமணியம் என்கிற தமிழாசிரியரின் ஆர்வத்தால் கொணரப்படும் இதழ். அவர் வளவ. துரையன் என்கிற புனைப்பெயரில் எழுதுகிறார். சிறகு ஆரம்பித்த காலத்தில் இருந்து சங்குக்கும் எனக்கும் தொடர்பு உண்டு என்றாலும் பெரிதாக என்னை ஈர்க்க வில்லை இதழ் என்று தான் சொல்ல வேண்டும். வாசகனின் சுவாரஸ்யத்தைக் கூட்டாத வடிவமைப்பு, நெருக்கமான அச்சிட்ட வரிகள், ஒரு படைப்புக்கும் இன்னொரு படைப்புக்கும் இல்லாத இடைவெளி என்று நெருக்கடியாக வெளிவந்து கொண்டிருந்தது […]
சிறகு இரவிச்சந்திரன். பட்டினப்பாக்கத்திலிருந்து கோட்டூர்புரம் செல்லும் போது பேருந்தில் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலைக் பலமுறை கடந்திருக்கிறான். உள்ளே எப்படி இருக்கும் என்கிற எண்ணம் கூட அவனுக்கு வந்ததில்லை. அதெல்லாம் அவன் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவன் பெயர் தனசேகர். தான்யா என்கிற புனைப்பெயரில் ஏதாவது கவிதை எழுதுவான். ஏதாவது ஒரு சிற்றிதழ் அதை வெளியிடும். தனா பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒன்றில் குடியிருக்கிறான். அது கட்டப்படும்போது அப்போதைய ஆளுங்கட்சியின் வட்டம் ஒன்று பினாமி […]
காலெட் ஹொசைனியின் முதல் நாவலான ‘ தி கைட் ரன்னர் ‘ பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அட என்ன ஆச்சர்யம்.. நேற்று சோனி பிக்ஸில் போட்டு விட்டார்கள். ஒரு அற்புதமான நாவலை படிக்கும்போது ஏற்படும் வலி பல சமயம் அதை ஒரு திரைப் படமாகப் பார்க்கும்போது கிடைப்பதில்லை. சுஜாதாவின் ப்ரியாவிற்கு அப்படித்தான் ஆயிற்று. ஹீரோயிஸம் என்று போய் சொதப்பி விட்டார்கள். கைட் ரன்னரும் அந்த லட்சணத்தில்தான் இருக்கும் […]
பா வரிசை படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் பீம்சிங்கின் மகன் எடிட்டர் பி.லெனின். பீம்சிங் அவர்களே எடிட்டராகத்தான் திரை வாழ்வுதனை ஆரம்பித்திருக்கிறார். எடிட்டர் லெனினன நான் சந்தித்தது முதலில் எடிட்டராகத்தான். அப்போது தான் அறிந்தேன் அவர் ஒரு புகழ் பெற்ற எடிட்டராக இருந்தாலும் எல்லாப் படங்களையும் அவர் எடிட் செய்வதில்லை என்று. முதலில் அவரிடம் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. புகழ் பெற்ற எடிட்டரின் மகன். அவரே அன்றைய முன்னணி நடிகர்களின் படங்களை எடிட் […]
சுசீந்தரனின் அடையாளம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. முதல் படத்திலேயே கவனம் பெற்றவர் என்பதை விட, அடுத்தடுத்த படங்களில் எந்த பாணியிலும் சிக்கிக் கொள்ளாதது தான் அவரது அடையாளம் எனலாம். வெண்ணிலா கபடிக் குழு என கிராமப் பின்னணியில் படம் பண்ணியவர், உடனே நகரம், வன்முறை என தான் மகான் அல்ல என நிருபித்தார். அடுத்தது ஆச்சர்யம்! அழகர்சாமியின் குதிரை.. விக்ரமை வைத்து மசாலாப் படம் என அறிவித்த போது ‘ ஏன் இவருக்கு இந்த […]