author

சுந்தரி காண்டம் 8. மென்பொருள் சுந்தரி பத்மலோசனி

This entry is part 22 of 23 in the series 4 அக்டோபர் 2015

0 ஒரு அறுபது வருடங்களுக்கு முன்னர் மாம்பலம் என்றழைக்கப்பட்டதெல்லாம் இப்போது பழைய மாம்பலம் என்று அழைக்கப்படும் மேற்கு மாம்பலம்தான். இன்று ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் செய்யும் உஸ்மான் சாலை அப்போது நாய் நரிகள் ஓடும் புதர் காடாக இருந்ததாக ஏரியா பெருசுகள் சொல்லக் கேள்வி. ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன் ஓரளவு முன்னேற்றம் வந்து விட்டது தி. நகருக்கு. புதிதாக பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின் சந்தடிகள் கூட ஆரம்பித்தன. மேடலி சாலையில் இருந்து […]

மாயா

This entry is part 19 of 22 in the series 27 செப்டம்பர் 2015

0 மாயவனத்தில் மடிப்பிள்ளையை தேடி அலையும் ஆவித்தாயின் கதை! அப்சரா நடிப்பின் மீது பேராவல் கொண்ட துணை நடிகை! அவள் கருவுற்றது, தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்று வாதம் செய்து, கருவை கலைக்க அப்சரா மறுப்பதால், விலகுகிறான் அவளது கணவன் அர்ஜுன். மீரா எனும் பெண் குழந்தையுடன், தனியே திரைப்படத் துறையில் போராடிக் கொண்டிருக்கிறாள் அப்சரா! 27 வருடங்களுக்கு முன் மாயவனம் காட்டில் கொலை செய்யப்படும் மாயா எனும் மனநோயாளி, தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையைத் தேடி, […]

சுந்தரி காண்டம். 7 . ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி

This entry is part 20 of 22 in the series 27 செப்டம்பர் 2015

0 மேடலி தெரு வாசிகள் ஒரு வினோதக் கலவையானவர்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கம். கொஞ்சம் மேட்டுக்குடி, கொஞ்சம் வறுமைக்கோட்டுக்கு வெகு கீழே. அதனால் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையில் ஒன்றிரண்டு சேட்டுக் கடைகள் இருந்தன. முன்னாலால் சேட் பன்னாலால் சேட் என்று பெயர் பலகைகள் சொல்லும். “ அரைச் சவரத்த வாங்கிக்கினு அம்பது ரூபா நீட்டறான் சேட்டு “ “ யாரு முன்னாலா பன்னாலாலா? “ “ எல்லாம் அந்த பன்னாடை லால்தான் “ வறுமை […]

சுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி

This entry is part 5 of 24 in the series 13 செப்டம்பர் 2015

சுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி ரெட்டியாரின் ஒண்டுக்குடித்தன வீடுகளுக்கு முன்வீடு யாதவர்கள் வீடு. பசு மாடுகளும் எருமை மாடுகளும் வைத்து அமோகமாகப் பால் வியாபாரம் நடந்த காலம் அது. அப்போது அரசு பால் பண்ணையிலிருந்து கண்ணாடி பாட்டில்களில் பால் வரும். நீல/சிகப்பு கோடு போட்ட தகடு மூடி வைத்து பால் நிரப்பப் பட்டிருக்கும். தகர மூடிகளை எடைக்கு வாங்கிக் கொள்ள பழைய தகர வியாபாரி காத்திருப்பார். ஆனாலும் கறந்த மாட்டுப்பாலின் மவுசு போகாத காலம் […]

யட்சன் – திரை விமர்சனம்

This entry is part 20 of 24 in the series 13 செப்டம்பர் 2015

– சிறகு இரவிச்சந்திரன் 0 ஒரு ஆக்ஷன் கதையை காமெடி கலர் பொடி தூவி கலைந்த ரங்கோலி ஆக்கியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். “ தனி ஒருவன்” பரபரப்பை எதிர்பார்த்து போகும் ரசிகனுக்கு ஏமாற்றமே மிஞ்சும். தொடராக வரவேற்பை பெற்ற, சுபாவின் விகடன் கதை, வீணடிக்கப்பட்டிருக்கிறது! கொலைக் கும்பல் துரத்தும் சின்னா; சினிமா ஆசை துரத்தும் கார்த்திக். இருவரும் இடம் மாறினால் ஏற்படும் குழப்பமே கதை. கொடூர தாதாக்கள் காமெடி பீசாக வலம் வருவது குமட்டுகிறது. கார்த்திக் பாத்திரத்திற்கு […]

சுந்தரி காண்டம் 4. ஜதி தாள சுந்தரி

This entry is part 7 of 27 in the series 6 செப்டம்பர் 2015

சிறகு இரவிச்சந்திரன். 0 பதினாறு குடித்தனங்களில் பக்க வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வீடு ஒன்று உண்டென்றால் அது கமலா டீச்சர் வீடுதான். கமலா டீச்சர் ஒல்லியாக இருப்பாள். சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். ஒல்லி உடம்பு அதை இன்னும் கூடுதல் உயரமாகக் காட்டியது. கமலா டீச்சர் கல்யாணம் ஆகாத முதிர்க் கன்னி. கிட்டத்தட்ட நாற்பது வயதைக் கடந்து கொண்டிருப்பவர். சாமுத்திரிகா லட்சணங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லும் எதையும் அவளிடம் பார்க்க முடியாது. கொஞ்சம் களையான முகத்தைக் கூட […]

விஜய் சித்திரம் – மரி

This entry is part 11 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

  திண்ணை இணைய இதழில் நான் சிலாகித்து கட்டுரையாக எழுதிய பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ தாய் செல்வத்தின் இயக்கத்தில் சனிக்கிழமை (29.8.2015) விஜய் சித்திரத்தில் ‘மரி’ என்கிற தலைப்பில் இரண்டு மணி நேர படமாகக் காட்டப்பட்டது. கதை இதுதான்! புருசன் ஓடிப்போனபின், கடன் கொடுத்த எபினேசரே வாழ்வளிக்க முன் வர, அதை ஏற்றுக் கொள்கிறாள் அற்புத மேரி என்கிற மரியின் அம்மா. எபினேசர் மூலம் அவளுக்கு சேவியர் என்கிற மகனும் பிறக்கிறான். 18 […]

சுந்தரி காண்டம் 3. வித்யா ரூபிணி சரஸ்வதி

This entry is part 11 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

சிறகு இரவிச்சந்திரன் 0சுந்தரி காண்டம் 3. வித்யா ரூபிணி சரஸ்வதி வீணை அம்மாளின் இன்னொரு பெண் வித்யா. பத்மாவின் நடவடிக்கைகள் பிடிக்காததாலோ என்னமோ, அந்த அம்மாள் அவளை கொஞ்சம் கட்டுப்பெட்டியாக வளர்த்தாள். பள்ளிக்கூட நாட்கள் முதலே அவள் படிப்பு படிப்பு என்றே இருந்தாள். அதிக படிப்பினால் பள்ளி இறுதியாண்டிலேயே அவள் புட்டி அதாவது கண்ணாடி போட ஆரம்பித்து விட்டாள். சாட்டை போல முடி இருக்கும் அவளுக்கு. அதுவும் அடர்த்தியாக. ஆனால் அதை அவிழ்த்து விட்டு யாரும் பார்த்ததில்லை. […]

திரை விமர்சனம் இது என்ன மாயம்

This entry is part 14 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 செட்டப் காதல் ஃப்ளேர் அப் ஆகும் கதை! ஆங்கில நாடகங்களில் நடித்து, போணியாகாமல், காதலர்களுக்கு திரைக்கதை எழுதி, இயக்கி வெற்றி பெறச் செய்யும், நிறுவனத்தை ஆரம்பிக்கிறான் அருண். ப்ரேக் அப் ஆன பாய்ஸை, தோற்றம் மாற்றி, நவீனமாக்கி, சில தருணங்களை கவிதையாக்கி, காதலியுடன் சேர வைப்பது தான் அவனது ஐடியா! சினிமா மழை, புயல், போலி ரவுடிகளுடன் சண்டை என ஜாலியாக முன்னேறுகிறது அவனது நிறுவனம். கோடிசுவரன் சந்தோஷ் காதலிக்கும் மாயாவை பார்த்தவுடன், […]

சுந்தரி காண்டம் ( தொடர் கதைகள் ) 2. திரிலோக சுந்தரி

This entry is part 4 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

வீணை வாசிக்கும் யானைக் கை அம்மாள் ஒருத்தி ஒண்டுக் குடித்தன வீட்டில் இருந்தாள். கொஞ்சம் முரட்டுத்தனமான முகம். அம்மை வார்த்தது போல் மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படும். அவளுக்கு இரண்டு பெண்கள். அவர்கள் இருவரும் ஒல்லியாக குச்சிபோல் இருந்தது ஆச்சர்யம். யானைக் கை அம்மாள் கொஞ்சம் தாட்டியானவள். முதல் மாடியில் குடியிருந்த அவர்கள் குடும்பம் எதற்கும் அதிகமாக இறங்கி வராது. சாயங்கால வேளைகளில் வீணை கற்றுக்கொள்ள பெண்டுகள் அங்கு குழுமும். வீணை சப்தம் மெலிதாகக் கேட்கும். கடைக்குப் […]